விமலா ராமன்
| விமலா ராமன் Vimala Raman | |
|---|---|
| பிறப்பு | சனவரி 23, 1984 சிட்னி, ஆஸ்திரேலியா |
| பணி | திரைப்பட நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று |
| உயரம் | 1.68 மீட்டர் |
விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் (2007) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, சிட்னியில் நடன ஆசிரியை ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்று 2000-ஆவது ஆண்டில் அரங்கேறினார். கணினித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா தரவுத்தள ஆய்வாளராகத் தொழிலாற்றுகிறார். 2006-ஆம் ஆண்டில் இவர் ஆத்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
திரையுலகில்
2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடனும், மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் ராமன் தேடிய சீதை என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேரனுடன் இணைந்து நடித்தார். டேம் 999 என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படத்தில் சோகன் ராய் இயக்கத்தில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
| இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது |
| ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2006 | பொய் | சில்பா | தமிழ் | முதல் திரைப்படம் |
| 2007 | டைம் | வைகா மேனன் | மலையாளம் | |
| பிரணயகாலம் | மரியா வார்கீசு | |||
| சூரியன் | மாயா | |||
| நசுரானி | சேரா ஏப்பென் | |||
| ரோமியோ | டாக்டர் பிரியா | |||
| 2008 | கல்கத்தா நியூஸ் | சிமித்தா | ||
| காலேஜ் குமரன் | மாதவி மேனன் | |||
| அபூர்வா | லட்சுமி தேவி | |||
| ராமன் தேடிய சீதை | ரஞ்சிதா | தமிழ் | ||
| 2009 | எவரைனா எப்புதைனா | மதுமிதா | தெலுங்கு | [2] |
| 2010 | அப்தரக்சக்கா | நாகவல்லி | கன்னடம் | |
| காயம் 2 | வித்யா | தெலுங்கு | ||
| ரங்கா தி தொங்கா | மங்கம்மா | |||
| 2011 | ராஜ் | பிரியா | ||
| சட்டம் | சிந்து | |||
| டேம் 999 | மீரா | ஆங்கிலம் | மலையாளத்தில் மொழிமாற்றம் | |
| 2012 | குளுமனாலி | பிரவல்லிகா | தெலுங்கு | |
| நுவ நேனா | விமலா ராமன் | "தா தா தமாரா" பாடலில் சிறப்புத் தோற்றம் | ||
| 2013 | மும்பாய் மிரர் | ஜியா | இந்தி | |
| சுக்கலாந்தி அம்மாயி சக்கநயினா அப்பாயி | சமீரா | தெலுங்கு | ||
| அமேசான் திருப்புமுனை | மதோன்னா | மலையாளம் | ||
| 2015 | ராஜ ராஜேந்திரா | யமுனா | கன்னடம் | |
| 2016 | பொய் மறஞ்சு பறயாதே | சுவயம்பிரபா | மலையாளம் | |
| ஒப்பம் | தேவயானி | [3] | ||
| 2017 | ஓம் நமோ வெங்கடேசையா | சிறீதேவி பத்மாவதி |
தெலுங்கு | [4] |
| 2019 | இருட்டு | ஜின் சைக்கா | தமிழ் | |
| 2022 | கிராண்ட்மா | பிரியங்கா | ||
| 2023 | அசுவின்சு | ஆர்த்தி | ||
| ருத்ராங்கி | மீரா பாய் | தெலுங்கு | ||
| காந்தீவதாரி அர்ஜுனா | டாக். பிரியா பகதூர் | |||
| 2024 | அந்திம தீர்ப்பு | சூர்ய தேவார ரத்ன பிரபா | ||
| 2025 | மதராஸி | செரின் | தமிழ் | |
| கே-ராம்ப் | ஸ்டெப்பி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம்[5] |
வலைத்தொடர்கள்
| ஆண்டு | பெயர் | பாத்திரம் | வலையமைப்பு | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2021 | பப்கோவா | ஆதிரா | ஜீ5 | [6] |
விருதுகள்
- 2004 - ஆத்திரேலிய-இந்திய அழகி 2004 விருது
மேற்கோள்கள்
- ↑ Vimala Raman crowned Miss India Australia (tribuneindia.com)
- ↑ "'Evaraina Epudaina' fame Vimala Raman looks stunning on Instagram and we have proof". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 January 2019. Archived from the original on 3 June 2021. Retrieved 31 May 2021.
- ↑ "Vimala Raman as Mohanlal's heroine". 24 January 2017 இம் மூலத்தில் இருந்து 7 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180807011744/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Vimala-Raman-as-Mohanlals-heroine/articleshow/50851806.cms.
- ↑ "Forgotten Actress' Surfaces in Hot Avatar". 22 July 2020. Archived from the original on 2 June 2021. Retrieved 31 May 2021.
- ↑ "'K-Ramp' OTT release date: When and where to watch Kiran Abbavaraam And Yukti Thareja starrer romantic comedy". The Times of India. 2025-11-15. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/k-ramp-ott-release-date-when-and-where-to-watch-kiran-abbavaraam-and-yukti-thareja-starrer-romantic-comedy/articleshow/125346964.cms.
- ↑ "PubGoa on Zee5: Forgotten Actress Hopes for A Career in OTT". 21 November 2020. Archived from the original on 6 May 2021. Retrieved 31 May 2021.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் விமலா ராமன்
- டுவிட்டரில் விமலா ராமன்
- Vimalaraman.Com பரணிடப்பட்டது 2006-10-04 at the வந்தவழி இயந்திரம்
- Miss India Australia பரணிடப்பட்டது 2006-08-20 at the வந்தவழி இயந்திரம்
- விமலா ராமனுடன் ஒரு சந்திப்பு பரணிடப்பட்டது 2009-01-01 at the வந்தவழி இயந்திரம்