வாயு பகவான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வாயு
படிமம்:Vayu Deva.jpg
வாயு
தேவநாகரிवायु
சமசுகிருதம்Vayu
தமிழ் எழுத்து முறைவாயு
வகைதேவர்
இடம்காற்று
மந்திரம்ஓம் பவனபுருஷாய வித்மஹே சஹஸ்த்ரமூர்த்தியேச தீமஹி தன்னோ வாயு: பிரசோதயாத்
ஆயுதம்வயவ்யாஸ்திரம்
துணைலேஹாரி

இந்து மத தொன்மைவியல் படி, வாயு பகவான் என்பவர் காற்றின் அதிபதியாவார். வாயு பகவானுக்கும் அஞ்சனை என்ற வானர ராணிக்கும் பிறந்தவராக ஆஞ்சநேயர் அவார்.

பதினெட்டு புராணங்களில் வாயு பகவான் சிவனைப் பற்றி கூறிய வாயு புராணமும் ஒன்றாகும். இது ஒரு சைவ புராணமாக பதினெட்டு புராணங்களில் சேர்க்கப்பட்டு அதில் ஒன்றாக அமைந்து உள்ளது.

வாயு புராணம்

வாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. மேலும் நூற்றிப் பன்னிரெண்டு (112) அத்தியாயங்களேயும், இருபத்து நான்காயிரம் (24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயு பகவானால் சிவனிடம் கூறப்பட்டதால் இது வாயு புராணம் என அழைக்கப்படுகிறது மற்றும் இது சைவ புராணங்களில் ஒன்றாக இருக்கிறதாய் ஆகும்.

ஆஞ்சநேயர்

அயோத்தியாவின் அரசனான தசரதன் தனக்கு குழந்தை பேறு வேண்டி யாகம் செய்தார். அந்த யாகத்தில் கிடைத்த பிரசாதத்தினை தன்னுடைய மூன்று மனைவிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பொழுது, கௌசல்யாவின் பங்கிலிருந்து சிறிய அளவினை கழுகொன்று எடுத்து சென்றது. அது குழந்தை வரம் வேண்டி தவமிருந்த அஞ்சனையிடம் சேர்ப்பித்து. அதனை உண்ட அஞ்சனைக்கு ஆஞ்சநேயர் பிறந்தார். இதன் காரணமான வாயு பகவானின் அருளால் பிறந்தமையால் ஆஞ்சநேயரை வாயு மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள்.

பீமன்

மகாபாரத இதிகாசத்தி்ல் வருகின்ற பஞ்ச பாண்வர்களில் பீமன் குந்திக்கும் வாயு பகவானுக்கும் பிறந்தவர் ஆவார் அதனால் பீமனை வாயு மைந்தன் என்று அழைக்கப்படுவார்.

"https://tamilar.wiki/w/index.php?title=வாயு_பகவான்&oldid=495096" இலிருந்து மீள்விக்கப்பட்டது