சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>அனிதா தமிழாசிரியர் No edit summary |
No edit summary |
||
வரிசை 64:
:வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....</ref>
[[படிமம்:karikala territories.png|thumbnail|left|350px|கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. பொ.ஊ. 120]]
{{Main|கரிகால் சோழன்}}
வரிசை 73:
கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் [[வடக்கிருத்தல்|வடக்கிருந்து]] உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள [[கல்லணை]] இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் [[இமயமலை|இமயம்]] வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.
இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட [[பெருநற்கிள்ளி]],
போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட [[கோப்பெருஞ்சோழன்]], [[கிள்ளிவளவன்|குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]], [[இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி]], குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய [[கோச்செங்கணான்]] ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
== இடைக்காலச் சோழர்கள் ==
[[படிமம்:Raraja detail.png|thumb|left|[[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராசராச சோழன்]] சிலை, [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்]], [[தஞ்சாவூர்]].]]
பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் [[களப்பிரர்]] தமிழ்நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். பொ.ஊ. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், [[அச்சுத களப்பாளன்]] என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த [[உறையூர்|உக்கிரபுரத்தில்]] இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் [[பல்லவர்]]களுக்கும், களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது.
வரிசை 86:
இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கிராந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த [[யாப்பருங்கலக் காரிகை]]யின் ஆசிரியரான [[அமிர்தசாகரர்]] இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.
தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், [[காவிரி]]க்கரைப்பகுதிகளில் குறிப்பாக [[உறையூர்]], [[பழையாறை]] நகரங்களிலிருந்து சோழ நாட்டின் சிலபகுதிகளை மட்டும் ஏறத்தாழ இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை.
வரிசை 100:
* மூன்றாம் கரிகாலன் பொ.ஊ. 530–550
[[படிமம்:Gopuram Corner View of Thanjavur Brihadeeswara Temple..JPG|thumb|தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம்]]
[[படிமம்:Brihadeeswara Temple Entrance Gopurams, Thanjavur.JPG|thumb|தஞ்சைப் பெருவுடையார் கோயில் வாயில்]]
வரிசை 127:
[[படிமம்:Chola Chart.PNG|thumb|left|பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை]]
பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் [[பல்லவர்]]களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த [[பாண்டியர்]]களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது. [[பழையாறை]]யில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், பொ.ஊ. 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த [[முத்தரையர்]]களைத் தோற்கடித்துத் [[தஞ்சாவூர்|தஞ்சையைக்]] கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். [[பாண்டியர்]]களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். அது முதல் பொ.ஊ. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை ஆற்றின்]] தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் பொ.ஊ. 871 இல் இறந்தான்.
விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். பொ.ஊ. 880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் [[பல்லவர்|பல்லவன்]] அபராசிதனுக்கும் இடையே [[திருப்புறம்பியம்]] என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், [[மேலைக் கங்கர்|கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு [[பாண்டியர்|பாண்டியன்]] வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். [[திருப்புறம்பியம் போர்|திருப்புறம்பியப் போர்]] சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற [[பாண்டியர்]]கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். [[பல்லவர்]] மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் [[மேலைக் கங்கர்|கங்கர்]] நாட்டிலும், [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலும்]] பரவியிருந்தது. [[சேர நாடு|சேர நாட்டுடனும்]], இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.
{{History of South Asia}}
பொ.ஊ. 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே ''காளத்தி'' முதல் தெற்கே [[காவிரி]] வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு [[மதுரை]]யைக் கைப்பற்றிக் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான்.உலக வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான்<ref>தமிழக வரலாறும் பண்பாடும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், பக். 145.</ref>. இவன் காலத்தில் [[குடவோலை]] முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.
பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராசாதித்தர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்டராதித்தன் பொ.ஊ. 950-இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்றும் பல உள்ளன. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான்.
சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், [[பாண்டியர்]]களையும் வெற்றி கொண்டான். எனினும், பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் [[ஆதித்த கரிகாலன்]] பகைவர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. [[ஆதித்த கரிகாலன்|இரண்டாம் ஆதித்தன்]] ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.<br />
அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.
[[படிமம்:Chola coin with legend "Uttama".png|thumb|right|உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.]]
