மையற்கோமான்
Jump to navigation
Jump to search
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனைப் பகைவர்கள் தாக்க வந்தபோது அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யாவிட்டால் என் நிலை இன்னதாகட்டும் என வஞ்சினம் கூறும்போது தனக்குக் கண்போல் நண்பர்களாக இருந்தவர்களைப் பிரிந்து துன்புறுவேனாகுக என்று குறிப்பிடுகிறான்.[1]
அப்போது அவன் குறிப்பிடும் அவனது நண்பர்கள் ஆறு பேர்.
- வையை வைப்பின் மையற்கோமான்
- மாவன்
- மன்னெயிலாந்தை
- உரைசால் அந்துவஞ்சாத்தன் (புலவர்)
- ஆதனழிசி
- இயக்கன்
என்போர்
இவர்களில் மையற்கோமான் என்பவன் ‘மலிபுகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் பொய்யா யாணர் மையற்கோமான்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளான். எனவே இவன் வையை ஆறு பாயும் மையல் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்டவன் எனத் தெரிகிறது.
அடிக்குறிப்பு
- ↑ புறநானூறு 71