மூவல்லைலமீன்
Jump to navigation
Jump to search
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 102-70-5 | |
| பண்புகள் | |
| C9H15N | |
| வாய்ப்பாட்டு எடை | 137.23 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.809 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 155.5 °C (311.9 °F; 428.6 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மூவல்லைலமீன் (Triallylamine) N(CH2CH=CH2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இது அமோனியாவின் நெடியைக் கொண்டுள்ளது. ஒரு மூவிணைய அமீனும்மூன்று ஆல்க்கீன் குழுக்களும் இச்சேர்மத்தில் இடம்பெற்றுள்ளன. அல்லைல் குளோரைடுடன் அமோனியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மூவல்லைலமீன் உருவாகிறது. மோனோ அல்லைலமீன், ஈரல்லைலமீன் போன்றவையும் இதே தயாரிப்பு முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன.[1]
அல்லைலமீன்கள் குறிப்பாக பலவீனமான α-CH பிணைப்புகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பிணைப்பாற்றல் 80 கிலோகலோரி/மோல் என்ற அளவில் உள்ளன.[2]
தொடர்புடைய சேர்மம்
மேற்கோள்கள்
- ↑ Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Amines, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a02_001
- ↑ Dombrowski, G. W.; Dinnocenzo, J. P.; Farid, S.; Goodman, J. L.; Gould, I. R. (1999). "Α-C−H Bond Dissociation Energies of Some Tertiary Amines". The Journal of Organic Chemistry 64 (2): 427–431. doi:10.1021/JO9813843.