சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|200px|right|மனித சமிபாட்டுத் தொகுதி {{redirect|இரையகக் குடற்பாதை|மனிதர்களில் நடைபெறும் சமிபாட்டை விரிவாக அறிய|மனித இரையகக் குடற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 24:
தங்களது உணவைச் சமிபாடடையச் செய்வதற்கு உதவுவதற்காக [[விலங்கு]]கள் அலகுகள், [[நாக்கு]], [[பல்|பற்கள்]] போன்ற பரிணாமமடைந்த உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
 
===அலகுகள்===
[[பறவை]]கள் தமது [[சூழலியல் முடுக்கு|சூழலியல் முடுக்குக்கு]] இசைவான எலும்புகளால் உருவான அலகுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் [[பழம்|பழங்கள்]], [[விதை]]கள், [[பூச்சி]]கள் என்பவற்றைப் பறவைகள் இலகுவில் உட்கொள்கின்றன.
 
===நாக்கு===
நாக்கு, வாயின் அடியில் [[எலும்பு|எலும்போடு]] இணைக்கப்பட்ட [[எலும்புத்தசை]] என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றாற்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும், மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குள்ளே தள்ளியும் உதவுகின்றது.
 
===பல்===
பல் பெரும்பாலான [[முதுகெலும்பி]] வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகின்றது. இது உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதற்கு உதவியாக உள்ளது. பற்கள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆனவையாகும். பற்கள் எலும்புகளால் ஆனவையல்ல. மாறாக அடர்த்தி மற்றும் கடினத்தன்மை உள்ள பல் மிளிரி, பற்சீமெந்து, பன்முதல், பன்மச்சை போன்ற [[இழையம்|இழையங்களால்]] ஆனவை. மனிதப் பற்கள் இரத்தம் மற்றும் [[நரம்பு]] என்பவற்றுடன் நேரடித்தொடர்பில் இருக்கின்றன.
 
வரிசை 46:
மனித சீரணமண்டலம் [[வாய்|வாயில்]] தொடங்கி [[மலவாய்]] வரை நீண்டிருக்கிறது. உணவு வாய்க்குள் வந்தவுடன் மெல்லுதல் என்ற உடலியக்கச் செயலால் செரித்தல் செயல்முறை ஆரம்பமாகிறது. உணவு பற்களால் அரைக்கப்படுகிறது. நாக்கின் உதவியால் கலக்கப்படுகிறது. [[உமிழ்நீர்ச் சுரப்பி]]கள் சுரக்கும் உமிழ்நீர் இங்கு உணவுடன் சேர்க்கப்படுகிறது. கோழை உணவுக்கு வழவழப்பைக் கொடுக்கிறது. ஐதரசன் கார்பனேட்டு காரத்தன்மையைக் கட்டுபடுத்தி அமைலேசு நொதியை ஊக்குகிறது. இதனால் உணவிலுள்ள மாவுச்சத்தின் ஒரு பகுதி செரிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவு சிறிய சிறிய துண்டுகளாக கவளம் போல நீர்மக்குழம்பு வடிவில் காணப்படும். தொண்டைக்குழி தசைகள் வழியாக உணவுக்குழாயை அடைந்து, தொடர் அலை இயக்கம் மூலம் இரைப்பையைச் சேர்கிறது. [[இரைப்பை]]யை அடையும் உணவு வளர்சிதை மாற்றம் மூலம் சீரணிக்கப்பட்டு, சத்துக்களும், கனிமங்களும், உயிர்சத்துகளும் உட்கிரகிக்கப்படுகின்றன. புரதம், கொழுப்பு, மாவுச்சத்துகள் முதலியன எளிதாக சிதைக்கப்பட்டு கிரகிக்கப்படுகின்றன. பின்னர் உணவு சிறுகுடல், பெருங்குடல் என நகர்கிறது. செரிக்கப்படாத உணவு இறுதியாக மலக்குடல் வழியாக வந்து மலவாய் மூலம் வெளியேற்றப்படுகிறது<ref name=Maton>{{cite book| last = Maton| first = Anthea|author2=Jean Hopkins |author3=Charles William McLaughlin |author4=Susan Johnson |author5=Maryanna Quon Warner |author6=David LaHart |author7=Jill D. Wright | title = Human Biology and Health| url = https://archive.org/details/humanbiologyheal00scho| publisher = Prentice Hall| year = 1993| location = Englewood Cliffs, New Jersey, USA| isbn = 0-13-981176-1|oclc = 32308337}}</ref>.
==ஊட்டக்கூறுகளின் சமிபாடு==
=== புரதச் செரிமானம் ===
 
