வேடன் (பாடகர்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேடன்
The rapper is on stage holding a microphone
2024 இல் வேடன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்വേടൻ
இயற்பெயர்ஹிரந்தாஸ் முரளி
பிறப்பு25 அக்டோபரில் 1994 (30 வயது)
திருச்சூர், கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
இசைத்துறையில்2020–தற்போது

வேடன் என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ராப்பிசைப் பாடகரும், பாடலாசிரியரும் ஆவார்.[1][2] 2020 ஆம் ஆண்டில் இவர் "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" என்ற தனது முதல் இசைக் காணொளி மூலம் முக்கியத்துவம் பெற்றார். இது ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான வருணனைக்காக பரவலாக கவனம் பெற்றது. வேடனின் இசை மலையாளம் மற்றும் தமிழ் ராப் இசையை இணைத்து, இவரது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தும் கேரளத்தின் சமூக-அரசியல் நிலப்பரப்பிலிருந்தும் உத்வேகம் பெற்றதாக உள்ளது.

தொழில்

2020 சூனில் " வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் " என்ற பெயரிலான தனது முதல் இசைக் காணொளியை யூடியூப்பில் வெளியிடப்பட்டதன் மூலம், வேடன் முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றார்.[3][4] அப்போது இவரது வயது 25 ஆகும்.[5] அதே ஆண்டில், இவர் " பூமி நான் வாழுந்நிடம் " என்ற தனது இரண்டாவது இசைக் காணொளிய வெளியிட்டார்.[6] 2024 ஆம் ஆண்டில், வேடன் சுசின் சியாமுடன் இணைந்து மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் " குத்தந்திரம் " என்ற பாடலுக்கான பாடல் வரிகளை எழுதினார்.[7]

2020: "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" பாடலால் திருப்புமுனை

"வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" என்ற தனது முதல் இசை காணொளியை யூடியூப்பில் வெளியிட்டதன் மூலம், வேடன் 2020 சூனில் பிரபலமடைந்தார். அகில் ராமச்சந்திரன் இயக்கிய இந்தப் பாடல், ஹிருத்விக் சசிகுமாரால் ஒளிப்பதிவு செய்யபட்டது. சாதிவெறி, நிறவெறி, இவரது சேரியில் இருந்த ஒதுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களைப் பற்றி இதில் பேசப்பட்டது. இது 600,000 இக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. மேலும் அதன் கரடுமுரடான, அலட்சியமான பாடல் வரிகளுக்காக பரவலான பாராட்டைப் பெற்றது. வேடனை ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலாக இது நிறுவியது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், இவர் தனது இரண்டாவது இசைக் காணொளியான "பூமி நான் வாழுந்நிடம்" ஐ வெளியிட்டார், இது மலையாள ராப் பாடல் உலகில் இவரது இருப்பை மேலும் உறுதிப்படுத்தியது.

2021–2023: தொடர்ச்சியான பணிகளும் திரைப்பட பங்களிப்புகளும்

2021 ஆம் ஆண்டில், வேடன் மலையாளத் திரைப்படமான நயாட்டில் படத்தில் இடம்பெற்ற "நரபலி" என்ற பாடலில் பங்களித்தார். அதே ஆண்டு வெளியிடப்பட்ட இவரது இசைக் காணொளியான "வா", உழைப்பு, வேற்றுமை, அன்றாடப் போராட்டங்கள் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டதாக இருந்தது. அதன் சமூக-அரசியல் ஆழத்திற்காக கவனத்தைப் பெற்றது. 2020 ஆம் ஆண்டு கொச்சி மியூசிக் பவுண்டேஷனின் பாரா ஹிப் ஹாப் விழாவிலும் இவர் நிகழ்ச்சி நடத்தினார். அங்கு இவரது 15 நிமிட நிகழ்ச்சி இளைஞர்களின் ஆற்றலை ஆர்வலர்களின் ஈர்ப்புடன் கலந்தது ஒரு சிறப்பம்சமாக இருந்தது, .

2023 ஆம் ஆண்டில், வேடன் கரமின் பாடல் தொகுப்புக்காக "லா விடா" பாடலையும், ஆல் வி இமாஜின் ஆஸ் லைட் பாடல் தொகுப்புக்காக "கிஸ்சஸ் இன் தி க்ளவுட்ஸ்" என்ற பாடலையும் எழுதி பாடினார். இந்தக் காலகட்டத்தில் இவரது பணி, இசை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இவரது அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது. இப்பாடல்கள் பெரும்பாலும் நாட்டுப்புற பேச்சுவழக்குகள் மற்றும் தமிழ் தாக்கங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

