உத்தவ கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: எழுத்துக்களில் → எழுத்துகளில் using AWB |
No edit summary |
||
வரிசை 3:
==உத்தவ கீதையின் சாரம்==
[[யது குலம்|யது குலத்தவர்களுக்கு]] முனிவர்கள் சாபம் இட்டதைப் பற்றி விளக்கப்படுகிறது. பூமியின் சுமையைக் குறைக்க வேண்டி பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]], [[விசுவாமித்திரர்]], [[கண்வர்]], [[துர்வாசர்]], [[பிருகு]], ஆங்கிரசர், [[காசிபர்|கசிபர்]], [[வாமதேவ முனிவர்|வாமதேவர்]], [[அத்ரி]] முதலிய முனிவர்களைக் கடற்கரை நகரான பிண்டாரகம் என்ற [[பிரபாச பட்டினம்|பிரபாச நகருக்கு]] அனுப்பி வைத்தார்.
வரிசை 12:
சில நாட்களுக்குப் பின் உலக்கையின் இரும்புத் தூள்கள் கடற்கரையை அடைந்து நீண்ட மிக உறுதியான கோரைப் புற்களாக மாறின. கடலில் கரைத்த இரும்புத் துகள்களில் ஒன்றை மீன் உண்டது. அந்த மீன், ஒரு மீனவன் வலையில் சிக்கியது. மீன் வயிற்றில் இருந்த இரும்புத் துண்டை மீனவனிடமிருந்து ஒரு வேடுவன் வாங்கிக் கொண்டு, அதைத் தன் அம்பு நுனியில் பொருத்திக் கொண்டான்.
[[நாரதர்|நாரதருக்கும்]], [[மிதிலை]] மன்னர், நிமி மன்னர் மற்றும் ஒன்பது யோகிகளும் வசுதேவர் இல்லத்திற்கு வருகை புரிந்த நாரதரிடம், எதை அறிந்தால் எல்லாவித பயங்களிலிருந்தும் மனிதன் விடுபடுவானோ, அப்படிப்பட்ட தர்மத்தை அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாகவத தர்மத்தைக் கேட்டாலும், படித்தாலும், கடைப்பிடித்தாலும், அந்த விநாடியிலேயே மனிதன் புனிதமாகி விடுகிறான் என்று [[நாரதர்]] கூறுகிறார். பின்பு ஒன்பது யோகிகள் கூறும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.
வரிசை 18:
* ''ஹரி'' என்ற இரண்டாவது யோகி, எவர் அனைத்து சீவராசிகளிடத்தில் [[ஈஸ்வரன்|பகவானை]] காண்கிறாரோ, அவ்விதமே, பகவானிடம் அனைத்து சீவராசிகளையும் எவர் காண்கிறாரோ அவரே முதன்மையான பக்தன் ஆவர் என்று அறிவுரை செய்கிறார்.
* ''அந்தரிட்சர்'' என்ற மூன்றாவது யோகி, பகவானால் படைக்கப்பட்ட உலகப் பொருட்களில் ''நான்'', ''என்னுடைய'', ''எனது'' என்று பற்றுக் கொள்பவர்கள், [[மாயை]] எனும் துயரக் கடலிருந்து விடுபடுவதில்லை என்று அறிவுரை செய்கிறார்.
* ''பிரபு தத்தர்'' என்ற நான்காவது யோகி, மனத்தூய்மை, சகிப்புத்தன்மை, மௌனம், படித்த தர்ம சாத்திர நூல்களை மனதில் சிந்தித்தல்; நேர்மை; பிரம்மச்சரியம்; அகிம்சை; மற்றும் சுக-துக்கம், மான-அவமானம், குளிர்-வெப்பம் முதலிய இருமைகளை சமமாக அனுபவிக்க வேண்டும். அனைத்து சீவராசிகளை பகவானாகப் பார்ப்பது, நிலையான இருப்பிடத்தில் வசிக்காமை, எளிய ஆடைகள் அணிதல், கிடைத்த உணவை உண்டு திருப்தி அடைவது, சாத்திரங்களில் நம்பிக்கை வைத்தல், மனவடக்கம், புலனடக்கம், [[வாய்மை]], பொறுமை, [[தியானம்]], தானம் மற்றும் [[தவம்]] முதலிய நற்பண்புகளின் பெருமையை விளக்குகிறார்.
வரிசை 24:
* ''ஆவிர்ஹோத்ரர்'' என்ற ஆறாவது யோகி, அறநூல் நெறிப்படி ஆற்ற வேண்டிய செயல்கள் ([[கர்ம யோகம்]]; [[பக்தி யோகம்]]); செய்யக்கூடாத செயல்கள் (விகர்மம்), மற்றும் செய்யவேண்டிய செயல்களைச் செய்யாமல் இருப்பது (அகர்மம்) பற்றி விளக்குகிறார். பலனில் பற்றில்லாமலும், ஈசுவர அர்ப்பணமாக செய்யப்படும் [[கர்மங்கள்|செயல்களால்]] [[சீவ முக்தி|சீவ முக்தியை]] அடைந்து, பின் உடலை துறந்த பின் பிறப்பில்லா [[விதேக முக்தி|விதேக முக்தியை]]அடையலாம் என்று கூறி முடிக்கிறார்.
