அய்யாவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy சி முகப்புப் பத்தி மேம்பாடு |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 46:
== வழிபாட்டுத்தலங்கள் ==
பதிகளும் நிழல் தாங்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில [[அய்யா வைகுண்டர்]] சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1997-ஆம் கணக்கீட்டின் படி [[தென்னிந்தியா|தென்னிந்திய]] முழுவதுமாக 7000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. அய்யாவழி ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால், [[சுவாமிதோப்பு பதி]] சமய ரீதியாக மட்டுமே தலைமைப்பதியாக விளங்குகிறது. ஆட்சி ரீதியாக அல்ல.
பதிகள் அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள் கோயில்களை போன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, [[அய்யா வைகுண்டர்|அய்யா வைகுண்டரின்]], அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக [[பதிகள்|பதிகளுடன்]] தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும்.
நிழல் தங்கல்கள் பதிகளை போல் அல்லாமல் சிறிய அளவுடையதாக இருக்கும். இவற்றுள் பல அகிலத்திரட்டு பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவைகளில் அன்னதர்மமும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளிலுமாக, 8000 - க்கும் மேற்பட்ட தாங்கல்கள் செயல் பட்டு வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.<ref>''த.கிருஷ்ணநாதன்'', '''அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும்''', மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பகுதி - 4, பக்கம் 83.</ref>
அய்யாவழியில் பதிகள் மற்றும் தாங்கல்களில் வேறுபாடு அகிலத்தின் அடிப்படையில் பகுக்கப்படுகிறது. ஒரு பகுதியை பதி என்று அழைக்க இரண்டு விதிமுறைகள் உள்ளன. அவை,
வரிசை 60:
* அது அய்யாவின் [[அய்யாவின் அவதார இகனைகள்|அவதார இகனையுடன்]] தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
சுவாமி தோப்பு பதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள இந்த கோயிலானது சுமார் 100 ஆண்டு கால பழமையானது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள இத்திருக்கோயில் 74 அடி உயர கோபுரம் மற்றும் கொடி மரத்துடன் மிக கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. ஆண்டு தோறும் இங்கு பங்குனி மாத இறுதியில் 10 நாட்கள் அய்யாவின் திருக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றி திருவிழாவும், ஐப்பசி மாத இறுதியில் 18 நாட்கள் திருஏடு வாசிப்பு திருவிழாவும் நடைபெறுகின்றது.
வரிசை 69:
[[அருள் நூல்]] இவ்வகையில் ஒரு தொகுப்பு நூலாக கருதப்படுகிறது. முதன்மை புனித நூலான [[அகிலம்]] கூறும் கோட்பாடுகள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அருளாளர்களின் [[அருள் நூல் தீர்க்கதரிசனங்கள்|தீர்க்கதரிசனங்கள்]], [[அருள் நூல் கூறும் ஆழிவு விபரங்கள்|அழிவு விபரங்கள்]], சமய-சமுக [[சட்டங்கள்]] ஆகியனவற்றை இந்நூல் உள்ளடக்குகிறது.
அய்யாவழி சட்டங்களில் [[நீதம்]] முதன்மை இடம் வகிக்கிறது. [[எட்டு யுகங்கள்|எட்டு யுகச்செய்திளை]] தொகுத்து விளக்குமிடத்து பழங்காலத்தில் நீதம் எவ்வாறு மக்களால் கடைபிடிக்கப்பட்டது என்பது விளக்கப்படுகிறது. அன்றைய [[சமுதாயம்]], அதனை ஆண்ட மன்னன் ஆகியவர்கள், தங்கள் செயல்களில், தங்களுக்கப்பாலுள்ள இறைவனை நிலைநிறுத்தி [[இயற்கை]]யோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது.
