1729 இன் வால்வெள்ளி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Comet

1729 இன் வால்வெள்ளி (Comet of 1729, அல்லது C/1729 P1 அல்லது சரபாத் வால்வெள்ளி (Comet Sarabat) என்பது காலச்சுழற்சி அற்ற ஒரு வால்வெள்ளி ஆகும். தனி ஒளிப்பொலிவெண் −3[1] என்ற எண்ணைக் கொண்ட இவ்வால்வெள்ளி இதுவரை அவதானிக்கப்பட்டவற்றுள் ஒளிர்ப்புக் கூடியதாகும்.[2] எனவே இதுவே இதுவரை காணப்பட்ட வால்வெள்ளிகளுள் மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.[3]

கண்டுபிடிப்பு

இந்த வால்வெள்ளி எக்கூலியசு என்ற விண்மீன் குழாமில் இருப்பதை நிக்கொலாசு சரபாத் என்ற குருவானவர் கண்டுபிடித்தார். மர்சேய் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியரும், இயேசு சபையைச் சேர்ந்தவருமான இவர் 1729 ஆகத்து 1 இல் அதிகாலையில் இதனைக் கண்டுபிடித்தார்.[4]

மேற்கோள்கள்

  1. Kidger, M. 'Comet Hale-Bopp Light Curve', NASA JPL, 24-Nov-2008 அன்று பார்க்கப்பட்டது.
  2. இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சீசர் வால்வெள்ளி (C/-43 K1) −3.3 தனி ஒளிப்பொலிவெண் கொண்டதாக இருந்தது; cp. John T. Ramsey & A. Lewis Licht, The Comet of 44 B.C. and Caesar's Funeral Games, Atlanta, 1997, ISBN 0-7885-0273-5.
  3. Moore, P. The Data Book of Astronomy, CRC, 2000, p.232
  4. Lynn, W. T. 'Sarrabat and the comet of 1729', The Observatory, Vol. 19, p. 239–240 (1896).

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=1729_இன்_வால்வெள்ளி&oldid=146281" இருந்து மீள்விக்கப்பட்டது