* ''துருமிளர்''என்ற ஏழாவது யோகி அருளிச்செய்த செய்தி: [[நர-நாராயணன்|நர-நாராயணர்களின்]] தவத்தையும், பேராற்றல்களையும் விவரித்து, பின் [[திருமால்]] எடுத்த [[மச்ச அவதாரம்]](மீன்), [[கூர்ம அவதாரம்]] (ஆமை), [[வராக அவதாரம்]], [[நரசிம்மர்]], [[வாமனர்]], [[பரசுராமர்]], [[இராமர்]], [[கிருட்டிணன்|ஸ்ரீ கிருஷ்ண]] போன்ற [[அவதாரம்|அவதாரங்களின்]] மூலம் அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்து, பின் அம்ச அவதாரங்களான [[அயக்கிரீவர்]] (குதிரை முகம்-மனித உடல்) எடுத்து மது-கடைபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று, அவர்களால் திருடிச் செல்லப்பட்ட வேதங்களை மீட்டியும், ஹம்ஸப் (அன்னம்) பறவை வடிவத்தில், [[ஆத்மா|ஆத்ம யோக]] உபதேசம் அருளியவர் என்று பகவானின் அவதார வர்ணனைகள் கூறி முடிக்கிறார்.
* ''சமஸர்'' என்ற எட்டாவது யோகி பக்தி இல்லாத மனிதர்களின் நிலை மற்றும் பகவானை வழிபடும் முறைகளை விரிவாக எடுத்துக் கூறுகிறார்: காம்ய கர்ம (பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்) பலனில் நாட்டமுள்ளவர்கள் தர்ம-அர்த்த-காம-மோட்சம் (அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு) என்ற நான்கு இலட்சியங்களில், முதல் மூன்று கர்மங்களை மட்டுமே தர்மமாக எண்ணிக் கடைப்பிடித்து அதிலேயே சிக்கி, தம் [[ஆத்மா]]வைக் கொல்கிறார்கள். பகவானிடம் [[பக்தி யோகம்|பக்தி]] கொள்ளாதவர்கள், பயங்கரமான இருள் சூழ்ந்த நரகத்தை அடைகிறார்கள்.
வரிசை 33:
* மிதிலை மன்னரான நிமி, ஒன்பது யோகீசுவரர்களிடமிருந்து இவ்வாறு பாகவத தர்மங்களைக் (பக்தர்களின் ஒழுக்கம்) கேட்டு மகிழ்ச்சி அடைந்து அவர்களை கௌரவித்தார்.
[[கிருட்டிணன்|கிருஷ்ண]] அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்டதால், [[சிவன்|பரமேசுவரன்]], [[பிரம்மா|நான்முக பிரம்மனும்]], [[இந்திரன்]] முதலான மற்ற தேவர்களும், ஸ்ரீகிருஷ்ணரை [[திருப்பரமபதம்|வைகுந்தத்திற்கு]] எழுந்தருள வேண்டிக்கொள்கிறார்கள். முனிவர்களின் சாபத்தால் இன்னும் ஏழு நாட்களில், யாதவ குலத்தினரின் அழிவையும், [[துவாரகை]] கடல் சீற்றத்தால் அழிவதைக் கண்டபின் வைகுண்டத்திற்கு எழுந்தருளுவேன் என்று கிருஷ்ணர் பதில் அளித்தார்.
வரிசை 51:
மெய்யறிவாளர்கள் கூட சில நேரங்களில், [[இராட்சத குணம்|ரஜோ குணம்]] மற்றும் [[தாமச குணம்|தமோ குணங்களால்]] புத்தி தடுமாறுகிறார்கள். செயல்களின் விளைவு துயரமே என்று உணர்கிறார்கள். எனவே அவர்கள் பெருமுயற்சி செய்து மனதை திருப்பி, செயல்களில் பற்று கொள்வதில்லை. மனதை எல்லா விசயங்களிலிருந்தும் திருப்பி, பகவானிடத்தில் மட்டும் மனதை நிலை பெறச் செய்கிறார்கள்.
சந்திர வம்சத்து மன்னன் [[நகுசன்|நகுசனின்]]பேரனும், [[யயாதி]]யின் மகனும் ஆன மன்னர் [[யது]], ஒரு நாள் முற்றும் துறந்த இளவயது அவதூதரான [[தத்தாத்ரேயர்|தத்தாத்ரேயரை]] சந்தித்து, நீங்கள் எந்த செயலையும் செய்யாமலேயே மிகவும் ஆழமான தெளிந்த நல்லறிவு எப்படி கிடைத்தது, எதை ஆதாரமாகக் கொண்டு சிறந்த அறிவாளியான தாங்கள் ஒரு சிறுவனைப் போல் மகிழ்ச்சியாக உலகத்தில் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவதூத [[துறவி|சந்நியாசி]] தான், யார் யார் மூலம் அறிவு (ஞானம்) பெற்றதாக விவரிக்கிறார்.
வரிசை 62:
* புறாவிடமிருந்து, [[சீவ முக்தி|முக்தியை]] அடைவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்ற மனித உடலை அடைந்தும், புறாவைப் போல் உலகப்பற்றில் (பந்தபாசத்தில்) ஆழ்ந்திருப்பவர்கள் முக்தியை அடைய முடியாது என்ற ஞானத்தையும் அடைந்ததாக அவதூதர், [[யது]] மன்னரிடம் கூறினார்.