வரிசை 79:
அக்காலத்து இந்த சிறப்பு நிகழ்வுகள் [[உவமை]]யாக கூறப்பட்டு அதை சட்டவடிவாக கொண்டு [[வாழ்வியல் கோட்பாடு|வாழ்வியல் கோட்பாடாக]] இன்று இக்[[கலி யுகம்|கலியுகத்தில்]] பின்பற்றப்பட வேண்டும் என கூறப்படுகிறது. கலியுகத்தின் துவக்கத்திலும் [[வைகுண்ட அவதாரம்|வைகுண்ட அவதார]] துவக்கத்திலும் பொது நிலைமாற்றங்கள் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில கோட்பாடுகள் மாற்றம் பெருகின்றன. அவ்வாறு நிகழும் மாற்றங்கள் பின்னர் அவதாரத்தின் போது [[வைகுண்டரின் முக்க்கிய போதனைகள்|வைகுண்டரால் போதிக்கப்படுகின்றன]].
[[நாராயணர்|நாராயணரால்]] [[வைகுண்டர்|வைகுண்டருக்கு]] அளிக்கப்படும் உபதேசம் மற்றும் சட்டம் [[அகிலம்|அகிலத்தில்]] [[விஞ்சை]] எனப்படுகிறது. வைகுண்டருக்கு மூன்று முறைகளாக [[கடல்|கடலின்]] உள்ளாக கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஞ்சையின் முதல் பகுதி [[அவதாரம்]] எடுத்த உடனேயும், மற்ற இரண்டு பகுதிகளும் சில அவதார நிகழ்வுகளுக்குப் பிறகும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தந்தையாகிய அதிகாரக்கடவுள் மகனாகிய அவதாரக் கடவுளுக்கு அளிக்கும் இறை சட்டம் என்றாலும் இதில் அடங்கும் பல பகுதிகள் மனிதனின் வாழ்வியல் சட்டங்களாகவும் பின்பற்றப்படுகிறது. முதல் விஞ்சையாகிய [[திருச்செந்தூர் விஞ்சை]] [[அகிலம்|அகிலத்தின்]] மிக நீளமான சட்டத்தொகுதியாகும்.
[[தர்மக் கோட்பாடு]] அகிலத்தில் இரண்டு கோணங்களில் விளக்கம் பெறுகிறது. தர்மத்துக்கு [[சமுதாயம்|சமுதாய]] உருவம் கொடுப்பதாக முதல் பார்வையும் சமய விளக்கம் கொடுப்பதாக இரண்டாம் பார்வையும் அமைந்திருக்கிறது. சமுதாயப்பார்வையில் தர்மம் என்பது எளியோருக்கு உதவுவதெனவும் சமய விளக்கத்தில் அத்தர்மம் [[சீவன்]] [[பரநிலை]]யடையும் இயல்பு எனவும் குறிக்கிறது. மேலும் தர்மத்தின் இரண்டாம் நிலையை அடைய முதல் நிலை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என்கிறது அகிலம்.
தர்மத்தின் சமுதாய விளக்கம் எளியோரை மேலாக்குவது எனப்படுகிறது. அகிலம் இதை ''"தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்."'' என்கிறது. சமுதாயத்தில் நிலவும் எளியோர்-வலியோர், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஆகிய வேற்றுமைகள் இதனிமித்தம் களையப்பட வேண்டுமென்கிறது அகிலம். அதன் முதல் மற்றும் மேலான நிலையாக அன்ன தர்மம் கருதப்படுகிறது. ''"பயந்து தர்மமிட்டந்த பரம்பொருளைத் தேடிடுங்கோ."'' என்கிறது [[அருள் நூல்]]. இதன் மூலம் ஒருவரிடமும் வேறுபாடில்லாமல் தான-தருமங்களை செய்ய [[சமுதாயம்]] அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் பிரபல [[இந்தியா|இந்தியத்]] துறவியான [[சுவாமி விவேகானந்தர்]] சமுதாய அறத்தையே முதன்மை தர்மமாக சித்தரிப்பது அய்யாவழியில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்னும் கருத்தை உறுதி செய்வதாக அமைகிறது.
