மேலானூர்
Jump to navigation
Jump to search
மேலானூர் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 636 902 |
மேலானூர் (Melanur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் மோபிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும், அரூருரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'31.5"N 78°31'02.5"E[1]
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தக் கிராமத்தில் 58 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 217 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 105 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 112 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.76% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.