* மலைபாம்பு மூலம், [[யோகி]] தானாக எது கிடைகிறதோ, அதையே உண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற ஞானமும்;
வரிசை 74:
* பிங்களா என்ற வேசி மூலம், பகவான் எனக்கு அருளிய நல்லறிவை ஏற்றுக்கொண்டு, உலக காமபோகங்களைத் துறந்து, பகவானை [[சரணாகதி|சரணடைய]] வேண்டும் என்ற ஞானத்தையும் அடைந்தாக கூறினார் அவதூதர்.
* குரர பறவையிடமிருந்து தேவைக்கு அதிகமாக பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது என்ற ஞானம்.
வரிசை 85:
* பின் தன்னுடைய உடல் மூலம் கற்றுக் கொண்ட ஞானத்தை கூறுகிறார்: இந்த உடலுக்கு பிறப்பு-இறப்பு தன்மை உடையது. மிகவும் துன்பம் தரக்கூடியது. விவேகம்-வைராக்கியத்தால் “இந்த உடல் பிறர்க்கு உரியது”(இந்த உடல் ‘நான்’ அல்ல) என்ற உறுதியான அறிவு உண்டாகிறது. அதனால் இந்த உடலில் பற்று கொள்ளாதவனாக நடமாடிக் கொண்டு இருக்கிறேன் என்றார் அவதூதர்.
பரம்பொருளை அறிய வேண்டும் என்ற விருப்பமுடையவன் பலன்களை அளிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருள் சேர்த்து வைக்காதிருத்தல் என்ற [[நியமம்|நியமங்கள்]] கைக்கொள்ளவேண்டும். குருவை அணுகி சேவை செய்ய வேண்டும். [[குரு|குருவிற்கு]] பணிவிடை செய்பவன் அகந்தை, பொறாமை, மமதை, பரபரப்பு, வெறுப்பு, வீண் பேச்சு, மனைவி-மக்கள்-மனை-நிலம்-உற்றார்-செல்வம் முதலியவற்றில் ஒட்டுதல் இல்லாதவனாகவும், அன்பு, வினைத்திட்பம், அனைவரின் நலனில் சம நோக்கு உடையவனாகவும் இருக்க வேண்டும்.
வரிசை 100:
இவைகளில் எல்லாம் பகவானே இருக்கிறான் எனபதால், இவைகளில் பகவானையே பார்க்க வேண்டுமேயன்றி அந்தந்தப் பொருளாக அல்ல.
கட்டுப்படுதல், விடுபடுதல் என்ற தன்மை ஆத்மாவிடம் இல்லை. [[ஆத்ம ஞானம்]] மற்றும் [[அக்ஞானம்]] இரண்டுமே அனாதி காலத்தில் பிரம்மத்தின் [[மாயை|மாயா சக்தியால்]] தோற்றுவிக்கப் பட்டவை. உடல் எடுத்தவர் முக்தி (விடுபடுதல்) அடைவதற்கும், மீண்டும் பிறப்பதற்கும் (கட்டுப்படுவதற்கும்) முறையே ஞானத்தால் [[விதேக முக்தி]]யும், அக்ஞானத்தால் பந்தமும் (கட்டுப்படல்) ஏற்படுகிறது.
வரிசை 124:
கர்வம் கொள்ளலாகாது; பிறறை ஏமாற்றக்கூடாது; செய்த நற்செயல்களைப் பறைசாற்றிக் கொள்ளல் ஆகாது. சாதுக்களுக்கு பணிவிடை செய்வதால், பகவானின் நினைவு ஏற்படும். உத்தவரே, [[பக்தி யோகம்]], சத்சங்கம் ஆகிய வழிகளைத் தவிர, சம்சாரக்கடலைக் கடப்பதற்கான வேறு வழிகள் இல்லை என்பது என் முடிவான கருத்து.
[[யோகம்]], [[சாங்கியம்]], தர்மம், சுவாத்யாயம், தவம், தியாகம், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல், தட்சிணை, வேள்விகள், விரதங்கள், வேத மந்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புலனடக்கம் – மனவடக்கம் முதலியவைகள், சத்சங்கத்தைப் போல என்னை வசப்படுத்த முடியாதவைகள். ஏன் எனில் சத்சங்கத்தால் எல்லாவிதப் பற்றுகளும் மனிதனிடமிருந்து நீங்கி விடுகின்றன.
வரிசை 140:
உத்தவரே! இவ்விதம் குருவிடம் உபதேசம் பெற்று, [[ஆத்ம ஞானம்|மெய்ஞானம்]] என்ற கத்தியை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஓர் சீவன் என்ற எண்ணத்தை தைரியமாக வெட்டி எறிந்து விட வேண்டும். பிரம்மத்தை அறிந்து கொண்டவுடன், ஞான வடிவான கத்தியை எறிந்து விட வேண்டும். பின்னர் எங்கும் நிறைந்த [[பிரம்மம்|பிரம்மத்தில்]] கலந்து விடலாம்.
[[ஹிரண்யகர்பன்|ஹிரண்யகர்பரான]] நான்முக [[பிரம்மா]]வின் மனதில் தோன்றிய மகன்களான [[சனகாதி முனிவர்கள்|சனகாதி முனிவர்களுக்கும்]] மற்றும் [[சனகன்|சனகருக்கும்]], யோகத்தின் சூட்சுமம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து, [[கிருட்டிணர்|ஸ்ரீகிருஷ்ணர்]], ([[அன்னம்|அன்னப் பறவை]]) வடிவத்தில் ஆத்ம உபதேசம் செய்தார். இதையே '''ஹம்ச கீதை''' என்பர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்கள் பின்வருமாறு:
வரிசை 156:
* இவ்வாறாக பகவான், பிரம்மாவின் மனதில் தோன்றிய [[சனகன்|சனகர்]] மற்றும் [[சனகாதி முனிவர்கள்|சனகாதி முனிவர்களின்]] ஆத்மா தொடர்பான ஐயங்களை பகவான் கிருஷ்ணர் நீக்கினார்.
