1-பீனைலெத்திலமீன்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-பீனைலீத்தேன்-1-அமீன்
| |
| வேறு பெயர்கள்
(±) 1-பீனைலெத்திலமீன்; (±)-α-மெத்தில்பென்சைலமீன்
| |
| இனங்காட்டிகள் | |
| 618-36-0 | |
| ChEBI | CHEBI:670 |
| ChEMBL | ChEMBL278059 |
| ChemSpider | 7130 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
| |
| பண்புகள் | |
| C8H11N | |
| வாய்ப்பாட்டு எடை | 121.18 g·mol−1 |
| அடர்த்தி | 0.94 கி/மி.லி |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள்
|
அரிக்கும் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
1-பீனைலெத்திலமீன் (1-Phenylethylamine) என்பது C8H11N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒற்றை அமீன் என வகைப்படுத்தப்படும் இந்த நிறமற்ற திரவம் பெரும்பாலும் நாற்தொகுதி தீர்மானங்களில் பயன்படுத்தப்படுகிறது. பென்சைலமீன் போலவே 1-பீனைலெத்திலமீன் சேர்மமும் மிகைக் காரமாகச் செயல்படுகிறது. மேலும் இச்சேர்மம், நிலையான அமோனியம் உப்புகளையும் இமின்களையும் உருவாக்குகிறது
இவ்வினைக்கு உகந்த பல்வேறு தரநிபந்தனைகளுக்கு உட்பட்டு , அசிட்டோபீனோனை குறைத்தல் வினைக்கு உட்படுத்தி அமைனேற்றம் செய்வதன் மூலம் 1-பீனைலெத்திலமீன் தயாரிக்க முடியும். மிக்னோனாக் வினை எனப்படும் அமைனேற்ற முறையில் ஐதரசன் வாயுவை குறைக்கும் முகவராகப் பயன்படுத்தி 1-பீனைலெத்திலமீன் தயாரிக்கும் முறையே பிரதானமான ஒரு வழிமுறையாகும்.:[2]
அமோனியம் பார்மேட்டைப் பயன்படுத்தும் இலியூக்கார்ட் வினையிலும் இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்[3][4].
மேற்கோள்கள்
- ↑ 1-Phenylethylamine - PubChem Public Chemical Database
- ↑ John C. Robinson, Jr. and H. R. Snyder (1955). "α-Phenylethylamine". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0717.; Collective Volume, vol. 3, p. 717
- ↑ Mann, F. G.; Saunders, B. C. (1960). Practical Organic Chemistry, 4th Ed. London: Longman. pp. 223–224. ISBN 9780582444072.
- ↑ A. W. Ingersoll (1937). "α-Phenylethylamine". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0503.; Collective Volume, vol. 17, p. 76