2024: மஞ்சும்மெல் பாய்சில் அங்கீகாரம்

மலையாள பெருவெற்றிப் படமான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இசையமைப்பாளரான சுசின் சியாமுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் வேடன் முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றார். "கூத்தந்திரம்" என்ற பாடலுக்கான பாடல் வரிகளை இவர் எழுதி பாடினார். இது பிரபலமான பாடலாக மாறியது, தென்னிந்திய இசைத் துறையில் இவரின் வளர்ச்சிக்கு இது உதவியது. நோ வே அவுட் படத்தில் இடம்பெற்ற "மரணத்தின் நிறம்" என்ற பாடலிலும் இவர் பங்காற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

வேடன் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தார். இவரின் தாயார் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு ஈழத் தமிழர். இவரது தாய் தன் திருமணத்திற்கு முன்பு தமிழ்நாட்டின் உதகமண்டலத்துக்கு குடிபெயர்ந்து வந்திருந்தார். வேடனின் தந்தை முரளி கேரளத்தின் திருச்சூரில் பிறந்த மலையாளி .[5] வேடன் திருச்சூர் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்வப்னபூமி என்ற இல்லத்தில் வளர்ந்தார்.[3]

சர்ச்சைகள்

பாலியல் துஷ்பிரயோகம்

2021 ஆம் ஆண்டில், மி டூ இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒரு முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு மூலம், வேடன் மீது சில பெண்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச் சாட்டுகளைத் தெரிவித்தனர்.[8] பின்னர் இவர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக மன்னிப்புக் கேட்டார்.[9]

போதைப்பொருள் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பொருட்களை வைத்திருத்தல்

2025 ஏப்ரல் 28 அன்று, கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 6 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததற்காக வேடனும் அவரது 8 நண்பர்களும் கேரள கலால் துறையால் கைது செய்யப்பட்டனர்.[10][11][12]

இதற்கிடையில், போதைப்பொருள் வைத்திருந்ததைத் தொடர்ந்து இவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, அதிகாரிகள் இவரது கழுத்துச் சங்கிலியில் புலிப் பல்லைக் கோர்த்திருப்பதைக் கண்டுபிடித்தனர். வேடன் அதை தாய்லாந்தில் வாங்கியதாகக் கூறினார். போதைப்பொருள் வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சிறிது நேரத்திலேயே கேரள வன மற்றும் வனவிலங்குத் துறை வேடனைக் காவலில் எடுத்தது. வனத்துறை அதிகாரிகள் அந்தப் பற்கள் உண்மையில் புலிகளுடையவையா என்பதை சரிபார்த்தது.[13][14][15]

புலிப் பல்லை வைத்திருந்ததாக வேடன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சூரைச் சேர்ந்த ஒருவர் சுரேஷ் கோபி மீது அதே குற்றத்தைக் கூறி புகார் அளித்தார். பின்னர், வேடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[16]

இசைத் தொகுப்பு

பின்னணிப் பாடகராக

ஆண்டு பாடல் திரைப்படம் இசையமைப்பாளர் இணை பாடகர்(கள்) குறிப்புகள் மேற்கோள்.
2021 "நரபாலி" நாயாட்டு விஷ்ணு விஜய் பாடலாசிரியர், பாடகர் [17]
2022 "மரணத்தின் நிறம்" நோ வே அவுட் ஹ்ரிஷி
"பாஞ்சு பாஞ்சு" படவெட்டு கோவிந்த் வசந்தா
2024 "கூத்தந்திரம்" மஞ்சும்மல் பாய்ஸ் சுஷின் ஷ்யாம் பாடலாசிரியர், பாடகர்
"கொண்டல் வேடன் பாடல்" கொண்டல் சாம் சி. எஸ். பாடலாசிரியராகவும்
"மேகங்களில் முத்தங்கள்" ஆல் வி இமேஜ் ஆஸ் லைட் டாப்ஷே ஹனியா நஃபீசா
2025 "வாத வேடம்" நரிவேட்ட திப்புஷன், ஷியாஸ் ஹாசன் ஜேக்ஸ் பிஜாய் பாடலாசிரியராகவும்

இசைத் தொகுப்புகள்

ஆண்டு இசைத் தொகுப்புகள் பாடல்(கள்) இணை கலைஞர்(கள்) வில்லை குறிப்புகள் மேற்கோள்.
2023 கரம் லா விடா கே.எஸ்.எச்.எம்.ஆர், டாப்ஸி மாஸ் ஆப்பியல் இந்தியா / தர்மா உலகளாவிய KSHMR பாடல் தொகுப்புக்காக பாடியுள்ளார், மேலும் பாடல் வரிகளை எழுதினார்.

