ராயூ
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். செல்லுபடியற்ற தொடரிகளை அகற்றுவீர்... |
| Colonel Raju | |
|---|---|
![]() | |
| தாய்மொழியில் பெயர் | கேணல் ராயூ |
| பிறப்பு | அ. நேமிநாதன் 30 மே 1961 |
| இறப்பு | 25 August 2002 (aged 41) மலேசியா |
| மற்ற பெயர்கள் | கண்ணன், குயிலான் |
| செயற்பாட்டுக் காலம் | 1983–2002 |
| அமைப்பு(கள்) | தமிழீழ விடுதலைப் புலிகள் |
ராஜூ அல்லது ராயூ என்னும் இயக்கப் பெயரால் அறியப்படும் அம்பலவாணர் நேமிநாதன் (30 மே 1961 – 25 ஆகத்து 2002) என்பவர் இலங்கை, போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவர்.
நேமிநாதன் 1961 ஆம் ஆண்டு, மே 30 அன்று பிறந்தார். இவர் யாழ்ப்பாண மாவட்டம், சுன்னாகம், எர்லாலை தெற்கைச் சேர்ந்தவர்.[1]
நேமிநாதன் 1983 ஆம் ஆண்டில் நடந்த கறுப்பு யூலை கலவரத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ராயூ என்ற இயக்கப் பெயரைப் பெற்றார்.[1] ராயூ விடுதலைப் புலிகளின் பொறியியல் படையின் தலைவராகப் பணியாற்றினார்.[1] இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.[1][2] இவர் காலாட் படை பிரிவான சிறுத்தை அதிரடிப்படையின் சிறப்பு தளபதியாக இருந்தார். மேலும் கிட்டு படையணியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருந்தார். புலிகளின் பீரங்கிப் பிரிவை உருவாக்க ராயூ உதவியாக இருந்தார்.[1][2][3] இலங்கை இராணுவம் ராயூவை இரகசியமாக கொல்ல பலமுறை முயன்றது.[3]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ராயூ வன்னியிலிருந்து மலேசியாவுக்கு படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.[3] இவர் 2002 ஆகத்து 25 அன்று மலேசியாவில் இறந்தார்.[1][2][3] இவரது மரணத்திற்குப் பின் கர்னலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Thousands mourn LTTE Col. Raju". Tamil Guardian. 18 September 2002. http://www.tamilguardian.com/tg179/p6.pdf.
- ↑ 2.0 2.1 2.2 "Tigers mourn death of senior commander". தமிழ்நெட். 10 September 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7453.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Top guerrilla leader dies". The Sunday Times (Sri Lanka). 22 September 2002. http://www.sundaytimes.lk/020922/columns/jungle.html.