பொ.ஊ. 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னதாகவே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த [[தமிழ்]] எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய [[நாணயம்]] இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான [[இராசராச சோழன்]] மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன.
இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. [[சேரர்]], [[பாண்டியர்]], சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து [[உதகை]], விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய [[இலங்கை]] மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான்.
[[படிமம்:chola map.png|thumb|right|சோழப் பேரரசின் எல்லைகள். பொ.ஊ. 1014]]
சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் ([[மைசூர்|மைசூரின்]] தென்பகுதியும் [[சேலம்]] மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு [[மேலைக் கங்கர்|கங்கர்கள்]] இந்நாட்டை ஆண்டனர். [[மைசூர்]] நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் [[பல்லவர்]]களின் வம்சத்தவராகிய [[நுளம்பர்]]களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான [[முதலாம் ராஜேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] ஆவான். [[சாளுக்கியர்|சாளுக்கிய]] நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். [[துளு]]வர், [[கொங்கணி|கொங்கணர்]], [[தெலுங்கர்]], இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே [[வங்காள தேசம்|வங்காளம்]] வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு [[இலங்கை]]யை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய [[ஈழம்]] 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது.
இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ''ராசராச பெரும்பள்ளி''. [[இராஜராஜ சோழன்|ராசராசசோழ]] மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களைத் [[தஞ்சைப் பெரிய கோவில்|தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு]] நிவந்தமாக அளித்ததைக் [[கல்வெட்டு]]கள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, [[இந்தியா]]வின் மேற்குக் கரைக்கு அப்பால், [[அரபிக்கடல்|அரபிக்கடலிலுள்ள]] முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் [[இலட்சத்தீவுகள்]] மீதும், கிழக்குப் பகுதியில் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசியப்]] பகுதியிலுள்ள [[கடாரம்|கடாரத்தின்]] மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய [[செப்பேடுகள்|செப்பேடு]] ஒன்று தெரிவிக்கிறது.
இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் [[இராசேந்திர சோழன்]]. இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய [[தமிழ்நாடு]], [[ஆந்திரா|ஆந்திர]], [[கேரளா|கேரள]] மாநிலங்களையும் [[மைசூர்]] நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.
வரிசை 175:
== பின்வந்த சோழ மன்னர்கள் ==
[[இராசேந்திர சோழன்|இராசேந்திர]] சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான [[ஈழம்]], பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் ''கொப்பம்'' என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.
இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வரிசை 187:
[[படிமம்:kulothunga territories cl.png|thumb|குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு பொ.ஊ. 1120]]
[[இராசராச சோழன்|இராசராசசோழனின்]] தமக்கையான [[குந்தவை]]யின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் [[கடாரம்|கடாரத்துக்குச்]] சோழப்படை சென்ற போதும் [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்கன்]] அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் [[முதலாம் குலோத்துங்க சோழன்]].
வரிசை 194:
குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். [[இராசராச சோழன்]] கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.
[[இராசராச சோழன்|முதலாம் இராசராசன்]] மற்றும் [[இராசேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] காலங்களிலேயே [[சீனா|சீன]] நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்கனும்]] தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான்<ref>தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம்.பக்.167</ref> மேலும் [[கடாரம்]], [[சுமத்திரா]] போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான்.
குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே ''சுங்கம் தவிர்த்த சோழன்'' என அழைக்கப்பட்டான்.<ref>விக்கிரம சோழன் உலா,ஒட்டக்கூத்தர்.</ref> இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. ''நிலமளந்த செயல்'' இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் [[செயங்கொண்டார்]]. இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து [[கலிங்கத்துப் பரணி]] இயற்றினார்.
முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே [[பாண்டியர்கள்]] வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.
வரிசை 285:
சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, [[இலக்கியம்]], [[இசை]], [[சிற்பம்]]. [[நாடகம்]], ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போலச் சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.
சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
வரிசை 295:
== சமூகநிலை ==
சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் [[சாதி]]யினரும், பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். சாளரம் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.<ref>க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக்கம் 19.</ref>
பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.<ref>"The picture which emerges suggests that the brahmans were in control of the powerful positions and that the non-brahmans were more or less working for them. The brahmans naturally emphasized caste-loyalties and caste-assemblies, since this would prevent a wider basis of unity developing amongst the non-brahmans. - Romila Thapar. (1960). ''A History of India''. London: Penguin Books.</ref>
சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.<ref>சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726</ref>
கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. [[இராஜராஜ சோழன்|இராசராச பேரரசனின்]] தாயாரும் [[சுந்தர சோழன்|சுந்தர சோழனின்]] மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது. அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் பற்றிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.<ref>சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727</ref>
சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தனர். தாம் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டனர். இவர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டன. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலியவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி (அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, பொ.ஊ. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை [[குலோத்துங்க சோழன் III|மூன்றாம் குலோத்துங்கன்]] கல்வெட்டு தெரிவிக்கிறது.
சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு"<ref>{{cite conference
| first = தாவுத்
வரிசை 331:
Romila Thapar. (1960). ''A History of India''. London: Penguin Books.</ref>
சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, பொ.ஊ. 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. [[சுமத்ரா]]த் தீவில் கண்டெடுக்கப்பட்ட [[தமிழ்]] சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய [[நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர்]] பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது.
வரிசை 340:
பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், [[வெண்கலச் சிலை]]களும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள [[இந்து]]ப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.
சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், ''உள்ளாலை'', ''புறம்பாடி'' என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், [[இராசராச சோழன்|முதலாம் இராசராசனுக்கு]] முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான [[இராசேந்திர சோழன்]] காலத்திலும், [[தஞ்சைப் பெரிய கோயில்]] மற்றும் [[கங்கை கொண்ட சோழபுரம்]] கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. பொ.ஊ. 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.
[[படிமம்:Entrance of Airavatesvara Temple.jpg|thumb|[[தாராசுரம்]] [[ஐராவதேசுவரர் கோயில்]], பொ.ஊ. 1200]]
வரிசை 346:
சோழர் காலம், கல்லாலும் [[வெண்கலம்|வெண்கலத்தாலும்]] ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, [[சிவன்|சிவனின்]] பல்வேறு தோற்றங்கள், [[விட்டுணு]], மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் [[சிற்பநூல்கள்]]களிலும், [[ஆகமங்கள்|ஆகமங்களிலும்]] சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான [[நடராசர்|நடராசப்]] பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.
சோழர் காலத்தில் கல்வி சமசுகிருத மொழியில் [[பிராமணர்]]களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள்.<ref>Romila Thapar. (1960). ''A History of India''. London: Penguin Books. பக்கங்கள் 212-213.</ref> இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.<ref>Romila Thapar. (1960). ''A History of India''. London: Penguin Books. பக்கம் 213.</ref>
சோழர் காலத்தில் [[தமிழ்]] சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், [[வணிகம்]], [[இலக்கியம்]], [[சமயம்]] என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".
சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.<ref>"Had Tamil been encouraged to a greater extent in the centres of higher education it would have assisted in producing a far more vigoruous intellectual tradition than was actually in existence in these centres." – Romila Thapar. (1960). ''A History of India''. London: Penguin Books. பக்கம் 213.</ref> சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. [[இந்து]] சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. [[இராசராச சோழன்]] காலத்தில் [[தேவாரம்]] முதலிய நூல்கள் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]களாகத் தொகுக்கப்பட்டன. [[சமணம்|சமண]], [[புத்தம்|பௌத்த]] நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. [[திருத்தக்க தேவர்]] என்பவரால் இயற்றப்பட்ட [[சீவக சிந்தாமணி|சீவகசிந்தாமணியும்]], தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட [[சூளாமணி]]யும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.
வரிசை 359:
சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. [[மெய்கண்டார்]] [[சிவஞானபோதம்]] என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய [[திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்)|திருவுந்தியார்]], [[அருள்நந்தி சிவாச்சாரியார்]] எழுதிய [[சிவஞான சித்தியார்]], [[உமாபதி சிவாச்சாரியார்|உமாபதிசிவாச்சாரியாரின்]] எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது.
சோழர் [[இந்து]] சமயத்தை, சிறப்பாகச் [[சைவம்|சைவ]] சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். [[சைவம்]], [[வைணவம்]] என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக [[இராமானுசர்]] தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.
| |||