மொயோன் மக்கள்
| படிமம்:"Moyon" written in Meitei script.jpg மெய்தி எழுத்துமுறையில் எழுதப்பட்ட "மொயோன்" | |
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 2,516 approx,[1] மணிப்பூர் | |
| மொழி(கள்) | |
| மொயோன் மொழி முதல் மொழி மெய்தி மொழி இரண்டாவது மொழி[2] | |
| சமயங்கள் | |
| கிருத்துவம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| மெய்தி மக்கள், மொன்சாங் மக்கள், நாகா மக்கள் |
மொயோன் மக்கள் (Moyon people) என்பவர்கள் திபெத்திய-பர்மா இனக்குழுவினர் ஆவர்கள். இவர்கள் புசூர் மக்கள் எனவும், நாகா மக்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இம்மக்கள் பெரும்பாலும் வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரிலும், மியான்மரின் சாகைங் பகுதியிலும் வசித்து வருகின்றனர். மொயோன்கள், மொன்சாங் நாகாக்களுடன் மூதாதையர்கள் ஆவார்கள். மொயோன்களின் தோற்றத்தை மொய்ராங் இராச்சியத்தின் பண்டைய காலத்திற்கு முந்தையதாகக் கண்டறியலாம். இவர்கள் சமகாலத்தவர்கள் என்பதால், மெய்திகளால் நீண்ட முடி அரசன் என்றும் அழைக்கப்படும் மொயோன் அரசர் "கூர்காம்" பற்றிய பதிவு மெய்தி வரலாற்றுப் பதிவுகளில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குங்சூர், மொயோன்களுக்கு ஒரு முக்கியமான இடமாகும். இவர்கள் இந்தியாவால் பட்டியல் பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளனர்.[3] இவர்கள் மெய்தி மொழியைத் தங்கள் இரண்டாவது மொழியாக பயன்படுத்தி வருகின்றனர்.[4]
References
- ↑ "Census of India 2011". MHA, Govt of India.
- ↑ "Meitei | Ethnologue". [Ethnologue] (in ஆங்கிலம்). Retrieved 2023-05-03.
- ↑ "1THE CONSTITUTION (SCHEDULED TRIBES)". Archived from the original on 2017-09-20. Retrieved 2016-07-31.
- ↑ "Meitei | Ethnologue". [Ethnologue] (in ஆங்கிலம்). Retrieved 2023-05-03.