1957 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
Jump to navigation
Jump to search
![]() | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
படிமம்:1957 Indian Presidential Election.svg | ||||||||||||||||||||
|
இந்தியக் குடியரசின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1957 ல் நடைபெற்றது. 1950 முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் குடியரசுத் தலைவரானார்.
பின்புலம்
மே 6, 1957ல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த ராஜேந்திர பிரசாத் அனைத்து சாரருக்கும் ஏற்புடையவராக இருந்தார். பல எதிர்க்கட்சிகளும் அவரைத் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு போட்டி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. கட்சி சார்பற்ற வேட்பாளராகவே அவர் போட்டியிட்டார். மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மிகப்பெரும்பாலான கட்சிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த ராஜேந்திர பிரசாத் 99 % வாக்குகளுடன் எளிதில் வெற்றி பெற்றார்.
முடிவுகள்
வேட்பாளர் | வாக்காளர் குழு வாக்குகள் |
---|---|
ராஜேந்திர பிரசாத் | 4,59,698 |
சவுதிரி ஹரி ராம் | 2,672 |
நாகேந்திர நாராயண் தாஸ் | 2,000 |
மொத்தம் | 4,64,370 |