லோக் இயூ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லோக் இயூ
Loke Yew
陆佑
படிமம்:Loke Yew.jpg
பிறப்புவோங் லோக் இயூ
Wong Loke Yew

9 அக்டோபர் 1845
குவாங்டொங், சீனா
இறப்பு24 பெப்ரவரி 1917 (வயது 71)
கோலாலம்பூர், சிலாங்கூர் பிரித்தானிய மலாயா
கல்லறைஆவ்தோர்ன்டன் தோட்டம், செதாபாக், கோலாலம்பூர்
3°11′0″N 101°45′0″E / 3.18333°N 101.75000°E / 3.18333; 101.75000 (Loke Yew resting location)
அறியப்படுவதுகோலாலம்பூர் முன்னோடி
வாழ்க்கைத்
துணை
4
பிள்ளைகள்11

லோக் இயூ (ஆங்கிலம்; மலாய்: Loke Yew; (CMG) சீனம்: 陆佑) (1845–1917) என்பவர் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலாயாவின் (இன்றைய மலேசியா) வளர்ச்சிக்கும்; குறிப்பாக கோலாலம்பூர் வளர்ச்சிக்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒரு கண்டோனீய (சீனர்) செல்வந்தர் ஆவார். பத்துமலை கோயிலை உருவாக்கிய தம்புசாமி பிள்ளையுடன் சேர்ந்து, சிலாங்கூர், ரவாங் பெருநகரில் ஈயச் சுரங்கத் தொழிலுக்கு மின்சார வசதியை அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்.

கோலாலம்பூர் விக்டோரியா உயர்நிலப்பள்ளியின் (Victoria Institution) நிறுவனர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[1] கோலாலம்பூரில் உள்ள ஜாலான் லோக் இயூ (Jalan Loke Yew) அல்லது லோக் இயூ சாலை; சுங்கை பீசி விரைவுச்சாலையில் உள்ள லோக் யூ சுங்கச் சாவடி (Loke Yew Toll Plaza); சிங்கப்பூரில் லோக் இயூ தெரு (Loke Yew Street) போன்ற பல இடங்கள் இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன. செராஸ் நெடுஞ்சாலை எனும் படிமம்:MYS Jkr-ft1.svg FT 1 மலேசிய கூட்டரசு சாலை 1 என்பது இன்றும் செராஸ் சாலைலோக் இயூ சாலை (Cheras RoadLoke Yew Road) என்று அழைக்கப்படுகிறது.[2]

தொடக்க கால வாழ்க்கை

படிமம்:Loke Mansion (front), Kuala Lumpur.jpg
கோலாலம்பூரில் லோக் இயூ மாளிகை; மறுசீரமைப்புக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படம். (2007)

சீனா, குவாங்டொங்கில் உள்ள டோங்ஜியாங் கிராமத்தில் 1845-ஆம் ஆண்டு நான்கு குழந்தைகள் கொண்ட ஓர் ஏழைக் குடும்பத்தில் ஒரே மகனாகப் பிறந்தார். தன் குழந்தைப் பருவத்தில் ஒரு வேளாண் நில உதவியாளராக வேலை செய்தார். பின்னர் அவர் வேலை தேடி சிங்கப்பூருக்கு கப்பலில் வந்தார். அப்போது அவருக்கு 13 வயது. பின்னர் அவர் மலாயாவுக்கு கப்பல் மூலமாக வந்தார்.[3]

சிங்கப்பூரில் இருந்த அவருடைய உறவினர்கள் அவரை சிங்கப்பூர் மார்க்கெட் சாலையில் உள்ள குவாங் மேன் மளிகைக் கடையில் (Kwong Man General Store) அவரின் முதல் வேலைக்குப் பரிந்துரை செய்தனர். அவருக்கு அப்போது மாதச் சம்பளம் மலாயா டாலர் $ 20. இளம் வயது லோக் இயூவின் 4 ஆண்டுகள் கடினமான உழைப்பிற்குப் பிறகு $ 99 மலாயா டாலர்களைச் சேமிக்க முடிந்தது.[3]

