வண்ணக் களஞ்சியப் புலவர்
Jump to navigation
Jump to search
வண்ணக்களஞ்சியப் புலவர் என அழைக்கப்படும் புலவர் நாகூரைச் சேர்ந்த ஹமீது இப்ரகீம் என்பவர் ஆவார். இவர் சுலைமன் ரபியின் கதையைக் கூறும் 'இராசநாயகம்' என்ற (46 படலங்களில் 2240 பாக்கள்) காவியச் சுவை ததும்பும் நூலையும்
- முகைதீன் புராணம்,
- தீன் விளக்கம்
போன்ற புராணங்களையும் இயற்றியுள்ளார்.
சந்தப் பாக்களும் வண்ணப்பாக்களும் பாடுவதில் வல்லமை பெற்றுத் திகழ்ந்ததால் வண்ணக்களஞ்சியப் புலவர் என வழங்கப்பட்டார்.
நாகூர் தர்க்காவில் வாழ்ந்த சாது ஒருவரின் அருமை பெருமைகளை விளக்கி, முகைதீன் புராணம் என்னும் நூலை எழுதி நாகூரில் அரங்கேற்றினார். இந்நூலின் இனிமையில் மகிழ்ந்த அன்பர் ஒருவர் இவர் விரும்பிய தன் மகளை இவரைத் தேடிப் பிடித்து மணமுடித்து வைத்துள்ளார்.
உசாத்துணை
- தமிழிலக்கிய வரலாறு , ஜனகா பதிப்பகம்- 1997