[[பக்தி யோகம்|பக்தி யோக]] மேம்பாட்டிற்கு எது சிறந்த முறை எனும் உத்தவரின் கேள்விக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அருள்கிறார். முதலில் [[பிரம்மா]] வேதத்தை முதலில் தன் மகன் சுவாயம்பு மநுவுக்கு கூறினார். [[மனு]] மூலம் ஏழு ரிஷிகள் அதனை அறிந்தனர். அந்த ரிஷி குமாரர்களான தேவர்கள், தானவர்கள், குஹ்யர்கள், மனிதர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், கிந்தேவர்கள் (உடல் தளர்ச்சி, வியர்வை, இல்லாத்தால்,தேவர்களா இவர்கள் எனும் ஐயுறத்தக்க நிலையில் உள்ள மனிதர்கள்), கின்னரர்கள், நாகர்கள், அரக்கர்கள், கிம்புருடர்கள் ஆகிய [[சத்துவ குணம்]], [[இராட்சத குணம்]] மற்றும் [[தாமச குணம்]] எனும் [[முக்குணங்கள்|குணாங்களால்]] உண்டானவர்கள் வேதத்தைப் பிரம்ம ரிஷிகளிடமிருந்து அறிந்து கொண்டார்கள்.
வரிசை 181:
இவ்விதம், நாள்தோறும் மூன்று முறை, [[ஓம்|ஓங்காரத்துடன்]] கூடிய [[பிராணாயாமம்|பிராணாயாமத்தை]] பத்து முறை பயிற்சி செய்யவேண்டும்.
[[உத்தவர்]] கேட்டதற்கு இணங்க, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யோக சித்திகளின் வகைப்பாடுகளையும் அதன் பலன்களையும் விளக்குகிறார்.
வரிசை 195:
* நிர்குண (அழிவற்ற, பூரணமான, வடிவற்ற) [[பிரம்மம்|பிரம்மத்த்தில்]] மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி எல்லையை அடைந்து '''காமா வஸாயிதா''' என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன் விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா - ஆசையை வசப்படுத்தியவன்) என்ற சித்தியாக கூறுகிறார்கள்.
* ஆகாயத்தை பிரம்மமாக தியானிப்பவனுக்கு, பறவைகளின் பேசும் சக்தி கிடைக்கும்.
வரிசை 212:
ஆனால் [[கர்ம யோகம்]], [[பக்தி யோகம்]] மற்றும் [[ஞான யோகம்]] போன்ற உயர்ந்த யோகங்களில் மனம் ஒன்றிப் போயிருப்பவர்களுக்கு, இந்த சித்திகள் எல்லாம் இடையூறுகள் என்று மேலோர்கள் சொல்கிறார்கள். ஏன் எனில் இவைகள் எல்லாம் பகவானை அடைவதை தாமதப்படுத்துகிறது.
உத்தவர் கேட்டதற்கு இணங்க, பகவானும் தனது விபூதிகளை உத்தவருக்கு கூறத் தொடங்கினார்.
வரிசை 233:
* பரமாணுக்களைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், கோடிக்கணக்கான அண்டங்களை படைக்கும் என் பெருமைகளை (விபூதிகளை) ஒருக்காலும் கணக்கிடவே முடியாது.
[[வர்ணங்கள்]] விராட் புருசனின் முகம், கை, தொடை மற்றும் கால்களிலிருந்து முறையே [[அந்தணர்|வேதியர்]], [[சத்திரியர்]], [[வைசியர்|வணிகர்]] மற்றும் [[சூத்திரர்]] எனும் நால்வகை வர்ணத்தினர் தோன்றினர்.
வரிசை 240:
'''நால்வகை வர்ண இயல்புகள் மற்றும் கடமைகளும்'''
[[அந்தணர்|வேதியர்]] இயல்புகள்:- புலனடக்கம், மன அடக்கம், [[விவேகம் (வேதாந்தம்)|விவேகம்]], [[வைராக்கியம்]], [[தவம்]], பொறுமை, நேர்மை, பக்தி, இரக்கம், அறிவு, [[தானம்]] பெறுதல், சத்தியம், தர்ம நெறிப்படி வாழ்தல் இவையே வேதியர் இயல்புகள்.
வேதியர் தர்மங்கள் (கடமைகள்) :- வேள்வி செய்தல்-செய்வித்தல், வேதம் ஓதுதல்-ஓதுவித்தல், தானம் பெறுதல். தவம் இயற்றுதல், மக்களுக்கும், நாட்டை ஆளும் அரசனுக்கும் தர்ம-கர்ம-மோட்ச விசயங்களில் அறிவுரை கூறுதல். வேதியர்கள், மீள முடியாத துன்ப காலங்கள் நீங்கும் வரை, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத பட்டு நூல் கொண்டு நெசவுத்தொழில் செய்தல் மற்றும் வைசியர்களின் (வணிகம் செய்தல்) தொழிலை மேற்கொள்ளலாம். பகை நாட்டவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, உயிருக்கு ஆபத்தான காலங்களில் வாள் ஏந்தி சத்திரியர் தர்மத்தை பின்பற்றி உயிர் வாழலாம். ஆனால் எத்தகைய துயரக் காலத்திலும் பிறரிடம் கைகட்டி பணி செய்து வாழக் கூடாது.
