மொரிசியசில் தமிழ் கல்வி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மொரிசியத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமது மொழிப் பின்புலம் இழந்துவிட்டார்கள். அரச கொள்கை, தாயகத்தோடு தொடர்பாடல் இல்லாமை, பொருளாதாரம், சமூக சூழ்நிலைகள் எனப் பல காரணங்கள் உள்ளன. எனினும் ஒரு சிறுபான்மையினர் தமிழ் மொழிக் கல்வியில் ஈடுபாடு காண்பிக்கிறார்கள். தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கவும், தமிழ் மொழியில் பட்டய, இளங்கலை, ஆசிரியப் பயிற்சி பெறவும் மொரிசியசில் வாய்ப்புக்கள் உள்ளன.

தொடக்க கல்வி

தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க மொரிசியசில் வாய்ப்புக்கள் உண்டு. தமிழ் கற்க 10 மாணவர்கள் முன்வந்தால், அவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஒழுங்கு செய்து தரப்படுவார். தமிழ், ஆறு ஆண்டுகள் வரையிலான தொடக்கக் கல்விப் பாடத்திட்டத்தில் மட்டும் உள்ளது.[1]

உயர் கல்வி

மொரிசியசில் தமிழில் பட்டப்படிப்பு பெறலாம். மொரிசியசு பல்கலைக்கழகத்தில் தமிழ் இளங்கலைப் படிப்புப் பெறலாம்.[2]மேலும், தமிழ் ஆசிரியர் பயிற்சியும் பெறலாம்.

மொரிசியசு தமிழ்ப் பண்பாட்டு நடுவத்தின் அறக்கட்டளை

மொரிசியசு தமிழ்ப் பண்பாட்டு நடுவத்தின் அறக்கட்டளை தமிழ் மொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கிறது. இது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் ஊடாக இணைய வழி தமிழ்க் கல்விக்கு உதவி செய்கிறது.

தமிழக அரசின் உதவி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், மொரிசியசின் மகாத்மா காந்தி மையமும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள உள்ளன.

பள்ளிகள்

  • சி. இலக்குவனார் தமிழ்ப் பள்ளி

மேற்கோள்கள்

  1. "மொரிசியத் தமிழர் வரலாறு - 'பத்திரிக்கை', மொரிசியத் தமிழ் இதழ்" (PDF). Archived from the original (PDF) on 2015-02-16. பார்க்கப்பட்ட நாள் 2014-11-21.
  2. http://www.uom.ac.mu/programmes/Courses/MGI/YR2011/Undergraduate/PDF/GI308.pdf[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மொரிசியசில்_தமிழ்_கல்வி&oldid=26259" இருந்து மீள்விக்கப்பட்டது