லாடனேந்தல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
 லாடனேந்தல்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

லாடனேந்தல் என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், லாடனேந்தல் ஊராட்சியில், வைகை ஆற்றின் கரையில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும்.[1]

இதன் அஞ்சல் சுட்டு எண் 630611; தொலைபேசி குறியீடு எண் 04574 ஆகும். லாடனேந்தல், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் அஞ்சலகம் திருப்புவனத்தில் உள்ளது.

இதன் அருகமைந்த சிற்றூர்கள்: பாப்பாக்குடி, மேலச்சொரிக்குளம், கீழசொரிக்குளம், தூதை, திருப்பாச்சேத்தி, கலியாந்தூர், அல்லிநகரம் ஓடாத்தூர், கானூர், பிரமனூர் ஆகும். அருகமைந்த நகரங்கள்:மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகும்.

போக்குவரத்து

மதுரை - இராமேஸ்வரம தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த லாடனேந்தல் கிராமம், மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், திருப்புவனத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மதுரையிலிருந்து, திருப்புவனம் வழியாக லாடனேந்தலுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையங்கள், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகும்.

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, லாடனேந்தல் சிற்றூரின் மொத்த மக்கள்தொகை 4,289 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 307 (7.2%) ஆக உள்ளனர். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 881 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.35% ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்டபட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 453 ஆகும்.[2]

வங்கிகள்

  • சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, லாடனேந்தல் கிளை
  • கனரா வங்கி, லாடனேந்தல் கிளை

வழிபாட்டுத் தலங்கள்

  • வீரமாகாளியம்மன் கோயில்
  • முத்தையா (எ) முத்து கருப்பண்ணசாமி கோயில்
  • காமாட்சி அம்மன் கோயில்
  • மந்தை விநாயகர் கோயில்
  • முனியாண்டி, அய்யனார், ஊர்க்காவலன் கோயில்கள்
  • பூங்காவனம் மாரியம்மன் கோயில்

கல்வி நிலையங்கள்

  • வேலம்மாள் உறைவிடப்பள்ளி [3]
  • ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி
  • அரசு உயர்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லாடனேந்தல்&oldid=487519" இலிருந்து மீள்விக்கப்பட்டது