[[சத்திரியர்]] இயல்புகள் :- ஒளி மிக்க முகம், உடல் வலிமை, வீரம், துயரங்களைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை, கொடைத்திறன், விடாமுயற்சி, தளராத மன உறுதி, மக்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமைத் திறன்.
சத்திரியர் தர்மங்கள் (கடமைகள்) :- மக்களை துயரங்களிலிருந்து காக்க வேண்டும். சத்திரியன் தனது தர்மங்களை கடைப் பிடிக்க முடியாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, பஞ்சுநூல் கொண்டு நெசவுத்தொழில் மேற்கொள்தல், வைசிய தர்மத்தை கைக்கொண்டு வாணிபம் செய்யலாம் அல்லது வேதியர்களுக்குரிய வேலைகளைச் செய்யலாம். மேலும் வேட்டையாடி உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போதும் பிறரிடம் கைக்கட்டி வேலை செய்து பிழைக்கக் கூடாது.
[[வைசியர்]] வர்ண இயல்புகள் :-வாணிபம் செய்தல், வள்ளல் தன்மை, ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடையாதிருப்பது.
வைசிய வர்ண தர்மங்கள் (கடமைகள்) :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் வேளாளர்களின் கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.
[[வேளாளர்]]கள், மூன்று வர்ணத்தவர்களுக்கும், பசு மற்றும் தேவர்களுக்கு வஞ்சனையின்றி பணி செய்வதின் மூலம் கிடைக்கும் பொருளில் மன நிறைவடைதல்.
மனம்-மொழி-மெய்களால் பிறர்க்குத் தீங்கு செய்யாமை, [[வாய்மை]]யில் உறுதியுடன் நிற்பது, திருடாமை, விருப்பு-வெறுப்பு, பேராசை, பழி தீர்க்கும் உணர்வு, கருமித்தனம் இன்றி வாழ்தல்.
[[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரி]] குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருவிடம் குற்றம் குறைகள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வ வடிவானவர். [[குரு]]வின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, [[குருகுலம்|குருகுலக் கல்வி]] முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு [[கிரகஸ்தம்|கிரகஸ்த ஆசிரமத்திற்கு]] (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.
[[கிரகஸ்தம்|இல்லற வாழ்வில்]] ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் [[யக்ஞம்|பஞ்ச மகாயக்ஞங்கள்]] செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. [[யக்ஞம்]] ஐந்து வகைப்படும்.
வரிசை 283:
உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் - எனது ” (அகங்காரம் - மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு [[வனப் பிரஸ்தம்|வனப் பிரஸ்த ஆசிரம]] (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
[[வனப் பிரஸ்தம்|வானப்பிரஸ்த ஆசிரமவாசிகளின்]] முதன்மையான கடமைகள் தர்மம், தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்த காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்யம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வானப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் [[ஈஸ்வரன்|இறைவனை]] அடைவான்.
கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்களும் கூட துயரத்தை தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள்,உடமைகள், உறவினர்கள் மற்றும் வைதீக கர்மங்களை துறந்து [[சந்நியாசம்|சந்நியாச]] தர்மத்தை ஏற்க வேண்டும். [[துறவி]] கௌபீனம் (கோவனம்) அணிந்து கொண்டு, கமண்டலம், தண்டம் கையில் வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேச வேண்டும். மௌனம் வாக்கின் தண்டம்; பலனில் பற்றுள்ள செயல்களை செய்யாமல் இருப்பது, உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம்: இந்த மூன்று தண்டங்களை (த்ரி தண்டி) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியை சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான். நான்கு [[வர்ணம்|வர்ணத்தவர்களின்]] ஏழு வீடுகளில் மட்டுமே சமைத்த உணவை பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். துறவிக்கு, உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதே போல், நல்ல உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைய மாட்டான்.
வரிசை 301:
சந்நியாசி தன்னுடைய தர்மங்களை கடைப்பிடிப்பதன் மூலம் [[அந்தக்கரணம்]] (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விஞ்ஞானம்) பெற்று இறுதியில் [[பிரம்மம்|பிரம்மத்தை]] அடைகிறான்.
உத்தவரே, இல்லற ஆசிரமத்தில் மனநிறைவு அடைந்தவன், தன் மனைவியுடன் அல்லது தனியாக, மூன்றாம் ஆசிரமமான [[வனப் பிரஸ்தம்|வனப் பிரஸ்த ஆசிரமத்தை]] கடை பிடிக்க, காட்டிற்கு செல்லாம். காட்டில் கிடைக்கும் கிழங்கு-காய்கனிகள் உண்டு, மரவுரி, இலைகள், மான்தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, முடி, நகம், மீசை, தாடிகளை மழித்துக் கொள்ளாது, தவ வாழ்வு வாழவேண்டும்.
வரிசை 310:
கர்மபலனில் பற்றுக் கொண்டு கர்மாக்களைச் செய்பவனுக்கு சுவர்க்கம் கிடைப்பினும் கூட அது நரகம் போல் துக்கத்தை தருவன என்ற பெரும் உண்மையை உணர்ந்து நிறைவான வைராக்கியம் பெற்று, [[சந்நியாசம்|சந்நியாச ஆசிரமத்தை]] ஏற்க வேண்டும்.
