"{{Taxobox | name = நல்லங்கு <small>(ஆர்மடில்லோ)</small> | fossil_range ={{fossilrange|65.5-55.8}}6.55~5.58 கோடி ஆண்டுகள் | image =Armadillo at Kennedy Space Center (KSC-07PD-2276).jpg | image_caption = நடக்கும் அழுங்கு | image_width = 210px | regnum = விலங்கு|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)
09:26, 22 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
நல்லங்கு (ஆர்மடில்லோ) புதைப்படிவ காலம்:65.5-55.8 Ma
நல்லங்கு (Armadillo) என்பது ஓர் உயிரினமாகும். ஆர்மடில்லோ என்ற எசுப்பானியச் சொல்லுக்கு, கவசம் உடைய சிற்றுயிரி என்பது பொருளாகும். இந்த உயிரினத்தின் உடல் அமைப்பைக் கொண்டு, இதனைக் கவச உடலிகள் பிரிவில் சேர்த்துள்ளனர். கவச உடல் அமைப்புடைய விலங்குகளுக்கு, தமிழில்அழுங்கு[1] என்று பெயர். நல்லங்கை ஆங்கிலத்தில் ஆர்மடில்லோ என்பர்.[2]
அமெரிக்க நாட்டில், 9 கவசப்பட்டைகளை உடைய நல்லங்குகள் அதிகமாக டெக்சஸ் மாநிலத்தில் இருக்கின்றன. இவைகளை வேட்டையாடி உண்ணும், ஊனுண்ணிகள் இல்லாததால் இவைகள் தங்கள் வாழிடங்களை விரிவுபடுத்திவருகின்றன. குறிப்பாக தென் கரொலைனா, புளோரிடா, நெப்ராஸ்கா, இந்தியானா, ஒன்டாரியோ ஆகிய மாநிலங்களில் இவ்வுயிரினங்கள் தங்களது வாழ்விடங்களைப் பெருக்கி வருகின்றன.
ஒன்பது பட்டை நல்லங்குகளின் இனப்பெருக்கத்தில், ஒவ்வொரு ஈனுகையின் போதும், ஒரே மரபணு வார்ப்பிலான நான்கு குட்டிகளை ஈனுகின்றன.[4][5][6]
ஒவ்வொரு முறையும் தவறாமல் ஒரே கருவணு பிரிந்து நான்கு முளையங்களாக வருவதால் இவற்றின் குட்டிகளை மருத்துவ ஆய்வுகளுக்கும் நடத்தை ஆய்வுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். பாலூட்டிகளில் ஒரே கருவணுவிலிருந்து பல முளையங்களை இயல்பான கருக்கட்டலிலேயே தவறாமல் பெறுவது நல்லங்குகளில் மட்டுமே முடியும். அதுவும் இயல்பில் தாசிப்பசு(Dasypus) பேரினத்தில் மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது.சில சிற்றனங்கள், 1-8 வரையிலான வேறுபட்ட சிறுகுட்டிகளை, ஈனும் இயல்புயுடையதாக இருக்கின்றன.
இவ்விலங்குகளைத் தவிர இப்பண்பு சில குளவிகள், தட்டைப்புழுக்கள், பல நீர்வாழ் முதுகெலும்பிலிகள் போன்ற பாலூட்டியல்லாத விலங்குகளில் மட்டுமே காணப்படுகிறது.[5]
நல்லங்குகளும் மாந்தரும்
மனிதர்களையும், சிலவகைக் குரங்குகளையும், முயல்களையும், எலிகளையும் தவிர வெகுசில விலங்குகளுக்கே தொழு நோய் வருகிறது. அதிலும் இவற்றின் உடல்வெப்பம் குறைவு என்பதால் தொழு நோயை உண்டாக்கும் மைக்கோபேக்டீரியம் இலெப்பிரே[கு 5] கிருமிகள் இவற்றின் உடலில் நன்கு வளர்கின்றன. இவற்றின் உடல் வெப்பமான 93 °F மனித உடல் வெப்பத்தை ஒத்தது. அதனால் தொழு நோயைப் பற்றிய ஆய்வுகளில் நல்லங்குகளைப் பயன்படுத்துகின்றனர். இவ்விலங்குகளைக் கையாள்வதன்மூலமோ, இவற்றை உண்பதாலோ தொழு நோய் கண்ட விலங்கிடமிருந்து நோய் பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. அமெரிக்காவின் டெக்சாசு, இலூசியானா மாநிலங்களில் இவை தொழுநோய்க் காவிகளாகவும் (கடத்திகளாகவும்) தேக்கிகளாகவும் அறியப்பட்டுள்ளன.[7] அமெரிக்கக் கண்டத்தில் தொழு நோய் முன்பு இல்லை என்பதால் முதன் முதலாக வெளியில் இருந்து புலம்பெயர்ந்த ஐரோப்பிய மக்களிடம் இருந்து தொழு நோய் இவ்விலங்குகளுக்குத் தொற்றியிருக்கக் கூடும்.[7][8] இவை சாகாசு நோயின் தேக்கிகளாகவும் உள்ளன.[9]
↑சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். p. 165. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: date format (link)
↑சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். p. 2170. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: date format (link)