வினைமுற்று

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் காலம் காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை வினைத்தொகை என்பர்.

வகை

தமிழில் வினைமுற்றுகள் நான்கு வகையில் அமையும். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, ஏவல் வினைமுற்று,வியங்கோள் வினைமுற்று என்பன அவை.[1]

தெரிநிலை வினைமுற்று:

ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) அவன் கற்றான். அவள் நின்றாள். அவர் சென்றார். அது வந்தது. அவை வந்தன. - என்பனவற்றில் தடித்த எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளவை ஐம்பால் தெரிநிலை வினைமுற்றுகள்

குறிப்பு வினைமுற்று:

அவன் நல்லன். அவள் நல்லள். அவர் (அவர்கள்) நல்லர். அது நன்று. அவை நல்ல. - என்பனவற்றில் தடித்த எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளவை ஐம்பால் குறிப்பு வினைமுற்றுகள்.

அடிக்குறிப்பு


  1. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
    காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்-
    உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும்,
    ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்,
    அம் மூஉருபின,-தோன்றலாறே.(தொல்காப்பியம் 2-201)

வெளி இணைப்புகள்

இவை.(பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 10 ஏப்ரல் 2011 [தொடர்பிழந்த இணைப்பு])

"https://tamilar.wiki/w/index.php?title=வினைமுற்று&oldid=498236" இலிருந்து மீள்விக்கப்பட்டது