பா. விசாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
'''பா. விசாலம்''' [[தமிழகம்|தமிழகத்தில்]] வசிக்கும் ஓர் தமிழ் எழுத்தாளர். இவர் எழுதிய ”மெல்லக் கனவாய் பழங்கதையாய்” என்ற தமிழ்ப் புதினத்தை எழுதியுள்ளார். இது ஆக்சுபோர்டு பதிப்பகத்தால் பேடிங் டிரீம்சு ஓல்டு டேசு என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
 
==வெளி இணைப்புகள்==
*http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60807103&edition_id=20080710&format=html {{Webarchive|url=https://web.archive.org/web/20160306041331/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60807103&edition_id=20080710&format=html |date=2016-03-06 }}
 
{{நபர்-குறுங்கட்டுரை}}
பா. விசாலம் (1932-2022) தமிழக எழுத்தாளர். பொதுவுடைமை இயக்கம் சார்ந்து செயல்பட்டார். கணவருடன் இணைந்து பொதுவுடைமைக் கட்சியில் களப்பணியாளராகச் செயல்பட்டார். சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல்களை எழுதினார்.
== பிறப்பு, கல்வி ==
பா. விசாலம், 1932-ல், வங்காளத்தின் பர்த்மான் மாவட்டம் அஸன்ஸாலில் உள்ள குல்டி என்ற கிராமத்தில் பெற்றோருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். நாகர்கோவிலில் வளர்ந்தார். நாகர்கோவிலில் பள்ளிக் கல்வி பயின்றார்.
== தனி வாழ்க்கை ==
பா.விசாலம் குமரிமாவட்டம் பத்மநாபபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். ’கில்ட் ஆஃப் செர்வீஸில் (Guild Of Service) அலுவலராகப் பணிபுரிந்தார். கணவர், மைக்கேல் ராஜ். மகள் சித்ரா.
 
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
== சிறுகதைகள் ==
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
பா. விசாலத்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் மூலம் இலக்கிய நூல்கள் அறிமுகமாயின. பள்ளித் தோழர் [[சுந்தர ராமசாமி]]யின் ஊக்குவிப்பால் விசாலத்தின் முதல் சிறுகதை ‘நோய்’ [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில், 1960-ல் வெளியானது. தொடர்ந்து சில சிறுகதைகளை எழுதினார். கணையாழி, முன்றில், [[சதங்கை]], காவ்யா போன்ற இதழ்களில் சிறுகதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள் எழுதினார். பா.விசாலத்தின் சிறுகதைகள் ’அவள் அதுவானால்’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளன.
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
 
==நாவல்கள் ==
பா.விசாலம் தனது வாழ்க்கை அனுபவங்களையும், பொதுவுடைமை இயக்க வாழ்வையும் பின்புலமாக வைத்து 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்..' என்ற தனது முதல் நாவலை, 1994-ல், தனது அறுபதாம் வயதில் வெளியிட்டார். இந்நாவல் மலையாளத்திலும், 'Fading Dreams, Old Tales' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. உண்மை ஒளிர்கவென்று பாடவோ அவருடைய இரண்டாவது நாவல்.
== அரசியல் ==
பா. விசாலம் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் 1952-ல் தன்னை இணைத்துக் கொண்டார். சுற்றறிக்கைகள் தயார் செய்வது, நகல்கள் எடுப்பது, கூட்டநடவடிக்கைகளை குறிப்பெடுப்பது போன்ற கட்சியின் அலுவலகப் பணிகளில் ஈடுபட்டார். பின் பல போராட்டங்களில் கலந்துகொண்டார். பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் [[ப. ஜீவானந்தம்|ப.ஜீவானந்தம்]], பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், வி.பி.சிந்தன், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றினார்.
 
