மேக்னதூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மேக்னதூர் (Magnadur) என்பது மினுமினுக்கும் பேரியம் பெரைட்டு ஆகும். குறிப்பாக BaFe12O19 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தலாம். திசை மாறுபாட்டுப்பண்பு கொண்ட வடிவத்தில் இச்சேர்மம் உள்ளது.[1] நிரந்தர காந்தங்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேக்னதூரை முல்லார்டு என்ற பிரித்தானிய நிறுவனம் கண்டுபிடித்தது. ஆரம்பத்தில் குறிப்பாக கேத்தோடு-கதிர் குழாய்களில் குவிய வளையங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. மேக்னதூர் காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை நன்கு தக்கவைத்துக்கொள்கின்றன.[2][3] இவை பெரும்பாலும் கல்வியில் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா. பெரிய முகங்களில் முனைவு கொண்ட தகடுகள். மேக்னதூரை நேர்மின்னோட்ட மோட்டார்களிலும் பயன்படுத்தலாம்.[4]

இயற்பியல் பண்புகள்

  • வெளிப்புற காந்தப்புலம் நீக்கப்பட்ட பிறகும், காந்தப் பொருளில் நிலைத்திருக்கும் காந்தத்தன்மை அளவு எஞ்சிய காந்தப்புலம் எனப்படுகிறது. மேக்னதூரின் இந்த அளவு 0.9 டி ஆகும்.
  • காந்தப் பொருளின் காந்தத்தன்மையை முழுமையாக நீக்கி, அதைச் சுழியாக்குவதற்கு தேவைப்படும் எதிர் காந்தப்புலத்தின் அளவு காந்த நீக்குத்திறன் எனப்படும். மேக்னதூரின் இந்த அளவு 110 கிலோ ஆம்பியர்.மீட்டர் ஆகும்.
  • காந்தம் சேமிக்கக்கூடிய அல்லது வெளிப்படுத்தக்கூடிய மிக உயர்ந்த காந்த ஆற்றல் அளவு அதிகபட்ச ஆற்றல் பெருக்கம் எனப்படுகிறது. மேக்னதூரின் இந்த அளவு 86 கிலோ ஆம்பியர்-1 அளவில் 20 கிலோயூல்மீட்டர்-3 ஆகும்.

மேற்கோள்கள்

  1. Ellis, Hendrina; Trust, Nuffield-Chelsea Curriculum (1984). Book of Data. Nuffield-Chelsea Curriculumn Trust. p. 132. ISBN 0-582-35448-X.
  2. "Play with magnets". iop.org.
  3. Wenham, Martin W. (18 November 2004). Understanding Primary Science: Ideas, Concepts and Explanations. SAGE Publications Ltd. p. 234. ISBN 1412901634.
  4. Magnadur Magnets for Direct Current Motors. Mullard Ltd. 31 December 1970. ISBN 0901232106.
"https://tamilar.wiki/w/index.php?title=மேக்னதூர்&oldid=475448" இலிருந்து மீள்விக்கப்பட்டது