எபிரேயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி →வெளி இணைப்புகள்: Hebrew, replaced: ஹீப்ரு → எபிரேய |
No edit summary |
||
வரிசை 68:
பழமைச்சின்னமாக பேச்சு வழக்கொழிந்த மொழியாகக் கருதப்பட்ட எபிரேயம் யூத மதத்தின் புனித மொழியாக மதவழிபாட்டில் இன்றளவும் தொடருகிறது. மேலும் 19 ஆம் நூற்றாண்டின் எபிரேய மீட்பு நடவடிக்கைகளால் உயிர்ப்பெற்றுள்ளது. நவீன எபிரேயம் 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் பாலத்தீனத்தில் ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு இசுரேலில் அரபு மொழியுடன் சேர்த்து எபிரேயம் ஆட்சி மொழியாக்கப்பட்டது. எபிரேயம் யூத விவிலியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அதன் மொழி வழக்கிற்கேற்ப வரலாற்றைக் கொண்டுள்ளது.
இதன் காலம் எருசலேமின் முடியாட்சிக்கும், பாபிலோனிய நாடுகடத்தப்பட்டதற்குமான இடைப்பட்ட காலமான கி.மு. 10 – 6 ஆம் நூற்றாண்டு ஆகும். பண்டைய விவிலிய எபிரேயமானது [[டனாக்|தனாக்]] எனும் (யூத) விவிலியத்திலுள்ள வரிகள் இதனைக் குறிக்கின்றன. பண்டைய விவிலிய எபிரேயத்தில் (பாலியோ எபிரேயம்) சாமாரியர்களின் எழுத்துருக்கள் பெரும்பாலாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
விவிலிய எபிரேயத்தின் காலம் சுமார் கி.மு. 8 – 6 ஆம் நூற்றாண்டு ஆகும். இது பாபிலோனிய நாடுகடத்தப்பட்ட காலத்தைக் குறிக்கிறது. யூத விவிலியம் பெரும்பாலாக இவ்வெபிரேய மொழிநடையிலேயே இயற்றப்பட்டதாலும், இம்மொழிச்சான்றுகள் யூத விவிலியத்தை ஒத்திருப்பதினாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இதன் காலம் கி.மு. 5 – 3 ஆம் நூற்றாண்டு ஆகும். கடை விவிலிய எபிரேயம் பாரசீகர்களின் ஆக்கிரமிப்புடன் தொடர்புடையது. மேலும் பாரசீக எழுத்துருக்கள் எசுரா, நெகேமியா போன்ற யூத விவிலிய நூல்களில் காணப்பட்டன. பண்டைய விவிலியத்தை ஒத்திருந்த போதிலும் அராமை எழுத்து வடிவங்களும், சில அரசு சார்ந்த பயன்பாட்டு சொற்களும் கலந்து பயன்படுத்தப்பட்டன.
இதன் காலம் கி.மு. 3 ஆம் - கி.பி. 1 ஆம் நூற்றாண்டு ஆகும். [[எருசலேம்|எருசலேமில்]] இருந்த யூத கோயில் அழிப்பு, கிரேக்க, உரோமானிய பேரரசுகளின் தழைத்தோங்கிய காலத்துடன் தொடர்புடையது. சாக்கடல் ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களால் இவ்வெபிரேயம் பேசப்பட்டது.
இதன் காலம் கி.பி. 1 முதல் 3 (அ) 4 ஆம் நூற்றாண்டு ஆகும். உரோமானியப்பேரரசின் கடைக்காலமாக இருந்தது. மேலும் இக்கால கட்டத்திலேயே யூத நூல்களான மிசுனா, தோசெஃப்தா, தால்மூத் ஆகியவை இயற்றப்பட்டன.
வரிசை 99:
எபிரேய மொழியின் இலக்கணம் சற்றெ மாறுபட்டு பகுத்தாய்வு செய்து அறியப்படுவதாக உள்ளது. மேலும், வேற்றுமை உருபுகள், முன்-ஒட்டு, சொற்பிணைப்பு, பொருளறிதல் முறைமையில் சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது. இருப்பினும் வினைச்சொல், பெயர்ச்சொல் முதலியன ஒவ்வொரு முறைமையிலும் மாற்றம் கொண்டதாகவே உள்ளது. சான்றாக, "சுமிகுட்" எனப்படும் சொற்றொடர் சார்ந்த நிலையானது பெயர்ச்சொல் வேறுபாட்டில் உட்பிணைப்பு நிலை மொழியின் மரபு சார்ந்ததாகவே உள்ளது. "சுமிகுட்"டில் சுட்டப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் இணைப்புக் குறி கொண்டைவாயாகவே குறிப்பிடப்படுகின்றன.
* நவீன எபிரேயம் 22 எழுத்துக்களைக் கொண்டது.
* வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது.
| |||