வெ. நல்லதம்பி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

வெ. நல்லதம்பி (பிறப்பு: சூன் 1, 1936) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சி மாவட்டம் செட்டியபட்டியில் பிறந்த இவர் திருச்சி மாவட்டப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் “தொலைக்காட்சித் தமிழ்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். ஆனந்தனின் ஆசை, தொலைக்காட்சிக் கலை, ஒரு சுகமான அனுபவம் முதலிய 10 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "ஒலி நாடக வடிவில் சிலப்பதிகாரம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை ) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=வெ._நல்லதம்பி&oldid=501477" இலிருந்து மீள்விக்கப்பட்டது