வெண்ணி
Jump to navigation
Jump to search
வெண்ணி என்பது சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று.
இருப்பிடம்
தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் நீடாமங்கலம் அருகே உள்ள கோயில்வெண்ணி என்னும் பெயருடன் இன்றுள்ள ஊர்தான் சங்ககால(கழகக் கால) வெண்ணி. இதனைத் திருவெண்ணி என்றும் குறிப்பிடுவர். இக்காலத்தில் இங்குள்ள சிவாலயத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் பெயர் வெண்ணிக்கரும்பர்.
சங்ககாலத்தில்
1. கரிகால் வளவன் வெண்ணிப் போர்களத்தில் போரிட்டபோது அவனை எதிர்த்துத் தாக்கிய இரு பெரு வேந்தரும் ஒரே போர்களத்தில் மாண்டொழிந்தனர். [1] 2. கைவண் கிள்ளி என்னும் சோழன் இவ்வூர் அரசன். நீர்நாய் வாளைமீனை மேயும் வளமான பொய்கைகளைக் கொண்டது இவ்வூர். [2]
இவற்றையும் பார்க்க
ஆதாரங்கள்
- ↑ (முடத்தாமக் கண்ணியார் - பொருநராற்றுப்படை - அடி 147)
- ↑ (ஔவையார் - நற்றிணை 390)