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் இணைந்தும், தனியாகவும் இயக்கப்பணிகளை முன்னெடுத்தார். களப்பணியாளராகச் செயல்பட்டார். கட்சி பொதுக்கூட்டங்களிலும் விவசாய சங்கக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.1973-ல் இலங்கை, கொழும்பில் நடந்த பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாகப் பிரதிநிதியாகப் பங்கேற்றார். கிழக்கு பெர்லினில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். கட்சி இரண்டாகப் பிரிந்தபோது கட்சியிலிருந்து விலகினார் என்றாலும் இறுதி வரை பொதுவுடைமை இயக்க ஆதரவாளராகவே செயல்பட்டார்.
== நாடக வாழ்க்கை ==
பா. விசாலம், 'தலைக்கோல்' என்ற நாடகக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். நாடகங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்.
== விருதுகள் ==
* புதுவை அரசின் கம்பர் விருது - 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்...' நாவலுக்காக.
* தி. ஜானகிராமன்நினைவு குறுநாவல் போட்டிப் பரிசு - ‘'சாணாங்கி மண்டபம்’ குறுநாவலுக்காக.
== மறைவு ==
கணவர் மைக்கேல் ராஜ் மறைவுக்குப்பின் மகள் சித்ராவுடன் புதுச்சேரியில் வசித்து வந்த பா. விசாலம், பிப்ரவரி 14, 2022-ல், தனது 89-ம் வயதில் காலமானார்.
== இலக்கிய இடம் ==
பா. விசாலத்தின் நாவல்கள் சுய சரிதைத் தன்மை கொண்டனவாய், லட்சியத்தன்மை கொண்ட பெண்ணின் கதையாய் அமைந்தன. அரசியல் சார்ந்த பெண் படைப்பு என்ற வகையில் அவை முக்கியமானவையாக மதிப்பிடப்படுகின்றன.
 
விசாலத்தின் நாவல்கள் குறித்து [[அம்பை]], “தற்கால சரித்திரத்தின் மனித வாழ்க்கையையும் , அதில் தங்களுக்கான சரித்திரத்தை எழுதும் பெண்கள் பற்றியும் இரு மகத்தான படைப்புகளைப் படைத்திருக்கிறார் விசாலம்” என்கிறார்.
== நூல்கள் ==
* அவள் அதுவானால் - சிறுகதைத் தொகுப்பு
* மெல்லக் கனவாய் பழங்கதையாய்... (நாவல்)
* உண்மை ஒளிர்கவென்று பாடவோ... (நாவல்)
== உசாத்துணை ==
* [https://books.kalachuvadu.com/kcbooks/AuthorDetailView/71 பா. விசாலம்: எழுத்தாளர் குறிப்பு: காலச்சுவடு]
* [https://premil1.blogspot.com/2016/04/blog-post_93.html பா. விசாலம் ஓர் உரையாடல்]
* [http://tamilonline.com/thendral/article.aspx?aid=11379 எழுத்தாளர் பா. விசாலம்: தென்றல் இதழ் கட்டுரை]
* [https://kungumamthozhi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/ பா. விசாலம் சிறுகதை: அடிமைகள்: குங்குமம் தோழி]
* [https://www.storytel.com/sg/en/books/mella-kanavaai-pazhankathayai-1110184 மெல்லக் கனவாய் பழங்கதையாய்...:பா. விசாலம் நாவல் ஒலி வடிவம்: ஸ்டோரி டெல்]
* [https://www.maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=41&Itemid=9 உண்மை ஒளிர்கவென்று பாடவோ: பா. விசாலம் நாவல் விமர்சனம்: மா. அரங்கநாதன்]
* [https://ramasamywritings.blogspot.com/2022/02/blog-post_56.html?m=0 பா. விசாலம்: நினைவுக் குறிப்பு: அ. ராமசாமி]
* [https://old.thinnai.com/archives/60708305 பா.விசாலத்தின் படைப்புப் பயணம்: க்ருஷாங்கினி: திண்ணை இணைய இதழ்]
* [https://www.hindutamil.in/news/tamilnadu/767653-author-p-visalam.html பா. விசாலம் அஞ்சலிக் குறிப்பு: இந்து தமிழ் திசை]
* [https://marinabooks.com/category/%e0%ae%aa%e0%ae%be.%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d?authorid=1888-9136-8219-9756 பா. விசாலம் நூல்கள்: பனுவல் தளம்]
* [https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56/7098-2022-02-15-15-06-49 பா.விசாலம் அஞ்சலி அசோக் யோகன்]
"https://tamilar.wiki/w/பா._விசாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது