சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 19:
|flag_p1 =
|s1 = பாண்டியர்கள்
|flag_s1 = Twin fish flag of Pandyas.svg
|flag_s2 =
|image_flag = Chola flag.png
வரிசை 42:
}}
{{சோழர் வரலாறு}}
'''சோழர்''' (''Chola dynasty'') என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட [[மூவேந்தர்]]களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் [[சேரர்]]களும், [[பாண்டியர்]]களும் ஆவர். [[நெல்]] இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து' என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் [[தேவநேயப் பாவாணர்]].<ref>ஞா.தேவநேயப் பாவாணர், பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் (1966), பக்17, http://tamilvu.org/library/libindex.htm</ref> [[சேரர்]], [[பாண்டியர்]] என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறிஸ்துவுக்கு முந்தைய [[நூற்றாண்டு]]களிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், [[பொது ஊழி|பொ.ஊ.]] இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, [[உறையூர்]], [[பழையாறு]] போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்
பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் [[கரிகால் சோழன்]] புகழ் பெற்று விளங்கினார். 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் [[இராசராச சோழன்|இராசராச சோழரும்]], அவரது மகனான முதலாம் [[இராசேந்திர சோழன்|இராசேந்திர சோழரும்]], தற்போதய இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
பொ.ஊ. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே [[ஒரிசா]] வரையிலும் கிழக்கில் [[சாவகம் (தீவு)|சாவா]], [[சுமத்ரா]], [[மலேசியா]] வரையும், தெற்கே [[மாலைத்தீவுகள்]] வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், [[தென்னிந்தியா]] முழுவதையும்
சோழர்களின் கொடி [[புலி]]க்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் [[ஆத்தி]].
வரிசை 52:
== தோற்றமும் வரலாறும் ==
{{தமிழ்நாடு வரலாறு}}
சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை
== முற்காலச் சோழர்கள் ==
{{முதன்மை|சங்ககாலச் சோழர் | தொன்மச் சோழர்}}
இன்றைய [[தஞ்சை]], [[திருச்சி][ உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி{{cn}} என்பவனாவான். இவனை [[பரணர், சங்ககாலம்|பரணர்]], [[கழாத்தலையார்]] ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் [[இளஞ்சேட்சென்னி]] என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடலொன்றில் புகழப்படுகின்றான்.<ref>அகநானூறு 375 ஆவது பாடல்:
:.....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
வரிசை 67:
[[படிமம்:karikala territories.png|thumbnail|left|350px|கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. பொ.ஊ. 120]]
{{Main|கரிகால் சோழன்}}
கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.<ref>''Purananuru'' – 266</ref> கரிகால சோழனுக்கு, ''திருமாவளவன்
கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.<ref name="History of ancient India, page 478">''History of ancient India, page 478: ..raising the banks of the Kaveri by Parakesari Karikala Chola''</ref><ref name="Proceedings of the Indian History Congress, Volume 39, page 156">''Proceedings of the Indian History Congress, Volume 39, page 156</ref> பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் [[வடக்கிருத்தல்|வடக்கிருந்து]] உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள [[கல்லணை]] இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் [[இமயமலை|இமயம்]] வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.
வரிசை 77:
போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட [[கோப்பெருஞ்சோழன்]], [[கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]], [[இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி]], குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய [[கோச்செங்கணான்]] ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
== இடைக்காலச் சோழர்கள்
== களப்பிரர் வருகை ==
[[படிமம்:Raraja detail.png|thumb|left|[[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராசராச சோழன்]] சிலை, [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்]], [[தஞ்சாவூர்]].]]
பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் [[களப்பிரர்]]
நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் [[பாண்டியர்]]களின் வேள்விக்குடிப்பட்டயமும், [[பல்லவர்]]களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.
வரி 103 ⟶ 104:
[[படிமம்:Brihadeeswara Temple Entrance Gopurams, Thanjavur.JPG|thumb|தஞ்சைப் பெருவுடையார் கோயில் வாயில்]]
களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு, பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் பொ.ஊ. 550 இல் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
பொ.ஊ. 550 இல் கருநாடகத்தை ஆண்ட [[மேலைக் கங்கர்|கங்க]] அரசர்களில் ஒருவனான [[துர்விந்தன்]] என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
வரி 127 ⟶ 128:
== விசயாலய சோழன் (பொ.ஊ. 850-871) ==
பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் [[பல்லவர்]]களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த [[பாண்டியர்]]களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது. [[பழையாறை]]யில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், பொ.ஊ. 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த [[முத்தரையர்]]களைத் தோற்கடித்துத் [[தஞ்சாவூர்|தஞ்சையைக்]] கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். [[பாண்டியர்]]களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். அது முதல் பொ.ஊ. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை ஆற்றின்]] தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் பொ.ஊ. 871 இல் இறந்தான்.
