1729 (எண்)
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பது | |||
வரிசை | 1729ஆவது ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பதாவது | |||
காரணியாக்கல் | 7 · 13 · 19 | |||
காரணிகள் | 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 | |||
ரோமன் | MDCCXXIX | |||
கிரேக்க முன்குறி | ,αψκθ | |||
இரும எண் | 110110000012 | |||
முன்ம எண் | 21010013 | |||
நான்ம எண் | 1230014 | |||
ஐம்ம எண் | 234045 | |||
அறும எண் | 120016 | |||
எண்ணெண் | 33018 | |||
பன்னிருமம் | 100112 | |||
பதினறுமம் | 6C116 | |||
இருபதின்மம் | 46920 | |||
36ம்ம எண் | 1C136 |
ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பது அல்லது இராமானுச எண் அல்லது 1729 (One Thousand Seven Hundred and Twenty-Nine அல்லது Ramanujan Number) என்பது தமிழ் எண்களில் ௧௭௨௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] 1729 என்பது 1728 இற்கும் 1730இற்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
சீ. எச்சு. ஆரிடி சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார்.[2] உடனே, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.[3]
அவ்விரு வழிகளும் பின்வருமாறு:-
[math]\displaystyle{ 1729 = 1^3 + 12^3 = 9^3 + 10^3 }[/math][4]
மேலும் 1729 என்ற எண்ணைப் பிரித்து1+7+2+9 என கூட்டினால் 19 வரும். இந்த 19 ஐ திருப்பிப் போட்டால் 91 என்று வரும். இப்போது 19ஐயும் 91 ஐயும் பெருக்கினால் 1729 என்ற எண் விடையாக வரும். இதுவும் இந்த எண்ணுக்கான ஒரு சிறப்பு.
காரணிகள்
1729இன் நேர்க் காரணிகள் 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 என்பனவாகும்.[5]
இயல்புகள்
- 1729 ஓர் ஒற்றை எண்ணாகும்.
- 1729 என்பது இரண்டு நேர்க் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகவும் சிறிய எண் ஆகும்.
- [math]\displaystyle{ 1729 = 1^3 + 12^3 = 9^3 + 10^3 }[/math]
- 1729 ஒரு கார்மைக்கேல் எண்ணாகும்.[6]
மேற்கோள்கள்
- ↑ ஹார்டி-இராமானுசன் எண் (ஆங்கில மொழியில்)
- ↑ 1729 (எண்) (ஆங்கில மொழியில்)
- ↑ ஜி. எச். ஹார்டியின் மேற்கோள்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஹார்டி-இராமானுஜன் எண் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-05-28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03. ஹார்டி-இராமானுஜன் எண் (ஆங்கில மொழியில்)]
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வொல்பிராம் அல்பா (ஆங்கில மொழியில்)