பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Dineshkumar Ponnusamy
Copyvois from https://www.facebook.com/ilovemynative/posts/500771070063829:0
No edit summary
வரிசை 3: வரிசை 3:
*சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.

*'''பன்னம்பாறை''' என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான்.

தொன்மையான குலதெய்வ வழிபாட்டு மரபுகளுடன் ஊரைச்சுற்றிலும் கோயில்களுடனும் அமைந்துள்ளது.

==பன்னம்பாறை - பெயர்க்காரணம் ==
இவ்வூரின் நிலவியல் அமைப்பு பல இலட்சம் ஆண்டுள் பழமையான பாறைகளால் சூழப்பெற்றதாகும். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தாங்கள் குடியிருந்த இடங்களுக்குப் பெயர்களை இட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.அவ்வகையில் பன்னம்பாறை என்ற பெயர் குறித்து இங்குள்ள மக்கள் கூறுவதாவது,முற்காலத்தில் பனைகள் நிறைந்திருந்தபடியால் பனைப்பாறையே பன்னம்பாறை என்று திரிபு ஆனது என்றும்,பன்னம் என்றால் சுண்ணாம்பு., சுண்ணாம்பு பாறைகளைக் கொண்டபடியால் பன்னம்பாறை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

==பனம்பாரனார்==
[[தொல்காப்பியம்]] நூலிற்கு

’’வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி…..’’

என பதினைந்து அடிகளில் பாயிரம் எனப்படும் முன்னுரை எழுதியதோடு தொல்காப்பியம் நூல் திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியையும் பதிவு செய்த [[பனம்பாரனார்]] என்ற சங்ககாலப் புலவரும் தொல்காப்பியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலைத் தமிழுலகிற்குத் தந்த தொல்காப்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள்;இருவரும் ஒருபள்ளி மாணவர்கள். மேலும் இவருக்குப் பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் [[எட்டுத்தொகை]] நூலில் [[குறுந்தொகை]] 52 ஆம் பாடலான

‘’ஆர்களிரு மிதித்த நீர்த்திகழ் சிலம்பிற்……’’

எனத்தொடங்கும் பாடலைப் பாடிய புலவரின் பெயரும் [[பனம்பாரனார்]] ஆகும். முற்காலத்தில் சங்ககாலப் புலவர்களின் பெயர்கள் அவர்கள் பிறந்த ஊரின் பெயரில் அழைக்கப்பட்டன எனவே பனம்பாரனார் பிறந்தது இவ்வூராகலாம் என்ற கருத்தும் ஆய்வும் தமிழறிஞர்களிடம் உள்ளது.

==பன்னம்பாறை நில அமைப்பு==
இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இம்மண்.அழகிய நீரோடைகள், குளங்களைக் கொண்டுள்ளது.

இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 9: வரிசை 29:
== தொழில் மற்றும் சமூகம் ==
== தொழில் மற்றும் சமூகம் ==
இங்கு [[பறையர்]], [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]], [[பிள்ளை|விஸ்வகர்மா]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.

==பழமையான பல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு==
*பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் விளையாடிய பழமையான பல்லாங்குழி கண்டுபிடிப்பு.

இவ்வூரின் வடக்கில் ஒரு ஓடை உள்ளது. பல்லாங்குழி ஒடை என்று அழைக்கப்படும் இதற்கு பாண்டிப்பிள்ளைஓடை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவதை பாண்டி விளையாடுதல் என்று தென்பகுதி மக்கள் கூறுகின்றனர்.ஒரு இடத்தில் பல்லாங்குழி விளையாடுவதற்கான குழிகள் செதுக்கப்பட்டுள்ளது. அது உளியை கொண்டு அடித்து செதுக்கப்பட்டு அல்ல மாறாக கற்களை கொண்டு கடைந்து செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் விளையாடி முடிப்பதற்கு ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலே குழிகள் அமைக்கப்பட்டுள்ளன கீழ்புறத்தில் உள்ளதில் ஒன்றில் இருபுறமும் இரண்டிரண்டு குழிகளும் அவற்றிற்கு வால்குழிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்புறத்தில் உள்ள குழி இருபுறமும் ஆறுகுழிகளுடன் தலைப்பகுதியில் இரு குழிகளுடன் உள்ளது.இந்த ஆறு குழியும் குறிப்பிட்ட தூரத்தை ஆறு மடங்கு சுட்டிக்காட்டுவதாக உள்ளது. பல வழிப்போக்கர்கள் பயன்படுத்திய பெருவழிப்பாதை ஓன்று இங்கு இருந்தது என்பதற்கு இது சான்றாகும். இப்பாறையைச் சுற்றிலும் நீரோடை ஓடுகின்றது.