புரதங்களின் செரிமானம் இரைப்பையில் ஆரம்பமாகிறது. இங்குள்ள பெப்சின் நொதி [[புரதம்|புரதங்களை]] பாலி பெப்டைட்டுக்களாக உடைக்கிறது. மனித இரைப்பையில் பெப்சினும் கணையத்தில் டிரிப்சின் மற்றும் கைமோ டிரிப்சினும் சுரக்கின்றன. புரதம் முற்றிலுமாக உடைக்கப்பட்ட நிலையில் [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களாக]] மாற்றப்படுகின்றன. இவற்றின் செரிமான நடவடிக்கைகள் சிறுகுடலுக்குள்ளும், சிறுகுடல் மேற்பரப்பிலும் நடைபெறும்.
 
=== கொழுப்புச் செரிமானம் ===
கொழுப்புச் சமிபாட்டின் ஒரு பகுதி வாயினுள்ளேயே ஆரம்பிக்கிறது. நாக்குச் சுரப்பிகளால் சுரக்கப்படும் லைப்பேசு நொதியம் வாயினுள்ளே இருக்கும் உணவில் இருக்கும் குறுகிய சங்கிலிகளாலான [[கொழுமியம்|கொழுமியங்களை]] இரு கிளிசரைட்டுக்களாக உடைக்கும். இருப்பினும் பெரும்பான்மையான கொழுப்பின் செரிமானம் சிறுகுடலிலேயே நடைபெறுகிறது. சிறுகுடலிலிருக்கும் கொழுப்பு கலந்த உணவு கணையத்தில் இலிப்பேசு நொதியம் சுரக்கப்படுவதையும், கல்லீரலில் இருந்து பித்தநீர் வெளியேறுவதையும் தூண்டுகிறது. பித்தநீரானது கொழுப்புணவை குழம்பாக்குவதன்மூலம் [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமில]] அகத்துறிஞ்சலுக்கு உதவும். கொழுப்புணவானது கொழுப்பமிலங்களாகவும், ஒரு கிளிசரைட்டு, இரு கிளிசரைட்டுக்களாகவும் மாற்றமடையும். கிளிசரைட்டு மூலக்கூறுகள் உருவாவதில்லை.<ref name="mehta">[http://pharmaxchange.info/press/2013/10/digestion-of-fats-triacylglycerols/ Digestion of fats (triacylglycerols)]</ref>
 
=== மாப்பொருள் செரிமானம் ===
 
உண்ணப்படும் உணவில் உள்ள [[மாப்பொருள்]] பொதுவாக பல்சக்கரைட்டான அமைலேசு வடிவில் காணப்படும். முதலில் உமிழ்நீரில் உள்ள ஆல்பா அமைலேசால் இது உடைக்கப்படுகிறது. பின்னர் உணவு சிறுகுடலை அடையும்போது இதேபோன்ற கணையத்தில் சுரக்கப்படும் அமைலேசு நொதியத்தால் மேலும் சிதைக்கப்படுகின்றது. சிறுகுடலின் மேற்பரப்பு உயிரணுக்களால் சுரக்கப்படும் நொதி இதை குளுகோசாக மாற்றுகிறது. இக்குளுகோசு சளிச்சவ்வு உயிரணுக்களால் உட்கிரகிக்கப்படுகிறது. உண்ணப்படும் உணவிலுள்ள எல்லா கார்போஹைரேட்டு மூலக்கூறுகளும் உணவு சிறுகுடலின் கடைசி பாகமான இலியத்தினை அடையும் முன்னரே உட்கிரகிக்கப்படுகின்றன. பொதுவாக குளுக்கோசு, மோல்ட்டோசு ஆகிய எளிய மூலக்கூறுகள் இலகுவாக அகத்துறிஞ்சப்படுகின்றன.
"https://tamilar.wiki/w/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது