மோர் குழம்பு


மோர்க் குழம்பு (Mor Kuzhambu) என்பது கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பொதுவாக தயாரிக்கப்படும் ஓர் உணவு வகையாகும். கேரளத்தில் இது மோர் கறி எனப்படுகிறது. இது ஒரு திரவக் குழம்பு செய்முறையாகும். வேகவைத்த அரிசி சோற்றுடனும், பருப்பு/கலப்பு பருப்பு தோசையுடனும் பரிமாறப்படுகிறது. [1][2][3]
பாரம்பரியமாக, இதில் வெண்டைக்காய், வெண் பூசனி அல்லது பூசணி, சேப்பங்கிழங்கு, மாங்காய்[4] போன்ற காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. பண்டிகைகளில் இந்த குழம்பு ஒரு சிறப்பு உணவாக பரவலாக தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் சூடான அரிசி சாதத்துடன் உருளைக்கிழங்கு பொரியலுடன் பரிமாறப்படுகிறது.
கேரளாவில் இந்த குழம்ப்பில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று காய்கறிகளுடன், மற்றொன்று எந்த காய்கறிகளும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. காய்கறி வகையான குழம்பில் பொதுவாக சுரைக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது காலன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.மேலும், காய்கறிகள் இல்லாத குழம்பு மோர் குழம்பு என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Buttermilk Kuzhambu or Mor kuzhambu". padhuskitchen.com. 20 August 2009.
- ↑ "Calories in Mor Kuzhambu - 1/2 Cup Serving & Nutrition and Health Facts". caloriecount.com. Archived from the original on 9 August 2016. Retrieved 14 June 2016.
- ↑ "Mor Kuzhambu". anithasri.com.
- ↑ DIN (2025-04-19). "மாங்காய் மோர்க் குழம்பு". தினமணி (in Tamil). Retrieved 2026-03-19.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
மேலும் வாசிக்க
- Narayan, Shoba (August 30, 2014). "'Mor kuzhambu' or 'kadhi': the name game". Mint. Retrieved June 16, 2016.