[[சந்நியாசம்|சந்நியாசி]] கோவனத்தை ஆடையாக கொண்டு, கையில் கமண்டலம் மற்றும் தண்டு ஏந்தி அல்லது ஏந்தாமலும் இருக்கலாம். மௌனம் வாக்கின் தண்டம், பலனில் கர்மாக்களை விடுவது, உடலின் தண்ட்ம், பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம், இந்த மூன்று தண்டங்களையும் சுமக்காதவன், வெறும் மூங்கில் தடியை சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான்.
வரிசை 317:
[[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானத்தில்]] நிலை பெற்ற சந்நியாசி (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், [[வீடுபேறு|மோட்சத்தில்]] விருப்பம் உள்ளவன், வேறு எதிலும் பற்று இல்லாதவன், [[வர்ணாசிரம தர்மம்|ஆசிரம நியமங்களுக்கு]] கட்டுப்பட்டவன் அல்ல. தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட விதிமுறைகளைக் கடந்து சுதந்திரமாக உலகை வலம் வருவான். வேதத்தில் கூறப்பட்ட கர்ம காண்ட விளக்கத்தில் ஈடுபடமாட்டான்.
உத்தவரே இனி [[வைராக்கியம் (வேதாந்தம்)|வைராக்கியம்]] அடைந்தவர்களைப் பற்றி கூறப்போகிறேன். மகிழ்ச்சியைத் தரும் பொறிநுகர் பொருட்கள், இறுதியில், துன்பத்திற்குகே காரணம் என்பதை உறுதியாக உணர்ந்து பொறிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள வைராகி, பிரம்மநிஷ்டராக, [[குரு]]வை அடைந்து, குருவிடம் பக்தி மற்றும் நம்பிக்கை வைத்து, தனக்கு [[ஆத்ம ஞானம்|பிரம்ம ஞானம்]] அடையும் வரை, [[குரு]]வை இறைவனாக உணர்ந்து பணிவிடைகள் செய்ய வேண்டும்.
வரிசை 326:
இவ்விதம் தங்களுக்குரிய [[ஆசிரம முறை|ஆசிரமங்களை]] கடைப்பிடிப்பவர்களின் உள்மனம் தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று விரைவில் [[பிரம்மம்|இறைவனை]] அடைகிறார்கள்.
உத்தவரே, [[உபநிடதம்|உபநிடதங்கள்]] முதலிய வேதாந்த சாத்திரங்களை கேட்டு, [[சிரவணம்]], [[மனனம் (இந்து சமயம்)|மனனம்]], [[நிதித்யாசனம்]] மூலம் சாத்திர ஞானமுடைய பிரும்ம நிஷ்டன், யுக்தி மற்றும் அனுமானங்கள் முதலியவற்றின் அடிப்படையில் நேரடியாக [[ஆத்மா]]வை (பிரம்மத்தை) தரிசித்து விட்டவன் ஆவான். அவன் இந்த உலகத்தையும் அதன் நிவிருத்திக்கான சாதனங்களை [[மாயை]] என்று உணர்ந்து, அவைகளை என்னில் ஐக்கியப்படுத்தி, அவைகள் இரண்டுமே என் மேல் ஏற்றி வைக்கப்பட்டவை என்ற ஞானத்தை அடைகிறான்.
வரிசை 368:
குறை-நிறைகளில் பார்வையை செலுத்து குற்றமாகும். இவ்விரண்டு பார்வையையும் கடந்து, தன் சுய ரூபத்தில் நிலைத்து நிற்பதே, சிறந்த குணமாகும்.
ஞான-கர்ம-பக்தி யோகங்கள் தவிர மனிதனின் ஆன்மிக மேம்பாட்டிற்கு வேறு வழிகளே இல்லை.
கர்மாக்களிலும், கர்மபலன்களிலும் விரக்தி அடைந்து, அவற்றை கைவிட்டவர்களே [[ஞான யோகம்|ஞான யோகத்திற்கு]] தகுதியுள்ளவர்கள். மாறாக, கர்மாக்களிலும், கர்மபலனில் ஆசையை விடாதவர்கள், [[கர்ம யோகம்|கர்ம யோகத்திற்கு]] தகுதியானவர்கள்.
வரிசை 396:
பகவானிடத்திலேயே மனதை நிலை நிறுத்தி, விருப்பு-வெறுப்பு அற்றவனாக, எல்லாச் சீவராசிகளை சமமான நோக்கில் பார்த்து, புத்தியைக் கடந்த பரமாத்மா தத்துவத்தை அறிந்தவர்களுக்கு, விதி விலக்குகளால் ஏற்படக்கூடிய புண்ணிய-பாவங்களோடு எந்த சம்பந்தமும் இல்லை.
உத்தவரே, என்னால் விளக்கப்பட்ட [[பக்தி யோகம்]], [[ஞான யோகம்]], [[கர்ம யோகம்]] ஆகியவைகளை விட்டுவிட்டு, புலன்கள் தரும் சிற்றின்பங்களில் ஈடுபடுகிறவர்கள், மீண்டும் மீண்டும் பிறப்பு – இறப்பு எனும் வாழ்க்கை எனும் சக்கரத்தில் சுழன்று கொண்டே இருப்பார்கள்.
