1936 கேஎல்எம் கிராய்டன் விபத்து
வார்ப்புரு:Infobox Aircraft occurrence
1936 கேஎல்எம் கிராய்டன் விபத்து (1936 KLM Croydon accident) எனும் இது, 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாளன்று, கேஎல்எம் விமான நிறுவனம் இயக்கிவரும் "டக்ளஸ் டிசி 2-115ஈ" (Douglas DC-2-115E) (பதிவு எண்:PH-AKL) வகையை சார்ந்த "லிஜ்ச்ட்டர்" (Lijster (Turdidae) (தமிழில்: அமெரிக்க பாடும் பறவை) எனும் பெயருடைய வானூர்தி ஒன்று, வழமையாக திட்டமிட்டப்படி, தெற்கு இலண்டனில் உள்ள கிராய்டன் விமான நிலையத்திலிருந்து, நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமுக்கு புறப்படும் தருணத்தில் மூடுபனி காரணமாக விபத்துக்குள்ளான நிகழ்வாகும். இப்பயணத்தின்போது சேவைப் பணியாளர்கள் 4 பேர்களும், பயணிகள் 13 பேர்களுமாக மொத்தம் 17 பேர்கள் இருந்துள்ளனர். இந்தத் திடீர் வானூர்தி விபத்தில், பணியாளர்கள் மூவரும், பயணிகள் 12 பேர்களும் கொல்லப்பட்டு, இருதரப்பிலும் தலா ஒருவரென்று இருவர் காயங்களுடன் உயிர்த்தப்பினார்கள்..[1]
மேற்கோள்கள்
- ↑ "Accident description". Aviation-safety.net - 1996-2016. Archived from the original on 2014-01-13. பார்க்கப்பட்ட நாள் 2016-09-07.