சமயப் பார்வையில் திருப்புகையில் தர்மம் என்பது அறிவுக்கு அப்பாலான "முழுமுதல் உண்மை" என சித்தரிக்கப்படுகிறது. மேலும் வைகுண்டரின் முக்கிய [[அவதாரம்|அவதார]] நோக்கம் [[கலி]] என்னும் [[மாயை]]யை அழித்து உலகில் [[தர்மம்]] என்னும் மெய் இயல்பை உருவாக்குவதேயாம். ஆக அய்யாவழி சமய தர்மம் என்பது இயற்கையோடியைந்து [[நேரம்|காலம்]] [[இடம்]] என்னும் வரையறைக்கப்பாலான '' 'இருப்பதனைத்தும் ஒன்று' '' என்னும் மெய் நிலையேயாகும். [[ஏகம்]] என்னும் பதத்தின் பயன்பாடு துவக்கம் முதலே அகிலத்தில் அதிகமாக காணப்படுவது இதனை உறுதி செய்கிறது. அவ்வாறான மெய்யுலகு வைகுண்டரால் ஆளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் [[வருணாசிரம தர்மம்|வருணாசிரம தர்மத்தை]] [[கலியுகம்|இவ்யுகத்துக்கு]] பொருந்தாதது என நிராகரிக்கிறது. இதனை [[அகிலம்]], கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
வரிசை 114:
மேலும் [[வைகுண்டர்]] மறு மன்னர் எதிரியில்லாமல் ஆளும் எட்டாவது யுகமாக ஒரு [[தர்ம யுகம்|தர்ம யுகத்தையும்]] [[அகிலம்]] கூறுகிறது. அனைத்து தெய்வ சக்திகளும் ஒடுங்கி வைகுண்டமாக அவதரிப்பதால் கலி யுகத்தில் [[அய்யா வைகுண்டர்]] ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக அகிலம் கூறுகிறது. இதன் அடிப்படையில் அய்யாவழி [[ஓரிறைக்கோட்பாட்டு சமயம்|ஓரிறைக்கோட்பாட்டு சமயமாகவும்]] உருவம் பெறுகிறது.
[[படிமம்:Ekam evolution - Tamil.png|thumb|200pixel|right|ஏகத்தின் பரிணாமம்]]
அய்யாவழி [[ஓரிறை கோட்பாடு|ஓரிறைக்கோட்பாட்டை]] வலியுறுத்துகிறது. ஆனால் ஒரே [[கடவுள்]] பற்பல இயல்புகளில் பல இறை சக்திகளாக வெவ்வேறு உருவங்களில் காட்சிகொடுக்கிறார் என்றும் [[அகிலம்]] கூறுகிறது. ஆனால் நாம ரூபங்களுக்கு அப்பால் ஒரே சக்தியாக அனைத்தையும் இயக்கி, அனைத்தும் தானான சுயம்புவாக இருப்பது, [[ஏகம்]] என்னும் [[ஒருமை]] என்கிறது.
வரிசை 125:
[[அய்யாவழி திரித்துவம்|அவதார மும்மை]]யை பொறுத்த வரையில் வைகுண்டரின் உள்ளே மூன்றில் ஒன்றாக ஏகம் இருப்பதால் ஏகத்தின் அனைத்து குணங்களும் வைகுண்டருக்கும் பொருந்தும். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அருள் நூலின் பல அடிகள் வைகுண்டரை முழுமுதலாக கூறுவதோடு அவரின் விஸ்வ-ரூபத்தினை வெளிப்படுத்துகிறது.
[[நீடிய யுகம்|நீடிய யுகத்தில்]] தோன்றிய [[குறோணி]], ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்வரும் யுகங்களில் அவை ஆறும் அழிக்கப்பட்டு இறுதியில் [[கலியன்]] [[நடுத்தீர்வை]] செய்யப்பட்டு நரகத்தில் தள்ளி கதவடைக்கப்படுவதாக அகிலம் கூறுகிறது. இதன் மூலம் அய்யாவழி [[இருபொருள் வாதம்|இருபொருள் வாதத்தை]] வலியுறுத்துவது போன்றதொரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் [[கலி]] என்பது [[மாயை]] என்று வர்ணிக்கப்படுவதால் மாயையின் அழிவே அவ்வாறு கூறப்படுவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் [[அகிலம்]] தொடக்கம் முதலேயே [[அடிப்படை ஒருமை]]யாகிய [[ஏகம்|ஏகத்தை]] கூறி வருவதால், இது [[இருபொருள் வாதம்|இருபொருள் வாதக்]] கோட்பாட்டை மங்கச்செய்கிறது.
வரிசை 189:
== இவற்றையும் பார்க்கவும் ==
{{Commons|Ayyavazhi|அய்யாவழி}}
{{விக்கிமூலம்}}
| |||