வரிசை 420:
ஞான காண்டத்தில் ([[வேதாந்தம்]]), சீவராசிகளும் உலகங்களும் பரமாத்மாவைக் காட்டிலும் வேறானது அல்ல என்று அனைத்து பொருட்களும், பிரம்மத்தின் மேல் ஏற்றி வைத்து, பின்பு அவைகளை நீக்குகிறது. [[பிரபஞ்சம்|பிரபஞ்சமே]] பிரம்ம மயமானது, பிரம்மத்தின் மீது வேற்றுமைகள் கற்பித்து, அவையெல்லாம் மாயை என்று ஒதுக்கி தள்ளிவிட்டு பிரம்மத்திடம் நிலையான அமைதி பெறுகிறது. (மரத்தின் வேரில் உள்ள நீரே மரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும் பரவுதைப் போல், [[ஓம்|ஓங்காரப் பொருளாகிய]] பரப்பிரம்ம்மே, அந்த நாதத்திலிருந்து வெளிப்பட்டு எல்லையில்லாமல் விரிந்த வேதத்தின் உட்பொருள் என்பது கருத்து).
தத்துவங்களின் எண்ணிக்கை பலவாறாக கூறப்பட்டிருந்தாலும், 3+9+11+5=28 என இருபத்தி எட்டு தத்துவங்கள் என்பதே சரியாகும்.
வரிசை 449:
எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாத புலன்களைக் கொண்டு, பொருட்களில் இன்பம் துய்க்காதீர்கள். [[ஆத்மா]] பற்றிய அக்ஞானத்திலிருந்து தோன்றும் உலகப்பொருட்களின் பேதங்கள், வெறும் மனப்பிரமை என்று அறிந்து கொள்ள வேண்டும்.
'மிகுந்த மான-அவமானத்திற்கும், துயரங்களுக்கும் உள்ளான மனிதனால் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளமுடியுமா? என்று கேட்ட உத்தவருக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் முடியும் என்கிறார். அதற்கு ஒரு கதையும் சொல்கிறார்.
வரிசை 458:
இந்த உலகத்தில் மனிதனுக்கு யாரும் சுக-துக்கங்களை தருவதில்லை. சுக-துக்கம் என்பதே சித்தத்தின் பிரமை தான். இவ்வுலகமும், அதில் நண்பன்-விரோதி-உதாசீனன் என்ற வேறுபாடுகள் [[அஞ்ஞானம், வேதாந்தம்|அக்ஞானத்தால்]] ஏற்பட்டவை. புத்தியால் மனதை வசப்படுத்தி, எல்லா எண்ணங்களையும் ஒடுக்கி பகவானில் ஆழ்ந்து நிலைத்திருக்க வேண்டும். இது தான் எல்லா யோகங்களின் சாரமான '''பிட்சு கீதை''' ஆகும்.
கபில முனிவர் ஆக்கிய சாங்கிய யோகத்தின் சிறப்புக்களை பகவான், உத்தவருக்கு விளக்குகிறர்.
* [[பிரம்மம்]] இரண்டற்றது. சத்தியமானது; மனமும், சொற்களும் அதனைச் சென்றடைய மாட்டாது. ஆனால் அதே பிரம்மம், [[மாயை]] மற்றும் சீவன் (காண்பவன் – காணப்படுபவன்) என்று இரு கூறுகளாக பிரிந்தது. அவற்றின் ஒன்றின் பெயர், பிரகிருதி; அதுவே உலகத்தில் காரிய-காரண வடிவங்களை ஏற்று நடத்துகிறது. ஞான வடிவான மற்றொரு பொருள், புருஷன் (சீவன்).
வரிசை 474:
* [[ஈஸ்வரன்]] காரண – காரியங்களுக்கு சாட்சியாக மட்டும் இருப்பவன். படைப்பிலிருந்து பிரளயம் வரையிலும், பிரளயத்திலிருந்து படைப்பு வரையிலும் கூறப்பட்ட சாங்கியயோகத்தை அறிந்து கொள்வதால், மனிதனுடைய சந்தேகங்கள் வெட்டித் தள்ளப்படுகின்றது.
* மனிதன் [[சத்துவ குணம்]], [[இராட்சத குணம்]] மற்றும் [[தாமச குணம்|தாமச குணங்களினால்]] ஆனவன்.
* [[சத்துவ குணம்|சத்வகுணத்திலிருந்து]] தோன்றும் இயல்புகள்- மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு, விவேகம், வைராக்கியம், தவம், சத்தியம், தயை (முன்பின் ஆலோசிப்பது), மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சம் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.
வரிசை 485:
* தன் செயல்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செய்வது சாத்வீகமாகும். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும். பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள், அது தாமசமாகும்.
உத்தவரே, என்னை அடைவதற்கான முக்கிய சாதனமான மனித உடலை அடைந்தவன், என்னிடம் உண்மையான பக்தி செலுத்தினால், அவனுடைய அந்தக்கரணத்திலுள்ள பரமானந்த சொரூபியான என்னை அடைந்து விடுவான். பெரும் புகழ் படைத்த மன்னன் [[புரூரவன்|பூரூரவசை]], [[ஊர்வசி (அரம்பையர்)|ஊர்வசி]] பிரிந்து சென்றதால் மனம் கலங்கிப் போனான்.
வரிசை 493:
[[ஆத்ம ஞானம்]] ஏற்பட்டவுடன் மன்னர் புரூரவஸ் என்ற இளநந்தன் உலகத்திடம் பற்று நீங்கிற்று. அவனுடைய பந்த-பாசங்கள் எல்லாம் அழிந்தன. அவர் [[ஆத்ம ஞானி|ஆத்ம ஞானியாக]] பற்று-பாசமில்லாமல் மண்ணுலகில் சுற்றித் திரிந்தார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கிரியா யோகத்தின் வழிபாட்டு முறைகளை, உத்தவர் கேட்டுக் கொண்டபடி விளக்குகிறார்.