== முதலாம் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-907) ==
வரி 173 ⟶ 174:
வடநாட்டை வென்று பெற்ற [[கங்கை ஆறு|கங்கை]] நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாகக் ''கங்கை கொண்ட சோழீச்சுரம்'' என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு தஞ்சைப் பெருவுடையார் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கம்' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், [[தஞ்சாவூர்|தஞ்சையிலிருந்து]] [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுர]]த்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.
== பின்வந்த சோழ மன்னர்கள்
== முதலாம் இராசாதிராசன் ==
[[இராசேந்திர சோழன்|இராசேந்திர]] சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான [[ஈழம்]], பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் ''கொப்பம்'' என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.
== இரண்டாம் இராசேந்திரன் ==
இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
== பிற மன்னர்கள் ==
இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வரி 202 ⟶ 205:
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் [[முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்|மாறவர்மன் சுந்தரபாண்டியன்]] தலைமையில் பாண்டியர்கள் [[கங்கைகொண்ட சோழபுரம்]] மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் பொ.ஊ. 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற [[பாண்டியர்கள்]] சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.
== சோழ அரசர்களின் பட்டியல் ==
{|class="wikitable"
|- style="background:#efefef;"
வரி 262 ⟶ 265:
== சோழ நாடு ==
தமிழ் மரபுகளின்படி பண்டைய [[சோழ நாடு]] தற்காலத்
[[உறையூர்]] பொ.ஊ. 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் [[காவிரி]]க் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், [[நாகபட்டினம்|நாகபட்டினமும்]] சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த [[தமிழகத்தில் பண்டைய ரோமின் காசுகள்|ரோமானிய நாணயங்கள்]] பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வரி 268 ⟶ 271:
சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் [[தஞ்சாவூர்]] ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. [[விசயாலய சோழன்]] தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு [[காஞ்சிபுரம்|காஞ்சி]]யை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் [[தஞ்சாவூர்|தஞ்சை]] அதன் முதன்மை இடத்தை இழந்தது. [[இராசராச சோழன்|இராசராசனின்]] மகன் [[இராசேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்காபுரி]] என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை [[கங்கைகொண்ட சோழபுரம்]] தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.
[[கும்பகோணம்|கும்பகோணத்தை]] அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் [[இராசராச சோழன்|இராசராசனின்]] தமக்கை [[குந்தவை]] பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் [[மதுரை]]யில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். [[சாளுக்கிய சோழர்கள்|சாளுக்கிய சோழர்களின்]] காலத்தில், [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]], [[மதுரை]], [[காஞ்சிபுரம்]] ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.
முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பைக் கூறுகிறது.
வரி 291 ⟶ 294:
"''முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம்.''"}} - [[பாவாணர்]]<ref>பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42</ref>
== சமூகநிலை
== சோழரும் சாதியமும் ==
சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் [[சாதி]]யினரும், பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். சாளரம் வைத்துக் கட்டக் கூடாது.
பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.<ref>"The picture which emerges suggests that the brahmans were in control of the powerful positions and that the non-brahmans were more or less working for them. The brahmans naturally emphasized caste-loyalties and caste-assemblies, since this would prevent a wider basis of unity developing amongst the non-brahmans. - Romila Thapar. (1960). ''A History of India''. London: Penguin Books.</ref>
வரி 299 ⟶ 303:
== உடன்கட்டை ஏறுதல் ==
கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. [[இராஜராஜ சோழன்|இராசராச பேரரசனின்]] தாயாரும் [[சுந்தர சோழன்|சுந்தர சோழனின்]] மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது. அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் பற்றிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.<ref>சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727</ref>
== ஆடல் வல்லார் ==
சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி (அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, பொ.ஊ. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை [[குலோத்துங்க சோழன் III|மூன்றாம் குலோத்துங்கன்]] கல்வெட்டு தெரிவிக்கிறது.
== அடிமைகள் ==
சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள்
| first = தாவுத்
| last = அலி
வரி 343 ⟶ 347:
== கல்வி ==
சோழர் காலத்தில் கல்வி சமசுகிருத மொழியில் [[பிராமணர்]]களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.
== மொழி ==
வரி 384 ⟶ 388:
* [[பார்த்திபன் கனவு (புதினம்)]]
* [[மன்னன் மகள் (புதினம்)]]
==மேலும் காண்க==
*[[இடைக்காலச் சோழர்கள்]]
*[[தெலுங்குச் சோழர்கள்]]
*[[கீழைக் கங்கர்]]
*[[நிடுகல் சோழர்]]
*[[தமிழக வரலாறு]]
*[[தமிழ் மன்னர்களின் பட்டியல்]]
*[[மலாய் உலகில் தமிழ் கல்வெட்டுகள்|Tamil inscriptions in Malaysia]]
*[[முத்தரையர்]]
== மேற்கோள்கள் ==
வரி 405 ⟶ 419:
{{இந்திய வரலாறு}}
{{சிறப்புக் கட்டுரை}}
{{Authority control}}
[[பகுப்பு:சோழர்|*]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அரச வம்சங்கள்]]
| |||