வாணன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

வாணன் என்பவர் பண்டைய நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு சிறுகுடி நாட்டை ஆண்ட குறும்பர் (ஆநிரை பராமரிக்கும் குலம்) என்ற பூர்வீக வழியை சேர்ந்த சீறூர் மன்னர் ஆவார்.

குறும்பசிதரித்தன்

இவர் வாணன் மன்னனின் மூத்த தளபதியாவர். போரில் பழுவேட்டரைய மன்னரின் தலையைச் சரித்துள்ளார். இவர் கத்திச் சண்டையில் மிகத் திறமையானவர். இரு மதம் பிடித்த காட்டு யானைகளின் தும்பிக்கைகளையும், பாதி தலையையும் வெட்டியுள்ளார். குறும்பசிதரித்தன் தலையில் சிகப்பு துண்டு, முதுகில் வீர வாள், உடம்பில் சந்திரன் அச்சு பொதித்த கவசம், இடுப்பில் கத்தியும் கூர்மையான பார்வையுடனும் இருப்பார். இவர் வாழ்ந்ததற்கு திருமுல்லைவாயில் மாசில்லாமணீஸ்வர் கோவிலில் வரலாற்றுக் குறிப்பேடுகளில் இவரை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வரலாறு

இவர் திருமுல்லைவாயிலில் அரண்களை கட்டி ஆண்டுவந்த மன்னன் ஆவார். இவரின் சகோதரன் ஓணான் எனப்படுவார். இவர்கள் சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் வாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

கண்டீரவமறம்:என்பவர் தொண்டமண்டலத்தை ஆண்ட முதல் மன்னர் ஆவர். கண்டீரவமறம் என்ற சொல்லில் கண்டீரவம் என்பது சிங்கத்தைக் குறிக்கும். இவர் குறும்பா இனத்தைச் சேர்ந்த மன்னர் ஆவர். முதன் முதலில் மலைக் குன்றில் கோட்டை கட்டி ஆண்டன. இவர் அடுத்து தொடர்ச்சியாகக் குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்டனர் என்றும் திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோவிலில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழபடை:

  • முரசு: போரைத் தொடங்க முரசு கொட்டப்படும்.
  • காட்டுப்பை: காட்டுப் பகுதிகளில் போரிடும் படை (வேடர்கள்). இவர்கள் மிகவும் சிறந்தவர்கள்.

போர்:

இவர்களின் நிலங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இளந்திரையன் முடிவெடுத்தபோது அதை அறிந்து கோவம் அடைந்த வாணன் மன்னர் இளந்திரையனுக்கு எதிராக போரிட தயாரானார். அப்போது தனது படைகளுடன் சென்று பொருள்சேதம் செய்தார் வாணன். பின் தொண்டைமான் படையுடன் வருகிறான் என்னும் செய்தியைத் தெரிந்துகொண்ட குரும்பர்கள் படையைத் திரட்டிக்கொண்டு போர் செய்தனர். குரும்பர்களின் தெய்வமான வைரவனின் வரத்தின் உதவியால் தொண்டைமானின் படைகளை விரட்டி அடித்தனர், இனிமேல் போர் செய்ய இயலாது என்று எண்ணிய தொண்டைமான் பொரை நிறுத்திவிட்டு பாசறைக்குத் திரும்பினான். வரும் வழியில் மன்னன் ஏறிவந்த யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் பின்னிப் பிணைந்தன, யானை தன் காலை எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படவே மன்னன் யானையின்மேல் அமர்ந்தபடியே முல்லைக்கொடிகளை வெட்டினான். அந்த இடத்தில் இருந்த கொடிகள் வெட்டுப்பட்டு அறுந்தன, அந்த இடத்திலிருந்து குருதி (இரத்தம்) பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவனின் திரு உருவாகிய இலிங்கத்தைக் கண்டான், தரையில் விழுந்து புரண்டான், வியர்த்துப் போனான், கண்ணில் நீர் பெருகியது. தனது உடைவாளை எடுத்து தனது கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்ளும் சமயம் இறைவன் தோன்றி "மன்னனே வாளால் வெட்டுண்டாலும் மாசிலா மணியாக (குறையில்லா மணியாக) இருப்போம் வருந்தற்க நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக" எனக் கூறி மறைந்தார். பிறகு தொண்டைமான் நந்தியின் துணையோடு வாணன் மற்றும் குறும்பர் படைகளை வென்றார் தொண்டைமான் இளந்திரையன்.

மாசிலாமணீசுவரர் கோயில்:

போருக்குப் பின் வாணன் அவர்கள் கட்டிய அரண்களில் இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்து திருமுல்லைவாயிலில் இறைவனுக்கு திருக்கோவிலைக் கட்டிவித்தார் தொண்டைமான் இளந்திரையன். இன்றும் அந்த வெள்ளருக்கந் தூண்கள் மாசிலாமணீசுவரர் கருவறையின் வாயிலில் உள்ளது.

புலவர்கள்

இ்வ்வாணனை பற்றி புலவர்கள் பாடியவை.

புலவர் பாடல் விளக்கம்
மதுரை நக்கீரர் நற்றிணை 340 செழியன் குளத்து மடைநீர் இவ்வாணன் சிறுகுடி வழியாக கடலில் பாய்ந்தது.
மருதன் இளநாகனார் அகம் 269 இவ்வாணன் குடி பாண்டிய நாட்டின் சீறூர்.
நப்பாலத்தனார் அகம் 204 இவ்வாணன் சிறுகுடி நெல்வளம் மிக்கது.
தெரியவில்லை அகம் 117 இவ்வாணன் சிறுகுடி நீர், நில வளங்கள் மிகுந்தது.
"https://tamilar.wiki/w/index.php?title=வாணன்&oldid=494588" இலிருந்து மீள்விக்கப்பட்டது