11 மில்லியன் இலக்கு திட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

11 மில்லியன் இலக்குத் திட்டம் (Mission XI Million - MXIM), இந்திய ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் ஆதரவுடன் 2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய பள்ளி தொடர்புத் திட்டமாகும். இது பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை அணுகுவதன் மூலம் இந்தியாவில் பள்ளி மட்டத்தில் காற்பந்தாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதனை விளையாடும் முறையை அவர்கள் பள்ளியளவில் அறிந்துகொள்ளச் செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் எதிர்காலத்தில் காற்பந்தாட்டம் இந்தியாவில் விருப்ப விளையாட்டாக மாற்றுவதே இதன் இறுதி இலக்காக இருந்தது. இது 11 மில்லியன் பள்ளிக்குழந்தைகளை “பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை” இந்தியா 2017 காற்பந்து போட்டியை இலக்கு வைத்துப் பயிற்றுவிக்கும் விதமாக தொடங்கப்பட்ட திட்டமாகும்.[1][2] 2017 ஆம் ஆண்டிற்குள் 11 மில்லியன் பள்ளிக் குழந்தைகளை கால்பந்தில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது. [3]

அதிகாரப்பூர்வ துவக்கம்

ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரபுல் படேல் ஆகியோரால் பிப்ரவரி 6 ,2017இல் சவகர்லால் நேரு அரங்கத்தில், 2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இன் அதிகாரப்பூர்வ சின்னத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. [4]

பெரிய நகரங்களில் அல்லது வசதியான சூழல் இருந்தால் தான் விளையாட முடியும் எனும் கருத்தை மாற்றி இந்தியாவில் எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் வசிக்கும் மாணவர்களால் கால்பந்து விளையாட இயலும் என்ற நம்பிக்கையினை வளர்ப்பது தான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.[5]

குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், மற்றும் குழுப்பணி மற்றும் விளையாட்டு வீரர் மனப்பான்மையில் மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் தொடர்பு மற்றும் வசதிகளைப் பயன்படுத்துகிறது. பள்ளி முதல்வர்கள், விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் இணைந்து ஓர் அலகாக இணைந்து பணியாற்றுவதே இதன் அணுகுமுறையாகும், இதன் மூலம் பள்ளிகள், தங்கள் மாணவர்களை கால்பந்து நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதன் மூலம் திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். தற்போதுள்ள வசதிகளுக்குள்ளேயே தங்கள் குழந்தைகளை கால்பந்து விளையாடுவதை பள்ளிகள் ஆதரித்து, இயக்கி, ஊக்கப்படுத்தினர், அதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் அடிப்படை கால்பந்து உபகரணங்கள் (கால்பந்துகள் மற்றும் கையேடுகள்) வழங்கப்பட்டன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்