சோளிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Shyamsharai No edit summary |
imported>Shyamsharai No edit summary |
||
| வரிசை 83: | வரிசை 83: | ||
| publisher = }}</ref> |
| publisher = }}</ref> |
||
சட்டமன்ற உறுப்பினர் [[ |
சட்டமன்ற உறுப்பினர் [[அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம்|அ.இ.அ.தி.மு.க]] கட்சியின் '''பார்த்திபன் என் ஜி'''<ref>[http://www.tn.gov.in/ta/government/mlas?page=1 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்]</ref>. பாராளுமன்ற உறுப்பினர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சியை சேர்ந்த '''ஜெகத்ரட்சகன்'''. |
||
==போக்குவரத்து== |
==போக்குவரத்து== |
||
14:28, 26 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
| சோளிங்கர் | |||||||
| — city — | |||||||
| ஆள்கூறு | 13°07′N 79°25′E / 13.12°N 79.42°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | வேலூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப [3] | ||||||
| சட்டமன்றத் தொகுதி | சோளிங்கர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
1,26,597 (2009[update]) • 6,330/km2 (16,395/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
20 கிமீ2 (8 சதுர மைல்) • 155 மீட்டர்கள் (509 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | sholingur.com | ||||||
சோளிங்கர் (திருக்கடிகை)(ஆங்கிலம்: Sholinghur) வேலூர் மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தில் உள்ள சிறு நகரமாகும். சோளிங்கர் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான யோகநரசிம்ம பெருமாள் கோவிலுக்குப் பெயர் பெற்றதாகும். பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு ஆற்காடு நவாபு மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
பெயர் தோற்றம் மற்றும் வரலாறு
சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.
சோளிங்கர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் போது சர் ஐர் கூட் (Sir Eyre Coote) திப்பு சுல்தானுடன் இங்கு போர் புரிந்தார்.
கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும் ஹைதர் அலி தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே கி.பி 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கஞ்சா சாகிப் கல்லறை இங்கு உள்ளது.

சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள்
- பாரதி பேருந்து குழுமம்.
- டி.வி.எஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா லிட்[4]
- சோளிங்கர் நூற்பாலை
- சிறு நிலை தறி தொழிற்சாலைகள்.
கல்வி நிறுவனங்கள்
கல்லூரிகள்
- சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி
- சரஸ்வதி வேலு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சி எம் அண்ணாமலை பல்தொழில்நுட்ப கல்லூரி
- மீரா ஆசிரியர் பயிற்சி நிலையம்
- கலைபாரதி ஆசிரியர் பயிற்சி நிலையம்
- சிவரஞ்சினி ஆசிரியர் பயிற்சி நிலையம்
பள்ளிகள்
- குட்லெட் மேனிலைப்பள்ளி
- அஸ்வினி மெட்ரிக் பள்ளி
- அய்யன் வித்யாஷரம் மெட்ரிக் பள்ளி
- அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி
- அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி
- ஹயக்ரீவர் மழலைகள் பள்ளி
- மேரி மெக்ளின் நடுநிலை பள்ளி
- செங்குந்தர் நடுநிலை பள்ளி
- ஸ்ரீ திவ்யா சைதன்யா மெட்ரிக் பள்ளி
- யூனிட்டி மெட்ரிக் பள்ளி
- வேதாத்ரி மெட்ரிக் பள்ளி
- வித்யா பீடம்
மருத்துவமனைகள்
- அரசு மருத்துவமனை, சோளிங்கர்
- கல்பனா மருத்துவமனை
- பாரதி வெங்கடேஷ் மருத்துவமனை
- டி.வி.எஸ் மருத்துவமனை
- பெஸ்ட் மருத்துவமனை
- ரவிபாரதி மருத்துவமனை
கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தளங்கள்



அரசியல் அமைப்பு
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.[5]
சட்டமன்ற உறுப்பினர் அ.இ.அ.தி.மு.க கட்சியின் பார்த்திபன் என் ஜி[6]. பாராளுமன்ற உறுப்பினர் தி.மு.க கட்சியை சேர்ந்த ஜெகத்ரட்சகன்.
போக்குவரத்து

இவ்வூரிலிருந்து வேலூர், திருத்தணி மற்றும் அரக்கோணம் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பிரேக்ஸ் இந்தியா லி.
- ↑ "தமிழக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் பட்டியல் மறுசீரமைப்புக்குப் பின்" (PDF).
- ↑ தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்