வெள்வேல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வெள்வேல்
ஐதராபாத், வனஸ்தாலிபுரத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Vachellia
இனம்:
V. leucophloea
இருசொற் பெயரீடு
Vachellia leucophloea
(Roxb.) Maslin, Seigler & Ebinger
varieties
  • Vachellia leucophloea var. leucophloea (Roxb.) Maslin, Seigler & Ebinger
  • Vachellia leucophloea var. microcephala (Kurz) Maslin, Seigler & Ebinger
வேறு பெயர்கள்
  • Acacia leucophloea (Roxb.) Willd.
  • Mimosa leucophloea Roxb.
  • Kuteera-gum

வெள்வேல் அல்லது வெள்ளை வேலம் (Vachellia leucophloea) என்பது ஆகும்.இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மிதமான அளவு மரமாகும்.[1][2]

பரவல்

வெள்வேல் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் இந்தோனேசியாவில் பூர்வீகமாக வளர்கிறது.[1]

விளக்கம்

இம்மரம் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை உடைய கரிய முள்ளுள்ள பெருமரமாகும். மரத்தின் புறப்பரப்பு வெண்ணிறமாகவும், உட்புறம் மஞ்சளாகவும் இருக்கும். மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் தட்டையானவை. காடுகளிலும், தரிசுநிலங்களிலும் தமிழகத்தில் எங்கும் தானே வளர்கிறது. இதன் இலை, பட்டை, வேர், பிசின் விதை ஆகியவை மருத்துவப்பயன் உள்ளவை. [3]

சிறப்பு

திருவேற்காடு என்னும் தலத்தில் தல விருட்சமாக விளங்குவது வெள்வேல் மரமாகும். தலத்தின் பெயர் வேல்காடு என மரத்தின் பெயராலேயே அமைந்துள்ளது.[4]

பயன்கள்

இந்த மரம் மரக்கரி செய்யப் பயன்படுகிறது. வெள்ளை வேல மரத்தின் பட்டைகள் நாட்டுச் சாராயம் காய்ச்சும்போது மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்

  1. 1.0 1.1 "Acacia leucophloea (Roxb.) Willd". PROSEA. Archived from the original on 2020-06-09. Retrieved 2020-06-09.
  2. "1 100 Tree Directory of Punjab | PDF". www.scribd.com. Retrieved 2025-08-18.
  3. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.81
  4. http://www.shaivam.org/sv/sv_velam.htm
  5. காங்கயம் பகுதியில் வெள்ள வேலமர பட்டை மரங்கள் மடியும் அபாயம், தினகரன், 26. மார்ச் 2024
"https://tamilar.wiki/w/index.php?title=வெள்வேல்&oldid=503104" இலிருந்து மீள்விக்கப்பட்டது