இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1969
|
← 1967 |
30 ஆகத்து 1969 |
1974 → |
|
|
|
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1969 என்பது 30 ஆகத்து 1969 அன்று நடைபெற்றது. இந்தியாவின் நான்காவது துணைக் குடியரசுத் தலைவராக கோபால் சுவரூப் பதக் வெற்றி பெற்றார்.[1] தற்போதைய குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் மறைவுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தற்போதைய துணைத் தலைவர் வி. வி. கிரி பதவி விலகியதால் இத்தேர்தல் நடந்தது.
அட்டவணை
தேர்தல் அட்டவணை 31 சூலை 1969 இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]
எஸ்.எண்.
|
வாக்கெடுப்பு நிகழ்வு
|
தேதி
|
1.
|
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி
|
9 ஆகஸ்ட் 1969
|
2.
|
வேட்புமனு பரிசீலனைக்கான தேதி
|
11 ஆகஸ்ட் 1969
|
3.
|
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி
|
14 ஆகஸ்ட் 1969
|
4.
|
வாக்கெடுப்பு தேதி
|
30 ஆகஸ்ட் 1969
|
5.
|
வாக்கு எண்ணும் தேதி
|
30 ஆகத்து 1969
|
முடிவுகள்
இந்திய நாடாளுமன்றத்தின் 759 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார். இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 400 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்று பதக் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[2]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வார்ப்புரு:இந்தியத் தேர்தல்கள்