==புராணக்கதைகள்==
இவ்வூரின் வடக்கில் காணப்படும் இந்த பல்லாங்குழிகள் சிவனும் பார்வதியும் பாண்டி விளையாடிய இடம் எனவும் அப்படி விளையாடி கொண்டிருக்கும் பொது பார்வதிக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் பார்வதி சிவனிடம் தண்ணீர் கேட்க சிவன் தன்னுடைய சூலாயுதத்தால் பாறையில் குத்தித் துளையிட்டு நீருற்றினை ஏற்படுத்தி பார்வதிக்கு தண்ணீர் கொடுத்தார் என்று இவ்வூரில் வசிக்கும் 72 வயது முதியவர் கணேசன் தெரிவித்தார்.இக்கதை பன்னம்பாறையில் வசித்து வரும் அனைவரும் நம்பும் ஒரு விசயமாகவும் அந்த தீர்த்தக்குழி இன்னமும் இங்கே உள்ளதும் இதன் தனி சிறப்பு.ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும், பத்து அடி ஆழம் கொண்டதாகவும் அக்குழி உள்ளது.

இவற்றில் உள்ள தீர்த்தநீர் சுவையாக இருக்கும் என்றும் கடுமையான கோடை காலத்திலும் இந்த நீறூற்றில் நீர் வற்றாமலிருக்கும் என்றும் அப்பகுதியில் வாழும் ஸ்ரீ ஈந்தடி சுடலை ஆண்டவர் திருக்கோவில் என்னும் பழமைவாய்ந்த ஆலயத்தின் நிர்வாகி படம் பரமசிவம் மற்றும் மாசான முத்து, சுரேஷ் ஆகியோர் கூறுகின்றனர்.இந்த நீரூற்றினைச் சுற்றிலும் சிதைந்த நிலையில் கற்கால மனிதர்களின் ஓவியச்செதுக்கல்கள் கோட்டுருவங்களாக புலப்படுகின்றன.பிராமி எழுத்துக்களா அல்லது உருவக்குறியீடுகளா என்பது மேலாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீரூற்றிற்கு இடதுபுறம் சிவனும் பார்வதியும் தேரிலேறி சென்ற ரதத்தின் தடம் உள்ளது.அடுக்குப் பாறையின் அடுக்கு சேருமிடம் இணையாக ரதத்தின் தடம் போல உள்ளது.இதுவே ரதத்தின் தடம் என இங்குள்ள மக்களால் நம்பப்படுகின்றது. மேலும் இங்கு காணப்படும் நீரோடை பார்வதி தேவி குளித்த இடமாக கருதப்படுகிறது.

[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]

17:52, 3 மே 2016 இல் நிலவும் திருத்தம்

பன்னம்பாறை (ஆங்கிலம்:Pannamparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும்.

  • சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.
  • பன்னம்பாறை என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான்.

தொன்மையான குலதெய்வ வழிபாட்டு மரபுகளுடன் ஊரைச்சுற்றிலும் கோயில்களுடனும் அமைந்துள்ளது.

பன்னம்பாறை - பெயர்க்காரணம்

இவ்வூரின் நிலவியல் அமைப்பு பல இலட்சம் ஆண்டுள் பழமையான பாறைகளால் சூழப்பெற்றதாகும். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தாங்கள் குடியிருந்த இடங்களுக்குப் பெயர்களை இட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.அவ்வகையில் பன்னம்பாறை என்ற பெயர் குறித்து இங்குள்ள மக்கள் கூறுவதாவது,முற்காலத்தில் பனைகள் நிறைந்திருந்தபடியால் பனைப்பாறையே பன்னம்பாறை என்று திரிபு ஆனது என்றும்,பன்னம் என்றால் சுண்ணாம்பு., சுண்ணாம்பு பாறைகளைக் கொண்டபடியால் பன்னம்பாறை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

பனம்பாரனார்

தொல்காப்பியம் நூலிற்கு

’’வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி…..’’

என பதினைந்து அடிகளில் பாயிரம் எனப்படும் முன்னுரை எழுதியதோடு தொல்காப்பியம் நூல் திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியையும் பதிவு செய்த பனம்பாரனார் என்ற சங்ககாலப் புலவரும் தொல்காப்பியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலைத் தமிழுலகிற்குத் தந்த தொல்காப்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள்;இருவரும் ஒருபள்ளி மாணவர்கள். மேலும் இவருக்குப் பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் எட்டுத்தொகை நூலில் குறுந்தொகை 52 ஆம் பாடலான

‘’ஆர்களிரு மிதித்த நீர்த்திகழ் சிலம்பிற்……’’

எனத்தொடங்கும் பாடலைப் பாடிய புலவரின் பெயரும் பனம்பாரனார் ஆகும். முற்காலத்தில் சங்ககாலப் புலவர்களின் பெயர்கள் அவர்கள் பிறந்த ஊரின் பெயரில் அழைக்கப்பட்டன எனவே பனம்பாரனார் பிறந்தது இவ்வூராகலாம் என்ற கருத்தும் ஆய்வும் தமிழறிஞர்களிடம் உள்ளது.

