மேகா மித்தல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மேகா மித்தல்
Megha Mittal
பிறப்புமேகா படோடியா
20 நவம்பர் 1976 (1976-11-20) (அகவை 49)
படித்த கல்வி நிறுவனங்கள்பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி
வாழ்க்கைத்
துணை
ஆதித்யா மிட்டல்

மேகா மிட்டல் (Megha Mittal) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்புத் தொழில் முனைவோர் ஆவார். 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் கொல்கத்தாவில் பிறந்தார். செருமானிய ஆடை வடிவமைப்பு ஆடம்பர நிறுவனமான 'எசுக்காடா'வின் முன்னாள் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பதவி வகித்தவராக அறியப்படுகிறார்.[1]

மேகா மிட்டல், நூறு கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்ட இந்தியத் தொழிலதிபரான இலட்சுமி மிட்டலின் மருமகள் ஆவார்.[2]

2020 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல், இவர் அமெரிக்காவிலுள்ள வார்டன் பள்ளியின் ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினராக உள்ளார்.[3] கணவர் ஆதித்யா மிட்டலுடன் சேர்ந்து, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளிலும் குழந்தை நலம் சார்ந்த தொண்டுப் பணிகளுக்குத் தீவிரமாக நன்கொடைகளை வழங்கி வருகின்றார்.[4]

கல்வி மற்றும் தொழில்

மேகா மிட்டல், ஐதராபாத்து நகரத்தைச் சேர்ந்த மகேந்திர குமார் படோடியாவின் மகளாவார்.[5] தனது பள்ளிப் படிப்பை இவர் ஐதராபாத்திலுள்ள பொதுப் பள்ளியில் நிறைவு செய்தார்.[6]

1997-ஆம் ஆண்டில், வார்டன் வணிகப் பள்ளியிலிருந்து நிதியியலைச் சிறப்புப் பாடமாகக் கொண்ட பொருளாதார இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து, கோல்ட்மேன் சாக்சு எனும் முதலீட்டு வங்கியில், அதன் ஆராய்ச்சித் துறையில் ஓர் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். 2003-ஆம் ஆண்டில், இலண்டனில் உள்ள இன்ச்பால்ட்டு வடிவமைப்புப் பள்ளியில் கட்டிடக்கலை சார்ந்த உட்புற வடிவமைப்புத் துறையில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[7] கோல்ட்மேன் சாக்சில் ஓராண்டு பணியாற்றிய பிறகு, மிட்டல் அங்கிருந்து விலகினார்.[8]

2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் எசுக்கடா நிறுவனத்தை விலைக்கு வாங்கி, அந்நிறுவனத்தை ஒரு நவீன ஆடம்பர மற்றும் வாழ்க்கைமுறை வணிகக் குறியீடாகப் புதுப்பித்தார்.[9][10]

மேற்கோள்கள்

  1. "Escada Corporate 2011". Archived from the original on 20 January 2011. Retrieved 9 January 2011.
  2. "Board of Advisors". Wharton Executive Boards (in அமெரிக்க ஆங்கிலம்).
  3. "Board of Advisors". Wharton Executive Boards (in அமெரிக்க ஆங்கிலம்).
  4. Editor, Sophie Goodchild, Health (2012-04-12). "Mittals' £15m gift to Great Ormond Street is a record". Evening Standard (in ஆங்கிலம்). Retrieved 2022-08-04. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. "'Lakshmi for the world, Niwas for us". The Economic Times. 27 June 2006.
  6. "Meet daughter-in-law of Indian billionaire with Rs 1,24,280 crore net worth, she's ex-analyst, fashion entrepreneur" (in en). DNA India. https://www.dnaindia.com/business/report-meet-megha-mittal-daughter-in-law-of-indian-billionaire-with-rs-124280-cr-net-worth-fashion-entrepreneur-3066158. 
  7. Kuehnen, Eva (6 November 2009). "Megha shows Mittal family steel in fashion coup". Reuters India. http://in.reuters.com/article/topNews/idINIndia-43753220091106?sp=true. பார்த்த நாள்: 15 April 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. Comstock, Courtney (18 February 2011). "A 34-Year Old Billionaire Heiress Who Used To Work For Goldman Just Bought Escada". Business Insider. Retrieved 10 April 2020.
  9. Kuehnen, Eva (5 November 2009). "Megha Mittal to buy luxury fashion house Escada". Reuters. https://www.reuters.com/article/idUSTRE5A44J820091105. பார்த்த நாள்: 15 April 2010. 
  10. Odell, Amy (6 November 2009). "Escada Sold to 33-Year-Old Megha Mittal". New York Magazine. https://nymag.com/daily/fashion/2009/11/escada_sold_to_33-year-old_meg.html. பார்த்த நாள்: 15 April 2010. 
"https://tamilar.wiki/w/index.php?title=மேகா_மித்தல்&oldid=475380" இலிருந்து மீள்விக்கப்பட்டது