வாளைத் தீவு
வாளைத் தீவு இது வாலித்தீவு, வலைத்தீவு (Valai Tivu, Vaalai Theevu or Valai Island) என்றும் அழைக்கப்படுவது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
| புவியியல் | |
|---|---|
| பரப்பளவு | 0.101 km2 (0.039 sq mi) |
| நிர்வாகம் | |
இந்தியா | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| வட்டம் | இராமேசுவரம் |
விளக்கம்
இத்தீவானது முளித் தீவிலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் அமைந்துள்ளது. அலைகள் குறைவாக இருக்கும் காலத்தில் தலையாரித் தீவுடன் மணல் திட்டுகள் வழியாக இத்தீவு இணைக்கப்படும். தீவின் இருபுறமும் திட்டுகளும் பாறைகளும் உள்ளன. மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[1]
இப்பகுதி மீன் வளம் மிக்கது. இத்தீவில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அதற்குக் கிட்டோரியம்மன் மாதா கோயில் என்று பெயர்.[2]