விருபாட்சா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

விருபாட்சா (Virupaksha) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திகில் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இப்படத்தை கார்த்திக் வர்மா தண்டு இயக்கியுள்ளார். இவரே சுகுமாருடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தை பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் சுகுமார் ஆகியோர் தங்களது பதாகைகளின் கீழ் தயாரித்துள்ளனர். இப்படத்தில், சாய் தரம் தேஜ் , சம்யுக்தா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜீவ் கனகாலா, சுனில், பிரம்மாஜி, அஜய், ரவி கிருஷ்ணா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூரியா தன் மூதாதையர் கிராமமான ருத்ரவனத்திற்குச் செல்கிறார். அங்கு தொடர்ச்சியாக மரும மரணங்கள் நிகழகின்றன. மேலும் சூனியச் சடங்குகளால் ஏற்பட்ட ஒரு கொடிய சாபம் பற்றி தெரியவருகிறது. கிராமம் முற்றிலுமாக அழியும் முன்பு அந்த மருமத்தை தீர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் உள்ளாகிறார்.

மாந்திரீகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குஜராத்திப் பெண்ணைப் பற்றிப் படித்த பிறகு, கார்த்திக் வர்மா விருபாக்ஷா திரைப்படத்தை உருவாக்கத் தூண்டுதல் பெற்றார். துவக்கத்தில், படத்திற்கான தயாரிப்பாளர்களைக் கண்டறிவதில் அவர் சிரமப்பட்டார். 2018 இல், சுகுமார் இந்தத் திரைப்படத் திட்டத்தில் இணைந்து, திரைக்கதையைச் செம்மைப்படுத்தி, தயாரிப்பாளர் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் நடிகர் சாய் தரம் தேஜ் ஆகியோரை இதன் உள்ளே கொண்டுவர உதவினார். அரக்கு பள்ளத்தாக்கு , பதேரு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பிற்கான அரங்குகள் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டன. 2021 இல் சாய் தரம் தேஜ் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்ததால் படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்திவைக்கபட்டது. ஆனால் அவர் குணமடைந்த பிறகு மீண்டும் படப்பிடிப்புத் தொடங்கியது.

21 ஏப்ரல் 2023 அன்று வெளியான விருபாக்ஷா, அதன் சுவாரசியமான கதை, இயக்கம், நடிப்பு ஆகியவற்றுக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக முன்னணி நடிகர்களின் நடிப்பும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் பாராட்டப்பட்டன. [1] இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டில் அதிகம் வசூலித்த தெலுங்கு படங்களில் ஒன்று என்ற பெயர் பெற்றது.

வெளியீடு

இப்படம் 2023 ஏப்ரல் 21 அன்று திரையரங்குகளில் முதலில் தெலுங்கில் வெளியானது. பின்னர் இந்தி, தமிழ், கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2023 மே 5 அன்று திரையரங்குகளில் வெளியானது [2] இப்படத்தின் மேலதிக ஊடக சேவை மற்றும் செயற்கைக்கோள் உரிமைகளை முறையே நெற்ஃபிளிக்சு மற்றும் ஸ்டார் மா பெற்றன. [3] இது 2023 மே 21 அன்று நெட்ஃபிளிக்சில் திரையிடப்பட்டது. [ சான்று தேவை ] மேலும் இது 2023 சூன் 25 அன்று ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. [4]

வரவேற்பு

விருபக்ஷா விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [1] தி இந்துவின் சங்கீதா தேவி துண்டூ, கார்த்திக் வர்மா தண்டுவின் கதை மற்றும் நடிப்பைப் பாராட்டினார். மேலும், ஸ்ரீநகேந்திர தங்கலா, நவீன் நூலி, சம்தத் சைனுதீன் ஆகியோரின் தயாரிப்பு வடிவமைப்பு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்றவற்றைப் பாராட்டினார். [5] தி இந்தியன் எக்ஸ்பிரசின் ரகு பண்டி, கார்த்திக் வர்மா தண்டுவின் இயக்கம், கதை, முன்னணி நடிகர்களின் நடிப்பு, குறிப்பாக சம்யுக்தா மேனனின் நடிப்பு போன்றவற்றைப் பாராட்டினார். [6] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நீஷிதா நியாயபதி எழுதிகையில், " விருபக்ஷா நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் - நடிகர்களைத் தாண்டி கதாபாத்திரங்கள் உங்களைக் கவனிக்க வைக்கும். படத்தைப் பார்கையில் இப்படம் உங்களை உட்கவரும் தன்மையைக் கொண்டுள்ளது." [7]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Virupaksha Box Office Day 4: Sai Dharam Tej-starrer Crosses 50-crore Mark". News18 (in ஆங்கிலம்). 26 April 2023. Retrieved 2025-01-22. It has received positive reviews from the public and critics.
  2. "Virupaksha is releasing tomorrow in Hindi, Tamil, and Malayalam". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-05-04. Retrieved 2023-05-05.
  3. Srivastav, Simran (2023-05-09). "Virupaksha: OTT Rights Of Sai Dharam Tej's Horror Thriller Sold To THIS Streaming Platform". English Jagran (in ஆங்கிலம்). Retrieved 2023-05-30.
  4. "Sai Dharam Tej-starrer Virupaksha To Have Its World TV Premier On This Date". News18 (in ஆங்கிலம்). 2023-06-19. Retrieved 2023-06-20.
  5. "'Virupaksha' movie review: Sai Dharam Tej and Samyuktha Menon's film invokes fear without the gimmicks" (in en-IN). 2023-04-21. https://www.thehindu.com/entertainment/movies/virupaksha-telugu-movie-review-invokes-fear-without-the-gimmicks/article66763110.ece. 
  6. Bandi, Raghu (2023-04-21). "Virupaksha movie review: Sai Dharam Tej-starrer supernatural thriller delivers". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2023-04-22.
  7. "Virupaksha Movie Review: A gripping horror film". 2023-04-22. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/virupaksha/movie-review/99663810.cms. 
"https://tamilar.wiki/w/index.php?title=விருபாட்சா&oldid=498972" இலிருந்து மீள்விக்கப்பட்டது