அந்தப் பணத்தில், அவர் தோங் இங் லூங் (Tong Hing Loong) என்ற பெயரில் சொந்தமாக ஒரு மளிகைப் பொருட்கள் கடையைத் தொடங்கினார். அவருடைய வணிகம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர் அவர் தன்னுடைய ஊழியர்களையும் மருமகனையும் கடையின் பொறுப்பாளர்களாக விட்டுவிட்டு 1987-ஆம் ஆண்டு வடக்கு மலாயாவுக்குச் சென்றார். குறிப்பாக அவர் ஈயச் சுரங்கத் தொழிலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு பேராக் மாநிலத்திற்குச் சென்றார்.[4]

வணிகங்கள்

படிமம்:Loke Mansion.jpg
மறுசீரமைப்புக்குப் பிறகு லோக் இயூ மாளிகை. (2010)
படிமம்:HK 中環 Central 皇后大道中 Queen's Road Central April 2021 SS2 23.jpg
ஆங்காங் மாநகர் மையத்தில் லோக் இயூ கட்டடம். (2021)

பேராக்கில் தன்னுடைய புதிய முயற்சியில் அந்த இலட்சிய இளைஞர் பெரும் ஆபத்துக்களைச் சந்தித்தார். அவர் தன்னுடைய முதல் நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட மலாயா டாலர் $ 60,000 இழந்தார். ஆனால் பேராக், தைப்பிங், கெலியான் பாரு பகுதியில் வருமானம் ஈட்டக்கூடிய புதிய ஓர் ஈயச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்கும் வரையில் அவர் தன்னுடைய தொழிலைத் தொடர்ந்தார்.[5]

1874-ஆம் ஆண்டு பங்கோர் உடன்படிக்கையைத் தொடர்ந்து பேராக்கில் பிரித்தானியர் ஓர் அரசியல் இருப்பை நிறுவிய பின்னர், லோக் இயூவின் ஈயச் சுரங்க நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பின்னர் அவர் கிந்தா பள்ளத்தாக்கிலும், பேராக் மாநிலத்தின் மற்ற இடங்களிலும் சுரங்க முயற்சிகளை வெற்றிகரமாகத் தொடங்கினார். அதன் பின்னர் அவரின் ஈயச் சுரங்கத் தொழிலில் திடீரென்று ஏற்றங்கள் ஏற்பட்டன. பின்னர் லோக் இயூ, பேராக்கில் இன்னும் பல ஈயச் சுரங்கங்கள், ரப்பர், தேங்காய் தோட்டங்களைக் கையகப்படுத்திச் சொந்தமாக்கிக் கொண்டார்.[5]

பேராக் போரின் (Perak War) போது பிரித்தானிய இராணுவப் படைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதிலும் முயற்சிகள் மேற்கொண்டார். பின்னர் அவர் தங்க நகை அடகு வணிகத்தில் ஈடுபட்டார். 1890-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய காலனிய அரசாங்கத்திடமிருந்து மதுபான விற்பனை, சூதாட்ட உரிமங்கள் மற்றும் பிற சலுகைகளுக்கான ஏகபோகத்தையும் பெற்றார். 1870-ஆம் ஆண்டுகள் முதல் 1900-ஆம் ஆண்டுகள் வரை, பேராக், சிலாங்கூர் மற்றும் பகாங் போன்ற மாநிலங்களில் முக்கிய ஈயச் சுரங்கத் தொழில் மற்றும் வேளாண் நடவடிக்கைகளைத் தன்னகப்படுத்தினார்.[5]

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்

படிமம்:Loke Yew in Loke Yew Hall.jpg
ஆங்காங் பல்கலைக்கழகத்தின் லோக் இயூ மண்டபத்தில் உள்ள லோக் இயூவின் வெண்கல சிலை. (2021)
படிமம்:HK 中環 Central 皇后大道中 Queen's Road Central Fung Lok Hong n Hang Seng Bank October 2020 SS2.jpg
ஆங்காங் மாநகரில் லோக் இயூ உருவாக்கிய ஆங் செங் வங்கியின் முகப்பு. (2020)

