ரமன் சிங்

தமிழர்விக்கியிலிருந்து
(ராமன் சிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ரமன் சிங்
படிமம்:The former Chief Minister of Chhattisgarh, Dr. Raman Singh.jpg
சத்தீசுக்கர் முதலமைச்சர்
பதவியில்
திசம்பர் 8 2008 - திசம்பர் 17 2018
தொகுதிராஜ்நந்த்காவ்ன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1952 (1952-10-15) (அகவை 73)
கவர்தா, சத்தீசுக்கர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்வீணா சிங்
பிள்ளைகள்அபிசேக் சிங், அசுமிதா சிங்
வாழிடம்(s)சிவில் லைன்சு, ராய்ப்பூர் 492001
இணையத்தளம்http://www.ramansingh.in
மூலம்: Government of Chhatisgarh

ரமன் சிங் (रमन सिंह, Raman Singh)(பிறப்பு 15 அக்டோபர் 1952) இந்தியாவின் புதிய மாநிலமான சத்தீசுக்கரின் முன்னாள் முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் ஆவார்.திசம்பர் 7,2003 முதல் 17 டிசம்பர்,2018 வரை முதலமைச்சராக இருந்தார்.

அரசியல் வாழ்வு

மருத்துவர் ரமன் சிங் ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்றுள்ளார்.தமது இளமையிலேயே பாரதிய ஜன சங்கத்தில் இணைந்து நகராட்சி மன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் என முன்னேறியவர்.சத்தீசுக்கரின் ராஜ்நந்த்காவிலிருந்து 1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்றதிலிருந்து அவரது அரசியல் வாழ்வில் ஓர் திருப்பம் ஏற்பட்டது.அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் அமைந்த நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார்.பின்னர் மாநில பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டு 2003 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி தேடித் தந்தார்.முதலமைச்சராக எதிர்பார்க்கப்பட்ட திலீப் சிங் ஜூதேவ் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டதால் பாஜக தலைமை இவரை முதலமைச்சராக பரிந்துரைத்தது.

மிகவும் தூய்மையான நிர்வாகத்தைச் செயல்படுத்தியதன் பின்னணியில் 2008 ஆம் ஆண்டு தேர்தல்களில் மீண்டும் வாகை சூடினார்.இரண்டாம் முறையாக திசம்பர் 12,2008 அன்று சத்தீசுக்கர் முதல்வராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[1].

இதனையும் காண்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-11. Retrieved 2010-12-08.


"https://tamilar.wiki/w/index.php?title=ரமன்_சிங்&oldid=481734" இலிருந்து மீள்விக்கப்பட்டது