ஆள்கூறுகள்: 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08

அரியலூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அரியலூர்
—  நகரம்  —
அரியலூர்
அமைவிடம்: அரியலூர், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர்
முதலமைச்சர்
நகராட்சித் தலைவர் முருகேசன்
ஆணையர்
சட்டமன்றத் தொகுதி அரியலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சின்னப்பா (திமுக (மதிமுக))

மக்கள் தொகை

அடர்த்தி

27,822 (2001)

3,651/km2 (9,456/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi)

249 மீட்டர்கள் (817 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/ariyalur


அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.

பெயர்க்காரணம்

விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.

தனித்துவம்

அரியலூரில் ஜெயங்கொண்ட சோழபுரம், செந்துறை, தா.பழூர் ,திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களும் உடையார்பாளையம் கல்விமாவட்டமும் உள்ளது .இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று .இது 1995 ம்ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துடனும் அதன் பின்னர் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக முந்தைய தி.மு.க. அரசு இதை தனி மாவட்டனாக ஆக்கியது .அதன் பின் வந்த அ.இ.அ.தி.மு.க அரசு இதனை மீண்டும் பெரம்பலூர் வசம் இணைத்தது ,அதன் பின் இப்போது மூன்றாவது முறையாக இது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது .இந்த மாவட்டத்தின் அனைத்து ஊர்களும் காரணப்பெயர் கொண்டு விளங்குவதால் சோழர்கள் கால வரலாறு குறித்த ஆய்விற்கும் ,தொல்பொருள் அய்வுத்துறைக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது .

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. cement city

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


ராஜேந்திர சோழனின் தரைப் படையில் மட்டும் பத்து லட்சம் வீரர்கள் இருந்ததாக நம்பப்படுகின்றது.கிழக்கிலும் மேற்கிலும் இருந்த வலுவான சாளுக்கிய படையை வெற்றி கொண்ட பின் சோழர்களின் படை நேராக கலிங்கம் (ஒரிசா) வழியாக கங்கை நோக்கி செல்கிறது.

ராஜேந்திர சோழன் அவர்களே எதிரிகளின் படையை தடுக்க கோதாவரி கரையில் முன் நின்றுருக்கிறார். அப்படியே முன்னேறிய சோழர்களின் படை வங்காளத்தில் ஆண்டுகொண்டிருந்த பால அரசாங்கத்தை நோக்கி சென்றது அங்கே "மகிபலா" என்கிற அரசனை எதிர் கொண்டு வெற்றி கொண்டது.

ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டில் கங்கை வரை சென்று போர் புரிந்தது இரண்டு வருடங்களுக்கு குறைந்ததாக இருந்ததாகவும், வடக்கே ஆண்டுகொண்டிருந்த பல அரசாங்கங்கள் சோழர் படைக்கு வீழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த செப்பேட்டில் ரணசுரனின் படைகளை வென்று தர்மபாலா என்ற இடத்தை கைப்பற்றி, அங்கிருந்து கங்கை சென்று தோற்ற அரசர்களை வைத்தே கங்கை நீரை சோழ தேசம் வரை கொண்டு வர செய்திருக்கிறார்கள். அப்படி வெற்றி கொண்டதன் அடையாளமாய் உருவானது தான் இந்த "கங்கை கொண்ட சோழபுரம்".

"https://tamilar.wiki/w/index.php?title=அரியலூர்&oldid=190060" இலிருந்து மீள்விக்கப்பட்டது