லால்குடி ஜெயராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலால்குடி ஜெயராமன்
Lalgudi Jayaraman.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புசெப்டம்பர் 17, 1930 (1930-09-17) (அகவை 94)
சென்னை
இறப்பு(2013-04-22)ஏப்ரல் 22, 2013
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை, ஜாஸ் கலவை
தொழில்(கள்)வயலின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)வயலின், தாள இசைக்கருவி, மின்னிசையாக்கிகள்
இசைத்துறையில்1942-2013

இலால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்[1]

இசைப் பயிற்சி

இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார்.

இசை வாழ்க்கை

ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்.

இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்:

புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் இலால்குடி ஜெயராமன்.

மாணவர்கள்

இயற்றியுள்ள பாடல்கள்

மறைவு

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.[3]

விருதுகளும் சிறப்புகளும்

  • பத்மஸ்ரீ விருது, 1972 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
  • வாத்திய சங்கீத கலாரத்னா விருது ; வழங்கியது: பாரதி சொசைட்டி, நியூயார்க்
  • சங்கீத சூடாமணி விருது, 1971 மற்றும் 1972 ; வழங்கியது: இசை சபாக்களின் கூட்டமைப்பு, மெட்ராஸ்
  • மாநில வித்வான் விருது, 1979 ; வழங்கியது: தமிழ்நாடு அரசாங்கம்
  • சௌடையா நினைவு தேசிய அளவிலான விருது ; வழங்கியது: கர்நாடகா அரசாங்கம்
  • இசைப்பேரறிஞர் விருது, 1984. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]
  • பத்ம பூசன் விருது, 2001 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
  • சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது, 2006 (சிருங்காரம் எனும் தமிழ் படம்) ; வழங்கியது: இந்திய அரசாங்கம்

மேற்கோள்கள்

Wikinews-logo.svg.png
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  1. வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் பி பி சி தமிழ்
  2. GAYATRI SANKARAN -- HER GURUS
  3. "Lalgudi Jayaraman, lyrical virtuoso, passes away". பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
  4. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=லால்குடி_ஜெயராமன்&oldid=8344" இருந்து மீள்விக்கப்பட்டது