1961 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox games

1961 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1961; ஆங்கிலம்: 1961 Southeast Asian Peninsular Games,) என்பது 2-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும்.[1]

சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் இரண்டாவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.

இந்த விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வு, தாய்லாந்தின் பாங்காக்கில் 1959 டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 1959 டிசம்பர் 16-ஆம் தேதி வரை, 12 விளையாட்டுகளுடன் நடைபெற்றது.

முதல் முறையாகத் தாய்லாந்து இந்த விளையாட்டுகளை நடத்தியது. இந்தத் தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் பின்னர் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் என்று மாற்றம் கண்டது.

ஏழு உறுப்பிய நாடுகளும் முதன்முறையாகக் கலந்து கொண்டன. மியான்மர், (பர்மா) இந்த விளையாட்டுகளை நடத்தியது.[2] தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகளை நடத்தும் இரண்டாவது நாடு மியான்மர். இந்த விளையாட்டு நிகழ்விற்குப் பிறகு இந்த நிகழ்வு, தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் என்று அழைக்கப்பட்டது.

யங்கோன் போக்யோக் ஆங் சான் அரங்கத்தில் (Bogyoke Aung San Stadium) பர்மாவின் அதிபர் வின் மாங் (Win Maung), இந்த விளையாட்டு நிகழ்வைத் திறந்து வைத்தார். இறுதிப் பதக்கப் பட்டியலில் பர்மாவும், தாய்லாந்தும், அதைத் தொடர்ந்து மலாயாவும் (மலேசியா) முன்னிலை வகித்தன.[1]

விளையாட்டுகள்

பங்கேற்பு நாடுகள்

விளையாட்டு

பதக்க அட்டவணை

      போட்டி நடத்திய நாடு (பர்மா)

1  மியான்மர் 35 26 43 104
2 வார்ப்புரு:நாட்டுத் தகவல் THA 21 18 22 61
3  மலேசியா 16 24 39 79
4 வார்ப்புரு:நாட்டுத் தகவல் SIN 4 13 11 28
5 வார்ப்புரு:நாட்டுத் தகவல் VIE 9 5 8 25
6 வார்ப்புரு:நாட்டுத் தகவல் CAM 1 6 4 11
7 வார்ப்புரு:நாட்டுத் தகவல் LAO 0 0 8 8

மேற்கோள்

  1. 1.0 1.1 "OCA » Rangoon 1961 - The 2nd Southeast Asian Peninsular Games were held in Rangoon, Burma from 11 December - 16 December 1961". ocasia.org. பார்க்கப்பட்ட நாள் 20 March 2022.
  2. Percy Seneviratne (1993) Golden Moments: the S.E.A Games 1959-1991 Dominie Press, Singapore ISBN 981-00-4597-2

வெளி இணைப்புகள்