சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>AswnBot
சி Bot:Removing stub template from long stubs
வரிசை 55: வரிசை 55:
[[பகுப்பு:முருகன் கோயில்கள்]]
[[பகுப்பு:முருகன் கோயில்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

07:36, 24 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

சுவாமிமலை
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
பேரூராட்சி மன்றத் தலைவர் தேவராதாகிருஷ்ணன்
மக்கள் தொகை 6,982 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


25 மீட்டர்கள் (82 அடி)

குறியீடுகள்

சுவாமிமலை (ஆங்கிலம்:Swamimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]


புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°57′N 79°20′E / 10.95°N 79.33°E / 10.95; 79.33[5]. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சுவாமிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% அதிகம். சுவாமிமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அறுபடைவீடு

ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.

இங்கே உள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். [7]

திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்:

பாடல் 226

இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே... (வெற்பு = மலை)

சப்தஸ்தானம்

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். [8]


மேற்கோள்

திருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999.

வெளி இணைப்புகள்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம்

  • தரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [1]
  • வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[2]
  • தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [3]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
  5. Falling Rain Genomics, Inc - Swamimalai
  6. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Kumbakonam Taluk;Swamimalai (TP) Town
  7. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
  8. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992
"https://tamilar.wiki/w/index.php?title=சுவாமிமலை&oldid=200449" இலிருந்து மீள்விக்கப்பட்டது