வரிசை 511:
பலனில் பற்றில்லாமல், கிரியா யோகத்தினால் என்னை பூசிப்பவன், பக்தியோகத்தை அடைந்து, நிறைவாக என்னையே அடைகிறான்.
உலக விவகார நோக்கில், படைப்பில், புருஷன், பிரகிருதி-பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் என்ற வேற்றுமை தோண்றுகிறது. ஆனால் அந்தராத்மாவில் (உள்மனதில்) பார்க்கும் போது இப்படிப்பட்ட வேற்றுமைகள் கிடையாது. எல்லாம் பரமாத்ம வடிவமே. அதனால், ஒருவனின் சுபாவத்தையும், அதை ஒட்டிப் போகும் நடவடிககைகளையும் பார்த்து யாரையும் இகழவோ, புகழவோ கூடாது. பிறரின் இயல்புகளையும், செயல்களையும் விமர்சனம் செய்ப்வன் ஞானநிஷ்டையிலிருந்து நழுவி விடுகிறான்.
வரிசை 565:
தனித்துவமான இருப்பு இல்லை. வித்தியாசங்கள் காணப்படுகிறது எனில் அது ஆத்மாவை அதிஷ்டானமாகக் கொண்டுதான் காணப்படுகிறது.
அதிக -முயற்சி இல்லாமல் பரமபதத்தை அடையும் எளிய வழியை கூறுங்கள் என்று உத்தவர், ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு பகவான் உபதேசிதார், எந்த செயல் செய்தாலும் அதை என்னுடைய பிரீதிக்காக செய்யவேண்டும்: மனதை என்னிடமே செலுத்தி, என் தர்மத்திலே லயித்து என்னிடம் அனன்ய ''பக்தி'' செலுத்த வேண்டும்.
வரிசை 574:
உத்தவரே! எனது ஆசிரமம் [[பத்ரிநாத் கோயில்|பத்ரியில்]] அருகில் உள்ளது. அங்கு செல்ல கட்டளையிட்டார். பகவான் கூறியபடி [[உத்தவர்]], [[பத்ரிநாத் கோயில்|பதரிகாசிரமத்தில்]] தவ வாழ்க்கையை மேற்கொண்டு, வாழ்நாள் முடிவில் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.
[[யது குலம்|யது குலத்தவர்களின்]] அழிவுக்கு முனிவர்களின் சாபம் இன்னும் ஏழு நாட்களில் நிகழவிருப்பதை அறிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், [[துவாரகை|துவாரகையிலிருந்து]] பெண்டிர், சிறுவர்-சிறுமியர், முதியவர்களை ''சங்கத்துவாரம்'' என்ற இடத்திற்கு அனுப்பிவிட்டு, மற்ற யாதவர்களை, ஓடங்களில் பயணித்து கடலைக் கடந்து பின் ரதங்களில் ஏறி [[பிரபாச பட்டினம்]] எனும் கடற்கரை நகருக்கு செல்ல உத்தரவிட்டார்.
வரிசை 586:
[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணன்]] காலில் அம்படிபட்டு, உயிர் நீக்கும் தருவாயில், தனது தேரோட்டியான ''தாருகன்'' என்பவனை அழைத்து, பிரபாச நகர் கடற்கரையில் யாதவர்கள் மது மயக்கத்தில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடிந்ததையும், பலராமனும், நானும் [[வைகுந்தம்]] செல்ல இருப்பதையும், [[துவாரகை]] நகர் கடலில் மூழ்கப் போவதையும், துவாரகையில் மீதம் உள்ள யாதவர்கள் துவாரகையை விட்டு நீங்கி [[அருச்சுனன்|அருச்சுனனுடன்]] [[இந்திரப்பிரஸ்தம்]] நகருக்கு சென்று விடுங்கள் என துவாரகையில் உள்ளவர்களிடம் கூறிவிடு என்றார். அவ்வாறே துவாரகையில் மீதமிருந்த யாதவர்கள் [[இந்திரப்பிரஸ்தம்]] சென்றனர்.
[[பிரம்மா]]-[[பார்வதி]]-[[சிவன்]]-[[இந்திரன்]], முதலான [[தேவர்கள்]], [[சப்தரிஷிகள்]] , [[பிரஜாபதி]]கள், பித்ருக்கள், [[சித்தர்|சித்தர்கள்]], [[கந்தர்வர்|கந்தர்வர்கள்]]-[[வித்தியாதரர்கள்]]-[[நாகர்கள், புராணம்|நாகர்கள்]]-சாரணர்கள் - [[யட்ச நாடு|யட்சர்கள்]]- [[யட்சினி|யட்சினிகள்]] [[கிண்ணர நாடு|கின்னரர்கள்]]- [[கிம்புருசர்கள்]]-[[அரம்பையர்கள்|அப்சரசுகள்]]- வேதியர்கள் ஆகியோர் பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] [[வைகுந்தம்|வைகுந்தத்திற்கு]] எழுந்தருளுவதை காணும் பேராவலுடன் குவிந்து, பக்தியுடன் பகவான் மீது பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர். பகவான் தன் திருமேனியுடன் [[வைகுந்தம்]] எழுந்தருளினார்.
| |||