மோசிகொற்றன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மோசி(க்)கொற்றன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 377.

மோசிக்கொற்றன் என்று இவரது பெயர் அமைந்திருந்தால் மோசி என்பது ஊரைக் குறிக்கும். இவரது பெயர் மோசிகொற்றன் என்று இடையில் ஒன்று மிகாமல் அமைந்துள்ளதால் மோசி என்பது தந்தையின் பெயர்.

பாடல் சொல்லும் செய்தி

திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் நீட்டித்தால் தலைவி தாங்கமாட்டாள் என்று கவலைப்படும் தோழிக்குத் தலைவி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

நாடன் அறிந்துகொள்ள முடியாத பண்புடையவன். அவனோடு எனக்கு நட்பு. அது சிறிய நட்புதான் என்றாலும் நல்ல நட்பு. அவன் திருமணம் செய்துகொள்ளக் காலம் கடத்துவதால் என் கண்ணின் நலம் தொலைந்துவிட்டது. அத்துடன் வளையல்களும் தோளிலிருந்து நழுவுகின்றன. அதற்கு மேலே நான் இருக்கும் இடமும், அவர் இருக்கும் இடமும் வேறு வேறாய் உள்ளன. வேறு வழி இல்லை. தாங்கிக்கொள்ள வேண்டியதுதான். - என்கிறாள் தலைவி.

"https://tamilar.wiki/index.php?title=மோசிகொற்றன்&oldid=12712" இருந்து மீள்விக்கப்பட்டது