முளித் தீவு
Jump to navigation
Jump to search
| புவியியல் | |
|---|---|
| பரப்பளவு | 0.1288 km2 (0.0497 sq mi) |
| நிர்வாகம் | |
இந்தியா | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| வட்டம் | இராமேசுவரம் |
முளித் தீவு (Muli Tivu or Mulli Island) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
அமைவிடம்
இத்தீவானது புதுமடத்தில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதில் சுண்ணாம்புக் கல் படிவங்கள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் இங்கு சுண்ணாம்புக் கல் வெட்டியெடுக்கபட்டு வந்தது.[1]
மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[2]