ஸ்நேகா ஜவாலே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஸ்நேகா ஜவாலே
பிறப்பு1977 (அகவை 48–49)
பணிசமூக சேவகி, பெண்களுக்கு எதிரான வன்முறையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்கான செயற்பாட்டாளர், ஜோதிடர், நாடக நடிகை மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளினி.
பணியகம்பிபிசி இந்தியா
வலைத்தளம்
snehajawale.com

ஸ்நேகா ஜவாலே (Sneha Jawale) (பிறப்பு: 1977) இந்திய சமூகப் பணியாளர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டாளர் ஆவார். இவர் ஜோதிடராகவும், நடிகையாகவும், மேலும் பிபிசி இந்தியாவிற்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

ஸ்நேகா ஜவாலே இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்தவர். இவர் இருபது வயதில் திருமணம் செய்து கொண்டார்.[1] 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இவரது கணவர் கேட்ட கூடுதல் வரதட்சணையை இவரது பெற்றோரால் வழங்க முடியவில்லை.[2] இதனைத் தொடர்ந்து, இவரது கணவர் அவர்கள் நான்கு வயது மகனின் முன்னிலையில் ஸ்நேகா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.[3] இந்தத் தாக்குதலில் ஸ்நேகா உடலின் சுமார் எண்பது விழுக்காடு பகுதி தீக்காயமடைந்தது. இவர் இரண்டரை மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.[4] தாக்குதலுக்குப் பிறகு, காவல்துறையில் புகார் அளிக்க வேண்டாம் என்று இவரது கணவர் இவரது குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் இவர் உஸ்மானாபாத் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த விவாகரத்து வழங்கப்பட்டதுடன், இவர்களது மகனையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.[5][6] விவாகரத்திற்குப் பிறகு, ஸ்நேகா தனது நகைகளை விற்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கல்வித் துறையில் பட்டம் பெற்றார். ஊதியம் வழங்கும் வேலை கிடைக்காத காரணத்தால், வாழ்வாதாரத்திற்காக ஜோதிடராகவும் டாரோ அட்டைகள் மூலம் ஆலோசனை வழங்குபவராகவும் பணியாற்றத் தொடங்கினார். அதே நேரத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூகச் செயற்பாட்டாளராகவும் உருவெடுத்தார்.

2013 ஆம் ஆண்டு உலகளாவிய பெண்கள் உரிமை இயக்கங்களில் ஒன்றான ஒன் பில்லியன் ரைசிங் இயக்கத்திலும் பங்கேற்றார். 2014 ஆம் ஆண்டு, யேல் ஃபேபர் இயக்கிய நிர்பயா என்ற மேடை நாடகத்தில் நடித்தார். [7] இந்த நாடகம் உலகம் முழுவதும் சுமார் 300 முறை அரங்கேற்றப்பட்டது.[8] 2012 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறை, கொலைச் சம்பவத்தின் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்குப் பயன்படுத்தப்பட்ட புனைப்பெயரிலிருந்து இந்த நாடகத்திற்கு பெயரிடப்பட்டது. [9][10][11] இந்தியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நாடகத்தில், ஸ்நேகா தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.[12][13] மேலும், பிபிசி இந்தியாவில் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி, விளக்கக் காணொளிகளை வழங்கியுள்ளார்.[14] 2022 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் சமூக மாற்றத்திற்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த பெண்களைப் பாராட்டும் பட்டியலில் இடம்பெற்று சிறப்பிக்கப்பட்டார்.[15]

மேற்கோள்கள்

  1. Chandani, Priyanka. "Burns Survivor Sneha Jawale Is A BBC Guest Presenter". Free Press Journal (in ஆங்கிலம்). Archived from the original on 7 April 2025. Retrieved 2025-04-07.
  2. Siddiqui, Kashif; Divya, Arya (6 December 2022). "'I say I am beautiful, so I am'" (in en-GB). BBC News இம் மூலத்தில் இருந்து 7 April 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250407223043/https://www.bbc.co.uk/news/av/world-63854630. 
  3. Brantley, Ben (2015-04-27). "Review: 'Nirbhaya,' a Lamentation and a Rallying Cry for Indian Women" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 28 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170928010500/https://www.nytimes.com/2015/04/28/theater/review-nirbhaya-a-lamentation-and-a-rallying-cry-for-indian-women.html. 
  4. Chandani, Priyanka (2023-07-19). "Burned alive by her husband, Sneha Jawale raises awareness about domestic violence, works for BBC India". Orato (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-07.
  5. Deshpande, Haima (2012-01-07). "'If You Don't Like My Face, Don't look'". Open The Magazine (in ஆங்கிலம்). Archived from the original on 7 April 2025. Retrieved 2025-04-07.
  6. Fadhilah, Hasna Azmi (2023-01-14). "Sneha Jawale: Melawan Stigma KDRT di India". She Builds Peace (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-07-29.
  7. Ghose, Anindita (2014-03-14). "Q&A with the director of 'Nirbhaya'". Vogue India (in Indian English). Archived from the original on 7 April 2025. Retrieved 2025-04-07.
  8. "Burn injury and domestic violence survivor, Sneha Jawale is BBC's new guest presenter". Newslaundry (in ஆங்கிலம்). 2023-05-23. Retrieved 2025-07-29.
  9. Roy, Sandhip (2012-12-24). "Why does media want to give Delhi gangrape victim a name?". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 28 September 2022. Retrieved 2025-04-07.
  10. "Nirbhaya 10 years on: The lives the Delhi gang rape changed" (in en-GB). BBC News. 2022-12-06 இம் மூலத்தில் இருந்து 7 April 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250407223043/https://www.bbc.co.uk/news/world-63817388. 
  11. Das, Kavita (2022-10-04). Craft and Conscience: How to Write About Social Issues (in ஆங்கிலம்). Beacon Press. pp. 51–52. ISBN 978-0-8070-4649-4.
  12. "BBC 100 Women 2022: Who is on the list this year?". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 7 December 2022. Retrieved 2025-04-07.
  13. Diamond, Elin; Varney, Denise; Amich, Candice (2017-04-29). Performance, Feminism and Affect in Neoliberal Times (in ஆங்கிலம்). Springer. pp. 111–112. ISBN 978-1-137-59810-3.
  14. The Quint (2023-06-05). Burn Survivor to BBC Presenter: Sneha Jawale's Story of Defiance. Archived from the original on 19 June 2023. Retrieved 2025-04-07 – via YouTube.
  15. Press Trust of India (2022-12-06). "4 Indians on BBC's 100 Women' list of influential figures of 2022" (in en) இம் மூலத்தில் இருந்து 2022-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221212072846/https://www.business-standard.com/article/current-affairs/4-indians-on-bbc-s-100-women-list-of-influential-figures-of-2022-122120601154_1.html. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்நேகா_ஜவாலே&oldid=506063" இலிருந்து மீள்விக்கப்பட்டது