தனிப் பாடல்கள்

ஆண்டு தலைப்பு இணை கலைஞர்(கள்) வில்லை குறிப்புகள் மேற்கோள்.
2020 "வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்" கெவின் சோனி தயாரிப்பு
2021 "வா"
"புதனாயி பிற"
2023 "சோசியல் கிரிமினல்" ஹிருஷியால் தாளக்கட்டு இடப்பட்டது

மேற்கோள்கள்

  1. "Vedan is a huge hit at Kochi Music Foundation hip hop festival". Times of India இம் மூலத்தில் இருந்து 27 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240227092035/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/vedan-is-a-huge-hit-at-kochi-music-foundation-hip-hop-festival/articleshow/80190497.cms. 
  2. "Double edged word". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 8 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240308121954/https://www.newindianexpress.com/cities/kochi/2020/Jun/19/double-edged-word-2158363.html. 
  3. 3.0 3.1 "Meet Vedan, whose Malayalam anti-caste rap song is a hit" இம் மூலத்தில் இருந்து 27 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240227105913/https://www.thenewsminute.com/kerala/meet-vedan-whose-malayalam-anti-caste-rap-song-hit-126676. "Meet Vedan, whose Malayalam anti-caste rap song is a hit". The News Minute. Archived from the original on 27 February 2024. Retrieved 27 February 2024.
  4. "Malayalam rapper Vedan's songs of the hunted". The Hindu இம் மூலத்தில் இருந்து 8 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240308121954/https://www.thehindu.com/entertainment/music/rapper-vedans-art-is-his-politics/article59859483.ece. 
  5. 5.0 5.1 "I am my own inspiration: How Malayalam rapper Vedan became the 'Voice of the Voiceless'" இம் மூலத்தில் இருந்து 27 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240227092031/https://www.edexlive.com/people/2020/jul/28/i-am-my-own-inspiration-how-malayalam-rapper-vedan-became-the-voice-of-the-voiceless-13528.html. 
  6. "The earth where I reign, day by day turns into hell; Hunter again with sharp words". Madhyamam இம் மூலத்தில் இருந்து 27 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240227092030/https://www.madhyamam.com/entertainment/music/bhoomi-njan-vazhunidam-official-music-video-vedan-596610. 
  7. "Sushin Shyam collaborates with Vedan for Manjummel Boys first single" இம் மூலத்தில் இருந்து 24 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240324154251/https://www.cinemaexpress.com/malayalam/news/2024/Jan/25/sushin-shyam-collaborates-with-vedan-for-manjummel-boys-first-single-51513.html. 
  8. "Malayalam rapper Vedan, known for anti-caste songs, accused of sexual misconduct" இம் மூலத்தில் இருந்து 27 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240227105913/https://www.theweek.in/news/entertainment/2021/06/13/malayalam-rapper-vedan-known-for-anti-caste-songs-accused-of-sexual-misconduct.html. 
  9. "Rapper Vedan apologises for 'lapses in conduct'" இம் மூலத்தில் இருந்து 27 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240227111059/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/rapper-vedan-apologises-for-lapses-in-conduct/articleshow/83478432.cms. 
  10. "Rapper Vedan Held with Ganja in Kochi Amid Drug Crackdown". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2025-04-28.
  11. "Kerala rapper Vedan arrested after ganja seized from flat" (in en-IN). https://www.thehindu.com/news/national/kerala/kerala-rapper-vedan-arrested-after-ganja-seized-from-flat/article69500598.ece/. 
  12. "Rapper Vedan, 8 others arrested after ganja seizure from flat; singer faces forest dept probe too". www.onmanorama.com. Retrieved 2025-04-28.
  13. "Tiger tooth on chain? Trouble mounts for rapper Vedan as Forest Department steps in". https://english.mathrubhumi.com/movies-music/news/tiger-tooth-on-chain-trouble-mounts-for-rapper-vedan-as-forest-department-steps-in-l06iunhw. 
  14. . https://www.manoramaonline.com/news/latest-news/2025/04/28/rapper-vedan-tiger-tooth-controversy.html. 
  15. "Ganja seized from flat; Vedan and friends granted bail; Forest Dept registers case against rapper under non-bailable sections for wearing chain consisting tiger's tooth". keralakaumudi.com. Retrieved 2025-04-29.
  16. "'Why jail Vedan for leopard tooth pendant but not Suresh Gopi?': Man files complaint". english.mathrubhumi.com. Retrieved 2025-05-03.
  17. "'നായാട്ടി'ലെ വേടന്‍റെ 'നരബലി' പാട്ട്; 'നായാട്ടിന് നരബലിയിരനീ ഞാൻ' ശ്രദ്ധേയമാകുന്നു". https://malayalam.samayam.com/malayalam-cinema/malayalam-songs/narabali-video-song-from-nayattu-by-vedan/articleshow/82142799.cms. 
"https://tamilar.wiki/w/index.php?title=வேடன்_(பாடகர்)&oldid=503935" இலிருந்து மீள்விக்கப்பட்டது