பன்னம்பாறை நில அமைப்பு

இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இம்மண்.அழகிய நீரோடைகள், குளங்களைக் கொண்டுள்ளது.

இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

சுமார் 2000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். கடந்த 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் மற்றும் சமூகம்

இங்கு பறையர், கோனார், மறவர், விஸ்வகர்மா என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.

பழமையான பல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு

  • பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் விளையாடிய பழமையான பல்லாங்குழி கண்டுபிடிப்பு.

இவ்வூரின் வடக்கில் ஒரு ஓடை உள்ளது. பல்லாங்குழி ஒடை என்று அழைக்கப்படும் இதற்கு பாண்டிப்பிள்ளைஓடை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவதை பாண்டி விளையாடுதல் என்று தென்பகுதி மக்கள் கூறுகின்றனர்.ஒரு இடத்தில் பல்லாங்குழி விளையாடுவதற்கான குழிகள் செதுக்கப்பட்டுள்ளது. அது உளியை கொண்டு அடித்து செதுக்கப்பட்டு அல்ல மாறாக கற்களை கொண்டு கடைந்து செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் விளையாடி முடிப்பதற்கு ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலே குழிகள் அமைக்கப்பட்டுள்ளன கீழ்புறத்தில் உள்ளதில் ஒன்றில் இருபுறமும் இரண்டிரண்டு குழிகளும் அவற்றிற்கு வால்குழிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்புறத்தில் உள்ள குழி இருபுறமும் ஆறுகுழிகளுடன் தலைப்பகுதியில் இரு குழிகளுடன் உள்ளது.இந்த ஆறு குழியும் குறிப்பிட்ட தூரத்தை ஆறு மடங்கு சுட்டிக்காட்டுவதாக உள்ளது. பல வழிப்போக்கர்கள் பயன்படுத்திய பெருவழிப்பாதை ஓன்று இங்கு இருந்தது என்பதற்கு இது சான்றாகும். இப்பாறையைச் சுற்றிலும் நீரோடை ஓடுகின்றது.

புராணக்கதைகள்

இவ்வூரின் வடக்கில் காணப்படும் இந்த பல்லாங்குழிகள் சிவனும் பார்வதியும் பாண்டி விளையாடிய இடம் எனவும் அப்படி விளையாடி கொண்டிருக்கும் பொது பார்வதிக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் பார்வதி சிவனிடம் தண்ணீர் கேட்க சிவன் தன்னுடைய சூலாயுதத்தால் பாறையில் குத்தித் துளையிட்டு நீருற்றினை ஏற்படுத்தி பார்வதிக்கு தண்ணீர் கொடுத்தார் என்று இவ்வூரில் வசிக்கும் 72 வயது முதியவர் கணேசன் தெரிவித்தார்.இக்கதை பன்னம்பாறையில் வசித்து வரும் அனைவரும் நம்பும் ஒரு விசயமாகவும் அந்த தீர்த்தக்குழி இன்னமும் இங்கே உள்ளதும் இதன் தனி சிறப்பு.ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும், பத்து அடி ஆழம் கொண்டதாகவும் அக்குழி உள்ளது.

இவற்றில் உள்ள தீர்த்தநீர் சுவையாக இருக்கும் என்றும் கடுமையான கோடை காலத்திலும் இந்த நீறூற்றில் நீர் வற்றாமலிருக்கும் என்றும் அப்பகுதியில் வாழும் ஸ்ரீ ஈந்தடி சுடலை ஆண்டவர் திருக்கோவில் என்னும் பழமைவாய்ந்த ஆலயத்தின் நிர்வாகி படம் பரமசிவம் மற்றும் மாசான முத்து, சுரேஷ் ஆகியோர் கூறுகின்றனர்.இந்த நீரூற்றினைச் சுற்றிலும் சிதைந்த நிலையில் கற்கால மனிதர்களின் ஓவியச்செதுக்கல்கள் கோட்டுருவங்களாக புலப்படுகின்றன.பிராமி எழுத்துக்களா அல்லது உருவக்குறியீடுகளா என்பது மேலாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீரூற்றிற்கு இடதுபுறம் சிவனும் பார்வதியும் தேரிலேறி சென்ற ரதத்தின் தடம் உள்ளது.அடுக்குப் பாறையின் அடுக்கு சேருமிடம் இணையாக ரதத்தின் தடம் போல உள்ளது.இதுவே ரதத்தின் தடம் என இங்குள்ள மக்களால் நம்பப்படுகின்றது. மேலும் இங்கு காணப்படும் நீரோடை பார்வதி தேவி குளித்த இடமாக கருதப்படுகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=பன்னம்பாறை&oldid=173009" இலிருந்து மீள்விக்கப்பட்டது