ரேகா சுரேஷ்
Jump to navigation
Jump to search
ரேகா சுரேஷ் என்பவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். முதன் முதலாக இயக்குனர் சங்கரின் எந்திரன் திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். [1]
பிறப்பும் படிப்பும்
ரேகா 27 செப்டம்பர் 1972 இல் சென்னையில் பிறந்தார். சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். விலங்கியல் துறையில் இளங்கலை படித்துள்ளார்.
இவருடைய கணவர் பெயர் சுரேஷ் ஆகும்.
திரையுலகம்
சின்ன தம்பி என்ற தொலைக்காட்சி நாடகத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சன் தொலைக்காட்சியில் சுமங்கலி தொடரில் நடித்துள்ளார்.
சின்னத்திரை நாடகங்கள்
- சின்னதம்பி
- பகல் நிலவு
- சுமங்கலி
- சந்திரலேகா
- ரங்க விலாஸ்
- ஆபிஸ்
- என் வீடு
- கல்யாணம் முதல் காதல் வரை
- ஸ்நேகிதியே
திரைப்படங்கள்
- மாநகரம் 2017
- தி பேமிலி மேன் 2019
- கலாம் 2016
- எந்திரன்
- தெகடி 2014
- உப்பு கருவாடு
- அங்குசம்
- நலன்னும் நந்தினியும்
- நவீன சரஸ்வதி சபதம்