விளச்சீர் - தமிழ் இலக்கணம் யாப்பு
Jump to navigation
Jump to search
தமிழில் யாப்பிலக்கணத்தில் விளச்சீர் என்பது நிரையசையில் முடியும் ஈரசைச் சீராகும்.
விளக்கம்
நிரை நிரை = கருவிளம்
நேர் நிரை = கூவிளம் போல விளம் ஈற்றசை வாய்ப்பாடு கொண்டு முடியும் ஈரசைச் சீரே விளச்சீர் ஆகும்.
பெயர்க்காரணம்
வாய்பாட்டில் இறுதியாக விளம் என்னும் ஓசையைக் கொண்டு முடிவதால் இதனை விளச்சீர் என்பர். இதில் ஈற்றசை எப்போதும் நிரை அசையைக் கொண்டு முடியும்,
எ.கா.
கரு/வளம் = நிரை நிரை அசையைக் கொண்டு கருவிளம் என முடியும்.
கா/தணி = நேர் நிரை அசையைக் கொண்டு கூவிளம் என முடியும்.
சிறப்புப் பெயர்
மாச்சீரும் விளச்சீரும் ஆசிரியப்பாவில் மிகுதியாக பயின்று வரும் ஆதலால் இதனை ஆசிரியவுரிச்சீர் என்றும் அழைப்பர்.
மேற்கோள்கள்
1.தமிழ் இலக்கணக் களஞ்சியம் - தேவிரா
2.நற்றமிழ் இலக்கணம் - அ.ஞானசம்பந்தம்
3.தொல்காப்பியம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.