ருகா மொழி
| ருகா | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10 (2019)e25 |
சீன-திபெத்திய
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | ruh |
| மொழிக் குறிப்பு | ruga1238[1] |
| {{{mapalt2}}} ருகா மொழியானது யுனெசுகோவால் மிக அருகிவரும் மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.] உலகின் ஆபத்தான மொழிகளின் தொகுப்பு[2] | |
ருகா மொழி (Ruga language) என்பது இந்தியாவின் மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைப்பகுதி மற்றும் மேற்கு காரோ மலைப்பகுதிகளில் பேசப்படும் ஒரு சீன-திபெத்திய மொழியான காரோவின் ஒரு கிளைமொழி ஆகும். இன்று, தங்களை ருகா என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் காரோவுக்கு மாறிவிட்டனர், மேலும் சில வயதான பூர்வீக ருகா பேச்சாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
ருகா பழங்குடி
ருகா மக்கள், காரோ பழங்குடியினரின் ஒரு உட்பிரிவாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ருகா மக்களுக்குத் தமக்கெனத் தனித்துவமான அடையாளம் உண்டு. ருகா மொழி மற்ற காரோ மொழிகளுடன் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இது அடோங் மொழி (சீன-திபெத்திய) மற்றும் கோச் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. ருகா மொழி பேசுபவர்கள் தங்கள் மொழியை இழந்துவிட்டதால், இவர்கள் அம்பெங் வட்டார மொழிக்கு மாறியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் புகாய் ஆற்றின் பள்ளத்தாக்குகளிலும், தெற்கு காரோ மலைகளின் கீழ் உள்ள கசுவாபாரா வட்டாரத்தின் ரூகாபாரா பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Ruga". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ வார்ப்புரு:Cite UNESCO Atlas