1898-ஆம் ஆண்டு சிலாங்கூரில் உள்ள உலு பெர்ணம் பகுதியில் ஒரு நெல் வேளாண் தோட்டத்தைத் திறந்தார். பின்னர் அந்தத் தோட்டத்தை ஒரு ரப்பர் தோட்டமாக மாற்றினார். இசுட்ரெய்ட்ஸ் இசுடீம்சிப் நிறுவனம் (Straits Steamship Company); மற்றும் தி இசுட்ரெய்ட்ஸ் திரேடிங் கம்பெனி (The Straits Trading Company) போன்ற முக்கிய உள்ளூர் நிறுவனங்களிலும் அவர் பங்குகளை வாங்கினார். சிங்கப்பூர் மற்றும் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்ளில் சொத்துக்களையும் உருவாக்கினார்.

1900-ஆம் ஆண்டுகளில், மலாயாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கான வசதிகளை மேம்படுத்த சாலைகள் மற்றும் தொடருந்து பாதைகளைக் கட்டினார். இதனால் அவர் மலாய் மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார் என்று அறியப்படுகிறது.

ரவாங்

1894-ஆம் ஆண்டில், பிரித்தானிய மலாயாவில், ஈயச் சுரங்கத் தொழிலுக்கு ஆதரவாக முதல் மின் இயற்றிகள் ரவாங்கில் நிறுவப்பட்டன. இதுவே மலேசியாவில் மின்சார மயமாக்கப்பட்ட முதல் இடமாக ரவாங்கைப் புகழ்பெறச் செய்தது. ஏராளமான மின்மயமாக்கப்பட்ட ஈயச் சுரங்கங்கள் நிறுவப்பட்டன.[6]

லோக் இயூ மற்றும் தம்புசாமி பிள்ளை, இருவரும் ரவாங்கின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளனர். அந்த வகையில், மலாயாவில் ஈயச் சுரங்கத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்திய முதல் நகரமாக ரவாங் திகழ்கிறது.

மேலும் ரவாங் நகரம் மின்சாரத் தெரு விளக்குகளைக் கொண்ட முதல் நகரமாவும்; ஒரு தொடருந்து நிலையத்தில் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கு மின்சாரம் வழங்கிய முதல் தொடருந்து நிலையம் (Rawang Railway Station) எனும் வரலாற்றையும் இந்த நகரம் பெறுகின்றது.[6]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. malaysiafactbook.com
  2. "Grand Saga Expressway, Cheras-Kajang Expressway (E7)". klia2.info. 2017-10-21. Retrieved 2025-07-27.
  3. 3.0 3.1 "Loke Yew, born in the southern China province of Fujian, migrated to Singapore aged 13". www.ehm.my. Retrieved 14 December 2025.
  4. "After spending the next five years expanding his business in Singapore, Loke left it in the care of a manager and left for Perak in peninsular Malaya in 1867". www.nlb.gov.sg. Retrieved 14 December 2025.
  5. 5.0 5.1 5.2 "Towkay Loke Yew; After the war effectively ended in 1876 and relative calm returned to Perak, Loke Yew wasted no time in getting back into tin mining". Malaysia 1786 - 1957 (in ஆங்கிலம்). 30 December 2022. Retrieved 14 December 2025.
  6. 6.0 6.1 Lopez, Benedict. "History shaped Rawang's reputation, growth pushes it forward. In 1894, Malaya's first electric generator was installed in Rawang, mainly to serve the needs of British tin mining companies". www.thesundaily.my (in ஆங்கிலம்). Retrieved 29 April 2023.

வெளி இணைப்புகள்

  1. The Demise of the Revenue Farm System in the Federated Malay States
  2. When the 'towkay' reigned
  3. Honoree: Choo Meileen
  4. The original media man, INVESTOR DIGEST
  5. The original media man
  6. Interview with the grandson of Loke Yew and Reproductive Immunologist Dr. Charlie Loke Yung Wai by Alan Macfarlane, 22 February 2007 – Interview provides insight into his grandfather Loke Yew and the family.
  7. Kington among men, by Allan Koay, The Star Online, 26 March 2003 – Obituary on Dato' Kington Loo (d. 21 March 2003)
"https://tamilar.wiki/w/index.php?title=லோக்_இயூ&oldid=489309" இலிருந்து மீள்விக்கப்பட்டது